Advertisment

பொறியியல் அட்மிஷன்: கிடைத்த கல்லூரிகளை பாசிட்டிவா பாருங்க!

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை; முதல் சுற்று கலந்தாய்வு தற்காலிக ஒதுக்கீடு வெளியீடு; கிடைத்த கல்லூரிகளை பாசிட்டிவ் ஆக நினையுங்கள்

author-image
WebDesk
New Update
Tamil News, Tamil News Today Latest Updates

Tamil News Headlines LIVE

பொறியியல் முதல் சுற்று கலந்தாய்வுக்கான தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ள நிலையில், நிறைய மாணவர்கள் குழப்பத்தில் இருந்து வருகின்றனர். அதாவது கிடைத்து இருக்கக் கூடிய ஒதுக்கீடு சரியானதா என்ற குழப்பம் இருந்து வருகிறது.

Advertisment

ஆனால், முதல் ரவுண்டில் கிடைத்திருக்க கூடிய அனைத்து ஒதுக்கீடுகளும் சிறந்ததாகத் தான் இருக்கும் என கல்வியாளர் அஸ்வின் கூறுகிறார். இது தொடர்பாக தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், மாணவர்கள் முதலில் ஒன்றை புரிந்துக் கொள்ள வேண்டும். நீங்கள் கொடுத்த சாய்ஸ்கள் அடிப்படையிலே உங்களுக்கு தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கும். அடுத்ததாக உங்கள் கட் ஆஃப் மதிப்பெண்களுக்கு ஏற்ப தான் உங்களுக்கு இடம் கிடைக்கும். எனவே இதை விட நல்ல கல்லூரி அல்லது பாடப்பிரிவு கிடைக்குமோ என அவசரப்பட வேண்டும். முதலில் உங்கள் கட் ஆஃப் மதிப்பெண்ணையும், நீங்கள் கொடுத்த முன்னுரிமைகளையும் பாருங்கள். பின்னர் அதைவிட உங்களுக்கு நல்ல கல்லூரி கிடைக்கும் என்றால் மட்டும் Upward Movement கொடுங்கள்.

இதையும் படியுங்கள்: CUET- UG ரிசல்ட் வெளியீடு; ஸ்கோர் கார்டு பதிவிறக்கம் செய்வது எப்படி?

முதல் ரவுண்டில் நீங்கள் தமிழகத்தில் உள்ள டாப் கல்லூரிகளைத் தான் தேர்வு செய்து இருப்பீர்கள், அவற்றில் ஏதேனும் ஒன்றில் உங்களுக்கு கிடைத்திருக்கும். எனவே பாசிட்டிவ் ஆக யோசித்து, கல்லூரியில் சேருங்கள். இந்த கல்லூரியை விட இது பெட்டர் என வீண் பேச்சுக்களை விட்டுட்டு, உங்களுக்கு எது சரியாக வரும் என்பதை யோசித்து செயல்படுங்கள். தவறாக செயல்பட்டு வாய்ப்பை இழக்காதீர்கள்.

முதல் ரவுண்டில் கிட்டத்தட்ட 900 பேருக்கு தற்காலிக ஒதுக்கீடு கிடைக்கவில்லை. காரணம் அவர்கள் சாய்ஸ்களை சரியாக கொடுத்திருக்க மாட்டார்கள். அதாவது குறைவாக கொடுத்திருப்பார்கள். அதனால் கிடைக்காமல் போயிருக்கும்.

முதல் ரவுண்டில் சீட் கிடைக்காதாவர்கள் அடுத்த ரவுண்ட்க்கு சென்றால், நீங்கள் 199 கட் ஆஃப் வைத்திருந்தாலும், உங்கள் கட் ஆஃப்  184.5 தான். எனவே சாய்ஸ் கொடுக்கும்போது அதிகமாக கொடுங்கள்.

முதலில் உங்கள் கட் ஆஃப்-க்கு கிடைத்த கல்லூரி நல்ல கல்லூரி என பாசிட்டிவ் ஆக நினைத்து சேருங்கள். இவ்வாறு அஸ்வின் கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Engineering Counselling
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment