Advertisment

இன்ஜினியரிங் படித்தவர்களும் ஆசிரியர்கள் ஆகலாம் - அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

6 முதல் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கணித ஆசிரியர்களாக அவர்கள் பணியை தொடங்கலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TET exam latest updates : Engineering students can write teacher eligibility test

TET exam latest updates : Engineering students can write teacher eligibility test

TET exam latest updates : தமிழகத்தில் இன்ஜினியரிங் கல்வி முடித்தவர்கள் இனி ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதலாம் என்று அரசாணை பிறப்பித்துள்ளது தமிழக அரசு. இந்த தேர்வில் வெற்றி பெறும் தேர்வர்கள் 6 முதல் 8ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு கணித ஆசிரியர் ஆகலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை பி.எட் படிப்பு முடித்தவர்கள் தான் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி ஆசிரியர்களாக பணியாற்றி வ் வருகின்றனர். இளங்கலை மற்றும் அறிவியல் பட்டதாரிகளுக்கு 2 ஆண்டுகள் பி.எட் என்பது மிகவும் எளிமையான ஒன்றாக இருந்தது.

Advertisment

Lok Sabha passed Citizenship (Amendment) Bill: Who said what

பி.எட் படிப்பில் சேர பொறியியல் பட்டதாரிகளுக்கு 20% இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. இருப்பினும் 4 வருடங்கள் பொறியியல் மற்றும் 2 வருடங்கள் பி.எட் என்றால் அதிக நாட்கள் கல்வி கற்பதிலேயே விரையம் ஆகும் என்று பலரும் கருதி பி.எட்டினை தேர்வு செய்யாமல் இருந்தனர். இதனைத் தொடர்ந்து அந்த இட ஒதுக்கீடு 5%-மாக குறைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு சமநிலை அந்தஸ்த்து வழங்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளாது. இனிமேல் இன்ஜினியரிங் முடித்தவர்கள் நேரடியாக டெட் தேர்வு எழுதி ஆசிரியர் பணியில் சேர வழி வகை செய்துள்ளது இந்த அரசாணை.

மேலும் படிக்க : விரைவில் வெளியாகிறது CTET தேர்வு விடைக்குறிப்பு – தேர்வர்களே கவனம்

Tet Exam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment