Advertisment

TNEA Counseling: முந்தைய தேர்ச்சி விகிதம் நம்பத் தகுந்ததா? கல்லூரிகளை தேர்வு செய்வது எப்படி?

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 343 பொறியியல் கல்லூரிகளில், கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர்-டிசம்பரில் நடத்தப்பட்ட தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி விகிதமானது 80 சதவீகதமாக உள்ளது.

author-image
WebDesk
New Update
TNEA Counseling: முந்தைய தேர்ச்சி விகிதம் நம்பத் தகுந்ததா? கல்லூரிகளை தேர்வு செய்வது எப்படி?

நடப்பு கல்வியாண்டில் தமிழ்நாடு முழுவதும் 440 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் வழியாக பொறியியல் கலந்தாய்வு தொடங்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் வசதிக்காக அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்ற 440 கல்லூரிகள் எவை, பாடப்பிரிவு வாரியாக உள்ள இடங்களின் விவரம் ஆகியவை வெளியிடப்பட்டுள்ளன.

Advertisment

https://www.annauniv.edu/cai என்ற இணையத்தில் ஒவ்வொரு கல்லூரி குறித்த விவரத்தையும் மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம்.

பொதுபிரிவினருக்காகன கலந்தாய்வு வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி தொடங்கவுள்ளது. நான்கு சுற்றுகளாக நடைபெறவுள்ள இந்த கலந்தாய்வில், மாணவர்கள் கட்ஆஃப் மதிப்பெண்கள் தரவரிசை அடிப்படையில் பங்கேற்கவுள்ளனர்.

இந்த சூழலில், சரியான கல்லூரி தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதற்கு பல்வேறு யுத்திகளை மாணவர்கள் பின்பற்றலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். அதில், முக்கியமானது சேர விரும்பும் கல்லூரியில் பயின்ற மாணவர்களின் முந்தைய ஆண்டுகளின் தேர்ச்சி விகிதம் தான்.

இந்த தேடுதலை பொறியியல் சேர்க்கை நடத்தும் தொழில்நுட்ப கல்வி இயக்குநகரம் எளிதாக்கியுள்ளது. பொறியியல் சேர்க்கைக்கான டிஎன்இஏ இணையதளத்தில், கல்லூரியின் மாணவர்கள் தரத்தைப் புள்ளிவிவரத்துடன் வெளியிட்டுள்ளனர்.

அதில், இந்தாண்டு கவுன்சிலிங்கில் பங்கேற்கும் 411 பொறியியல் கல்லூரிகளில் 400 கல்லூரிகளில், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 50 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது.

அதே சமயம், 2019 கல்வியாண்டின் புள்ளிவிவரத்தை கணக்கிட்டால், மொத்த கல்லூரிகளில் ஜஸ்ட் 57 கல்லூரிகளில் தான் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 50 சதவீதத்துக்கும் மேல் உள்ளது.

இதுமட்டுமின்றி, அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 343 பொறியியல் கல்லூரிகளில், கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர்-டிசம்பரில் நடத்தப்பட்ட தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி விகிதமானது 80 சதவீகதமாக உள்ளது.

இதுகுறித்து நிபுணர்களின் கூற்றுப்படி, "கடந்தாண்டில் தேர்வு ஆன்லைனில் நடத்தப்பட்டதால், அதிகளவிலான மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற்றிருக்கலாம். மாணவர்களின் தேர்ச்சி விகிதமும் அதிகரித்திருக்கலாம். எனவே, கல்லூரியின் கடந்தாண்டு புள்ளி விவரத்தைப் பார்க்காமல், தற்போது பயிலும் மாணவர்கள் அல்லது முன்னாள் மாணவர்களிடம் கேட்றியும் பட்சத்தில் தெளிவான தகவலைப் பெறமுடியும். புள்ளி விவரத்தை மட்டும் பார்த்து கல்லூரியை முடிவு செய்வது குழப்பத்தை ஏற்படுத்தும் என கூறுகிறார்கள்.

கல்லூரிகளைத் தேர்வு செய்வதில் கடந்தாண்டு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் முக்கிய பங்கு வகித்த நிலையில், தற்போது அதில் ஏற்பட்டிருக்கும் சிக்கல் மாணவர்களுக்கு புதிய சவாலாக இருந்திடும்.

Tamilnadu Engineering Counselling Tn Engineering Admissions
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment