Advertisment

பட்டதாரிகளின் கனவு: குரூப் I தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறை இன்று துவக்கம்

tnpsc group 1 notification 2020 : இன்று எந்த நேரத்திலும், குரூப் I தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பட்டதாரிகளின் கனவு: குரூப் I தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறை இன்று துவக்கம்

tnpsc group 1 notification 2020 : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் I தேர்வுக்கான குறுகிய அறிவிப்பை கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி  வெளியிட்டிருந்தது.

Advertisment

டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் : இந்த 5 Current Affairs-யும் படிச்சாச்சா?

அதில், 2020ம் ஆண்டிற்கான குரூப் I முதல்நிலை தேர்வு வரும் ஏப்ரல் மாதம் ஐந்தாம் தேதி நடத்தப்படும் என்றும், இதற்கான விண்ணப்ப செயல்முறை இன்று (ஜன.20) தொடங்கி, அடுத்த மாதம் 19ம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனால், இன்று தேர்வர்கள் குரூப் I தேர்வுக்கான கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு முறை, இடஒதுக்கீடு, விண்ணப்ப கட்டணம்,மொத்த காலியிடங்கள் போன்ற தகவல்களை உள்ளடக்கிய முழு நோட்டிபிகேஷனுக்காக காத்திருக்கின்றனர்.

குரூப் 1 தேர்வை எதிர்நோக்கி உள்ளீர்களா? : டிஎன்பிஎஸ்சியின் முக்கிய அறிவிப்பு

குரூப் I 2019 தேர்வு 139 காலி பணியிடங்களுக்காக நடத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்று எந்த நேரத்திலும், குரூப் I தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை தொடங்கலாம். எனவே, ஆர்வமுள்ள தேர்வர்கள், tnpsc.exams.in , tnpsc.exams.net, tnpsc.gov.in என்ற இணையதளத்தை பார்க்குமாறு கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.

முன்னதாக, பணியாளர் தேர்வாணையம் குரூப்-I தேர்வுக்கான பாடத்திட்டத்தில் சில அதிரடி மாற்றங்களை அறிவித்து இருந்தது.

மேலும் விவரங்களுக்கு

History, Culture, Heritage and Socio–Political Movements in Tamil Nadu (தமிழ் சமூகத்தின் வரலாறு)

Development Administration in Tamil Nadu (தமிழ்நாட்டில் வளர்ச்சிக்கான நிர்வாகம்)

என கூடுதலாக இரண்டு பிரிவுகள் இந்தாண்டு குரூப் – I முதல்நிலைத் தேர்வில் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவித்தது. கூடுதலாக இரண்டு பிரிவுகள் சேர்கப்பட்டுள்ளதால் குரூப் I முதல்நிலைத் தேர்வில் ஆப்டிடியூட் கேள்விகள் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு Current Affairs பாடங்களை தயார் செய்வது எப்படி?

Tnpsc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment