Advertisment

கம்ப்யூட்டர் கோர்ஸ்கள் மீது மோகம்: முதல் முறையாக 2 லட்சத்தை தொட்ட பொறியியல் விண்ணப்பங்கள்

பொறியியல் படிப்புகளுக்கு மீண்டும் மவுசு; இந்த ஆண்டு கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்தோர் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கியுள்ளது.

author-image
WebDesk
New Update
Tamil News, Tamil News Today Latest Updates

Tamil News Headlines LIVE

TNEA 2022 Engineering counselling applications reach 2 lakhs: தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை (TNEA) கவுன்சிலிங்கிற்கான ஆன்லைன் விண்ணப்பங்களின் எண்ணிக்கை முதல் முறையாக இரண்டு லட்சத்தைத் நெருங்கியுள்ளது.

Advertisment

வெள்ளிக்கிழமை (ஜூலை 22) சி.பி.எஸ்.இ பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, இரண்டு நாட்களில் சுமார் 8,000 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சனிக்கிழமை மாலை வரை மொத்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை 1,99,213 ஆக இருந்தது.

இதையும் படியுங்கள்: TNEA Counselling: சென்னையில் பொறியியல் அட்மிஷன் ரவுண்ட் -1 டாப் கல்லூரிகள் எவை?

விண்ணப்பித்தவர்களில், 1.5 லட்சம் பேர் கவுன்சிலிங்கிற்கு பணம் செலுத்தி முடித்துள்ளனர். 1.35 லட்சம் பேர் தங்கள் சான்றிதழ்களை பதிவேற்றியுள்ளனர். பொறியியல் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க ஜூலை 27 கடைசி நாள், என்று TNEA செயலாளர் புருஷோத்தமன் கூறினார்.

கடந்த ஆண்டு 1.74 லட்சம் மாணவர்கள் பதிவு செய்த நிலையில், 1,39,033 விண்ணப்பதாரர்கள் மட்டுமே கட்டணம் செலுத்தி ஆன்லைன் கவுன்சிலிங்கில் பங்கேற்றனர்.

8 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர பெரும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டில், பொறியியல் கலந்தாய்வுக்கு 1.91 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இதுவே அதிகமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு அதனை தாண்டியுள்ளது. பல ஆண்டுகளாக பொறியியல் படிப்புக்கான மோகம் குறைந்து வந்த நிலையில், இந்த ஆண்டு அதிகமான மாணவர்கள் பொறியியல் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்துள்ளனர், டிஜிட்டல் மற்றும் ஐ.டி துறையில் உள்ள எதிர்கால வேலை வாய்ப்புகள் மாணவர்களை தங்கள் படிப்பாக பொறியியலை தேர்வு செய்ய ஈர்க்கிறது. இது அடிப்படை அறிவியல் படிப்புகளில் ஆர்வம் குறைந்து வருவதைக் காட்டுகிறது, என கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி கூறியுள்ளார்.

பொதுவாக B.Pharm போன்ற சுகாதாரப் படிப்புகளுக்கு ஆசைப்படும் NEET ஆர்வலர்களும் தகவல் தொழில்நுட்பத் துறையில் சிறந்த வேலை வாய்ப்புகள் இருப்பதால் இந்த ஆண்டு பொறியியல் படிப்பைத் தொடர விரும்புகின்றனர். மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளில், பொறியாளர்கள் பெருமளவில் தொற்றுநோயால் பாதிக்கப்படவில்லை. ஐ.டி துறையில் பொறியாளர்களுக்கான தேவை மிக அதிகமாக உள்ளது, இது பொறியியல் படிப்புகளை மாணவர்களை ஈர்க்கிறது, என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

இதனால், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அடிப்படை அறிவியல் படிப்புகளில் சேர மாணவர்களிடம் ஆர்வம் குறைந்துள்ளதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Engineering Counselling
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment