Advertisment

132 பேர் 200/ 200: பொறியியல் கவுன்சலிங் ரவுண்ட் 1 போட்டி எப்படி இருக்கும்?

TNEA Counselling: பொறியியல் கவுன்சலிங் போறீங்களா? முதல் ரவுண்ட்க்கான போட்டி எப்படி இருக்கும் எனத் தெரிந்துக் கொள்ளுங்கள்

author-image
WebDesk
New Update
பொறியியல் கவுன்சலிங் ரவுண்ட் 2 ஒதுக்கீடு அறிவிப்பு: கல்லூரிகளை ஓ.கே செய்வது எப்படி?

TNEA Engineering counselling first round competition details: தமிழகத்தில் பொறியியல் கவுன்சலிங் தொடங்கியுள்ளது. முதலில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த நிலையில் முதல் ரவுண்ட் கவுன்சலிங் எவ்வளவு போட்டி நிறைந்ததாக இருக்கும்? சாய்ஸ் ஃபில்லிங்கில் என்ன செய்ய வேண்டும்? என்பது உள்ளிட்ட தகவல்களை இப்போது பார்ப்போம்.

Advertisment

முதல் ரவுண்ட் கவுன்சலிங்கில் கட் ஆஃப் மதிப்பெண் 184.50 முதல் 200 வரை உள்ளவர்கள் அழைக்கப்படுவார்கள். இந்த ஆண்டு கலந்தாய்வுக்கு முதல் ரவுண்டில் 14,524 மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள டாப் கல்லூரிகளில் இடம் பிடிக்க இவர்களிடையே கடும் போட்டி இருக்கும்.

இதையும் படியுங்கள்: TNEA கவுன்சலிங்; தமிழகத்தில் உள்ள டாப் பொறியியல் கல்லூரிகளின் கட் ஆஃப் இதுதான்!

இந்தநிலையில், பொறியியல் கவுன்சலிங்கின் முதல் ரவுண்டில் போட்டி எப்படி இருக்கும் என கல்வியாளர் ரமேஷ் பிரபா தனது யூடியூப் பக்கத்தில் விளக்கியுள்ளார். அது குறித்த விவரங்களை இப்போது பார்ப்போம்.

சென்ற வருடத்தைப்போலவே இந்த வருடமும், ஒரே கட் ஆஃப் மதிப்பெண்ணில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இருக்கின்றனர். இதனால் போட்டி கடுமையானதாக இருக்கும். மாணவர்களுக்கு சாய்ஸ் ஃபில்லிங் செய்வதும் கடினமாக இருக்கும்.

எனவே, நமக்கு விருப்பமான கல்லூரியில் விருப்பமான பாடப்பிரிவை ஒதுக்கீடு பெற, முதலில் நம்முடைய கட் ஆஃப் மதிப்பெண்ணில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் ஒவ்வொரு கட் ஆஃப் மதிப்பெண்ணிலும் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை இப்போது பார்ப்போம்.

கட் ஆஃப் மதிப்பெண் மாணவர்களின் எண்ணிக்கை
200 132
199.5 153
199 174
198.5 205
198 274
197.5 302
197 322
196.5 316
196 356
195.5 340
195 345
194.5 374
194 426
193.5 412
193 454
192.5 424
192 546
191.5 456
191 588
190.5 461
190 714
189.5 539
189 530
188.5 508
187.5 541
187 560
186.5 522
185.5 543
185 534

இவ்வாறு ஒரே கட் ஆஃப் மதிப்பெண்ணில் அதிகமானோர் இருப்பதால் சாய்ஸ் ஃபில்லிங் செய்யும்போது கவனமாக செயல்பட வேண்டும். குறைவான சாய்ஸ் கொடுக்க வேண்டும். அதிக அளவில் சாய்ஸ் கொடுங்கள். கவுன்சலிங் ஆனது முன்னர் போல் நேரடியாக இல்லாமல், ஆன்லைனில் நடைபெறுவதால் உங்கள் கட் ஆஃப் மற்றும் அதற்கு மேல் எத்தனை பேர் உள்ளார்கள் என்பதை தெரிந்து அதிகமான சாய்ஸ்களை கொடுங்கள். இல்லை என்றால் உங்களுக்கு இடம் கிடைக்காமல் போக வாய்ப்பு உள்ளது. எனவே கவனமுடன் செயல்படுங்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Engineering Counselling
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment