Advertisment

Exam Results: பத்து, பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் கெத்து காட்டிய திருப்பூர்!

இங்கு 1400-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் இயக்குகின்றன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
SSLC exam, coronavirus, tamil nadu government, sslc public exam date announced

SSLC exam, coronavirus, tamil nadu government, sslc public exam date announced

SSLC Result: தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கின்றன.

Advertisment

இதில் மொத்தம் 95.2 சதவீத மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர். பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த திருப்பூர் மாவட்டம் தான் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விலும் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

அதன்படி முதல் மூன்று மாவட்டங்களாக, திருப்பூர் - 98.53%, ராமநாதபுரம் - 98.48%, நாமக்கல் - 98.45% ஆகிய தேர்ச்சி விழுக்காடுகளைப் பெற்றுள்ளது.

SSLC பொதுத் தேர்வில் எப்போதும் போல மாணவிகளே அதிக தேர்ச்சி விழுக்காடுகளைப் பெற்றிருக்கிறார்கள். ஆம்! மாணவிகள் 97% தேர்ச்சி விகிதமும் மாணவர்கள் 93.3% தேர்ச்சி விகிதமும் பெற்றிருக்கிறார்கள்.

பிளஸ் டூ தேர்வு முடிவுகளைப் பொறுத்தவரை, திருப்பூர் - 95.37%, ஈரோடு - 95.23%, பெரம்பலூர் – 95.15% என்ற வகையில் முதல் மூன்று இடங்களை இந்த மாவட்டங்கள் பிடித்திருந்தன.

Tiruppur district got first place in SSLC & +2 board exams

மொத்தமாக பனிரெண்டாம் வகுப்பில் 91.3 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சியடைந்திருந்தனர். அதில் மாணவிகள் 93.64 விழுக்காடும், மாணவர்கள் 88.57 விழுக்காடும் அடங்குவர்.

பொதுவாக படிப்பில் மாணவர்களை விட மாணவிகள் அதிக கவனத்துடன் இருப்பார்கள். தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற வேண்டும், நினைத்ததைப் படித்து, நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற வேட்கையும் அவர்களிடம் அதிகம்.

மாணவர்கள் எல்லா விஷயத்தையும் போலவே படிப்பு விஷயத்திலும் சற்று அலட்சியமாக இருப்பார்கள். ஒரு மாணவன் கொஞ்சம் படிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கினால், உடன் இருக்கும் மற்ற மாணவர்கள் அவனை கிண்டல் செய்து, கவனத்தை திசை திருப்புவார்கள்.

இது ஒருபுறமிருக்க, சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நாமக்கல் மாவட்டம் தான் பள்ளிக் கல்வியில் சிறந்து விளங்கும். இதனை அங்கிருக்கும் சில தனியார் பள்ளிகள் விளம்பரத்திற்காக பெரிதும் பயன்படுத்திக் கொண்டனர்.

இந்நிலையில் தொழில் நகரமான திருப்பூர் மாவட்டம் இம்முறை பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

பின்னலாடை தொழிலை மையமாக வைத்திருக்கும் இந்நகரம், சரியாக பத்தாண்டுகளுக்கு முன், அதாவது கடந்த 2009-ல் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது.

Tamil Nadu SSLC Result 2019: தமிழகத்தில் 6100 பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி

இங்கு 1400-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் இயக்குகின்றன. குறிப்பாக இந்த பத்தாம் வகுப்பு தேர்வை பொறுத்தவரை, 331 பள்ளிகளை சேர்ந்த 14,409 மாணவர்களும், 14,744 மாணவிகளும் என மொத்தம் 29,153 பேர் பொதுத் தேர்வு எழுதியிருந்தார்கள். இவர்களில் 98.53 சதவீத மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர்.

மாணவர்களின் வெற்றிக்காக உழைத்த திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தி மற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிச்சாமி தனது நன்றியைத் தெரிவித்தார்.

தவிர, கன்னியாகுமரி, விருதுநகர், சிவகங்கை, பெரம்பலூர், மதுரை, தூத்துக்குடி, அரியலூர், திருச்சி, கோவை, உதகை, திருநெல்வேலி, தர்மபுரி, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களின் தேர்ச்சி விகிதமும் பாராட்டும்படியாக உள்ளது. இதில் பெரும்பான்மையானவை கிராமப்புற மாணவர்களை அதிகளவில் கொண்டவைகளாகும்.

தமிழகத்தின் பெருநகரமான சென்னை 94.18 விழுக்காடு தேர்ச்சியுடன் பின் தங்கியிருப்பது ரசிக்கும்படியாக இல்லை. 89.98 சதவீத தேர்ச்சியுடன் கடைசி இடத்தைப் பிடித்திருக்கும் வேலூர் மீது மாவட்ட முதன்மை கல்வி அலுவலரும், ஏனைய ஆசிரியர்களும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். கூடவே இதில் மாணவர்களின் ஒத்துழைப்பும் அவசியமான ஒன்று.

கவனமும் கடின உழைப்பும் இருக்கும் பட்சத்தில் வேலூர் மாவட்ட மாணவர்கள் அடுத்தாண்டு காலரை தூக்கி விடலாம்!

 

Exam Result Sslc Tiruppur
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment