Advertisment

பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் வெளியீடு!: மதிப்பெண்ணை 'செக்' செய்வது எப்படி?

Tamil nadu polytechnic results 2020 : முதலாம் ஆண்டில் 64,128 மாணவர்களும், 2ம் ஆண்டில் 94,332 மாணவர்களும்  தேர்ச்சி பெற்றுள்ளனர். 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil News Today Live,

தேர்வு முடிவுகள்.

TNDTE Diploma Result 2020 @tndte.gov.in : அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளில் இறுதி ஆண்டு மற்றும் அனைத்து துணை நிலை மாணவர்களை தவிர்த்து, முழு நேர மற்றும் பகுதி நேர டிப்ளமோ படிப்புக்கான 2020 ஏப்ரல் மாத தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

Advertisment

முதலாம் ஆண்டில் 64,128 மாணவர்களும், 2ம் ஆண்டில் 94,332 மாணவர்களும்  தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், அரசு உதவி பெறும் பாலிடெக்னிக்குகள், சுயநிதி பாலிடெக்னிக்குகள் ஆகியவற்றுக்கு தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தேர்வு நடத்துகிறது.

பாலிக்டெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று இணையதளம் மூலம் வெளியிடப்படுகிறது.

 

publive-image

இதுகுறித்து, தொழில்நுட்ப கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரி படிக்கும் மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுகிறது. இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்கள் தவிர மற்றவர்களுக்கு(ரெகுலர்) தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கான தேர்வு முடிவுகளை தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் //www.tndte.gov.in என்ற இணையதள முகவரியில் இன்று முதல் பார்க்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Exam Result
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment