கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் வேலை : ரூ.60,000 வரை சம்பளம்

tncoopsrb job Notification: தலைமை கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் காலியாக உள்ள 300 உதவியாளர்/ இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

By: Updated: January 21, 2020, 04:29:41 PM

tncoopsrb announced 300 assistant junior assistant post: கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு மாநிலம் முழுவதும் செயல் எல்லையாகக் கொண்டு செயல்படும் கீழ்காணும் தலைமை கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளர்/ இளநிலை உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பானை வெளியிடப்பட்டுள்ளது.

தோசை வெறியர்களுக்காகவே ஒரு கடை! சென்னையில் எங்க இருக்குது ‘தோச மாமா’கடை?

தகுதியும், விருப்பமும் உள்ள தேர்வர்களிடமிருந்து  ஆன்லைன் மூலம் இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

01.02.2020 அன்று பிற்பகல் 5.45 மணிவரை விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

காலியிடங்கள் குறித்த முழு விவரம்:  

மொத்த காலி பணியிடங்கள் – 300

300 பணியிடங்களுக்கான வகுப்புவாரி ஒதுக்கீடு:


           

கல்வித்தகுதி:

  1. ஏதேனும் ஒரு பட்டபடிப்பு   மற்றும்
  2. கூட்டுறவுப் பயிற்சி

கீழ்காண்பவை கூட்டுறவுப் பயற்சியாகக் கருதப்படும்:

  • தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தால் நடத்தப்படும் கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் வழங்கப்படும் கூட்டுறவு பயிற்சி (Diploma in Cooperative management )
  • புது டெல்லி, தேசிய கூட்டுறவுப் பயிற்சிக் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள நடேசன் கூட்டுறவு மேலாண்மை நிலையம் மற்றும் மதுரை கூட்டுறவு  மேலாண்மை நிலையம் நடத்தப்படும் உயர் கூட்டுறவுப் பயற்சி (Higher Diploma in Cooperative management)

எழுத்து தேர்வு நடைபெறும் நாள்: 01.03.2020( 10 AM to 1 PM )

வயது வரம்பு:

விண்ணப்பக் கட்டணம் : எழுத்துத் தேர்வுக்கான கட்டணம் ரூ.250

ஆதிதிராவிடர், பழங்குடி வகுப்பினர், அனைத்துப் பிரிவையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள்,  அனைத்துப் பிரிவையும் சார்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

http://www.tncoopsrb.in/  என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணபிக்கலாம்.

மேலும், விவரங்களுக்கு இந்த  இணைப்பை கிளிகள் செய்யவும்

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook

Web Title:Tncoopsrb announced 300 assistant junior assistant post in apex cooperative institution

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X