தமிழ்நாடு பொறியியல் கலந்தாய்வின் இரண்டாம் சுற்றுக்கான தற்காலிக ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், கல்லூரிகளை எப்படி தேர்வு செய்வது, அல்லது வேறு ஒதுக்கீடு யார் கோரலாம், யார் உடனடியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் போன்ற முக்கிய தகவல்களை இப்போது பார்ப்போம்.
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கையின் இரண்டாம் கட்ட கவுன்சலிங்குக்கான சாய்ஸ் ஃபில்லிங் செயல்முறை முடிவடைந்து, தற்காலிக ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், கல்லூரிகளை எப்படி தேர்வு செய்வது, அல்லது வேறு ஒதுக்கீடு யார் கோரலாம், யார் உடனடியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது குறித்து கல்வி ஆலோசகர் அஸ்வின் தனது யூடியூப் பக்கத்தில் விளக்கியுள்ளார். அதனை இப்போது பார்ப்போம்.
இதையும் படியுங்கள்: TNEA Counselling ரவுண்ட் 2; டாப் கல்லூரிகளிலே நிறைய காலியிடங்கள்; இதை கவனியுங்க!
முதல் ரவுண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட டாப் கல்லூரிகளில் எந்த பாடப்பிரிவு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தாலும் சிறந்தது. அதனை அப்படியே ஏற்றுக்கொள்வது நல்லது.
1. எஸ்.எஸ்.என் பொறியியல் கல்லூரி – சென்னை</p>
2. CEG வளாகம் – அண்ணா பல்கலைக்கழகம்
3. எம்.ஐ.டி கேம்பஸ் அண்ணா பல்கலைக்கழகம்
4. CECRI காரைக்குடி
5. சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி
6. தியாகராஜர் பொறியியல் கல்லூரி, மதுரை
7. கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி
8. PSG காலேஜ் ஆஃப் டெக்னாலஜி – கோயம்புத்தூர்
9. ஸ்கூல் ஆஃப் ஆர்க்கிடெக்சர் அண்ட் பிளானிங், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை
10. PSG இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் அப்ளைடு ரிசர்ச், கோயம்புத்தூர்
11. ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, கோயம்புத்தூர்
12. ஆர்.எம்.கே பொறியியல் கல்லூரி, சென்னை
13. ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி, சென்னை
14. லயோலா ICAM பொறியியல் கல்லூரி, சென்னை
15. கோயம்புத்தூர் அரசு தொழில்நுட்ப கல்லூரி
16. ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி, சென்னை
17. குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி, கோயம்புத்தூர்
18. ஏ.சி.டெக் கேம்பஸ், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை
19. ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, சென்னை
20. ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி, கோயம்புத்தூர்
21. அரசு பொறியியல் கல்லூரி, சேலம்
22. எஸ்.ஆர்.எம் ஈஸ்வரி பொறியியல் கல்லூரி, சென்னை
23. அழகப்பா செட்டியார் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, காரைக்குடி
24. அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகம், கோயம்புத்தூர்
25. பண்ணாரி அம்மன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, ஈரோடு</p>
26. ஸ்ரீ ஈஸ்வர் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், கோயம்புத்தூர்
27. அரசு பொறியியல் கல்லூரி
28. ஸ்ரீ சாய்ராம் இன்ஜினியரிங் காலேஜ், சென்னை
29. கொங்கு இன்ஜினியரிங் காலேஜ், ஈரோடு
30. அரசு பொறியியல் கல்லூரி, ஈரோடு
31. செயிண்ட் ஜோசப் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், சென்னை
32. ஆர்.எம்.டி இன்ஜினியரிங் காலேஜ், சென்னை
33. வேலம்மாள் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, மதுரை
34. அரசு பொறியியல் கல்லூரி, பர்கூர்
35. மெப்கோ கல்லூரி, சிவகாசி
36. ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் காலேஜ், கோயம்புத்தூர்
37. கே.பி.ஆர் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கோயம்புத்தூர்
மேற்கண்ட கல்லூரிகளில் மெக்கானிக்கல் பாடப்பிரிவு கிடைத்திருந்தாலும் ஏற்றுக்கொள்வது நல்லது. எனவே கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி, இ.சி.இ, இ.இ.இ, சிவில் போன்ற படிப்புகள் இந்த கல்லூரிகளில் கிடைத்திருந்தால் தயக்கமில்லாமல் தேர்வு செய்யலாம்.
அடுத்த கட்ட கல்லூரிகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பதை விட டாப் கல்லூரியில் மெக்கானிக்கல் படிப்பில் சேர்வது சிறந்தது. எனவே நீங்கள் கொடுத்த சாய்ஸ்களில் சிறந்த கல்லூரிகளில் இடம் கிடைத்திருந்தால் உடனடி ஏற்றுக் கொள்ளுங்கள்.
குறிப்பாக மாணவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை அல்லது அடுத்த ரவுண்ட்டுக்கு செல்கிறேன் என்ற சாய்ஸ்களை கொடுக்க வேண்டும். ஏனென்றால் இதன் பின்னர் டாப் கல்லூரிகளில் இடம் கிடைக்காது.
மேலே குறிப்பிட்ட கல்லூரிகளை தவிர இன்னும் நிறைய கல்லூரிகள் சிறந்த கல்லூரிகளாக இருக்கின்றன. அவற்றையும் நீங்கள் தேர்வு செய்யலாம். ஆனால் இந்தக் கல்லூரிகள் இடம் கிடைத்தால் விட்டுவிட வேண்டும்.
உங்களுக்கு சுத்தமாக விருப்பமில்லாத பாடப்பிரிவு கிடைத்திருந்தால் மட்டும், ஒதுக்கீட்டை மாற்ற முயற்சியுங்கள். அதேநேரம், நீங்கள் அதற்கு முன்னர் உங்கள் சாய்ஸில் சிறந்த கல்லூரிகள் தேர்வு செய்திருந்தால் மட்டும் ஒதுக்கீட்டை மாற்றுங்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil