Advertisment

TNPSC Group 2 சிலபஸ் முக்கிய திருத்தம்: 'செக்' செய்வது எப்படி?

குரூப் 2 தேர்வு பாடத்திட்டத்தில் திருக்குறள் நீக்கப்பட்டதற்கு பலரும் அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில், தற்போது திருத்தப்பட்ட பாடத்திட்டத்தை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
TNPSC நிரந்தரப் பதிவுடன் ஆதார் இணைப்பு அவசியம்; தேர்வாணையம் அறிவிப்பு

TNPSC group 2 exam revised syllabus: டிஎன்பிஎஸ்சி.யின் குரூப் 2 தேர்வுக்கான பாடத்திட்டத்தில் இருந்து திருக்குறள் நீக்கப்பட்டது விமர்சனத்திற்குள்ளான நிலையில், மீண்டும் திருக்குறள் சேர்க்கப்பட்டு திருத்தப்பட்ட பாடத்திட்டத்தை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

Advertisment

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), தமிழக அரசில் உள்ள பல்வேறு வகையான பதவிகளுக்கு குரூப் 1, குரூப் 2, குரூப் 4 மற்றும் இதர தேர்வுகளை நடத்தி வருகிறது.  

இந்த பணியிடங்களுக்கான புதிய பாடத்திட்டம் நேற்று முன் தினம் டிஎன்பிஎஸ்சி இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இதனுடன் மாதிரி வினாத்தாள்களும் வெளியிடப்பட்டது. புதிதாக வெளியிடப்பட்ட பாடத்திட்டத்தின் படி குரூப் 2 தேர்வில் திருக்குறள் நீக்கப்பட்டு இருந்தது. கடந்த 2019-ம் ஆண்டு வெளியிடப்பட்ட பாடத்திட்டத்தில் திருக்குறள் பாடத்திட்டம் இடம்பெற்றிருந்தது.

குரூப் 2 தேர்வானது நேர்முத் தேர்வு உள்ள பதவிகள் மற்றும் நேர்முகத் தேர்வு இல்லாத பதவிகள் என இருவிதமான பதவிகளுக்கும் சேர்த்து ஒரே தேர்வாக நடத்தப்படுகிறது.

நேர்முகத் தேர்வு கொண்ட குரூப் 2 தேர்வின் கீழ் நகராட்சி ஆணையர், துணை வணிகவரி அலுவலர், சார் பதிவாளர், சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், உதவி தொழிலாளர் அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர் (ஏஎஸ்ஓ), உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், வருவாய் உதவியாளர், பேரூராட்சி செயல் அலுவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் நிரப்பப்படுகின்றன.

அதே சமயம், நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளில் அரசின் பல்வேறு துறைகளில் உதவியாளர், நேர்முக எழுத்தர், தலைமை செயலகம் மற்றும் டிஎன்பிஎஸ்சியில் தனிப்பட்ட எழுத்தர் போன்ற பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

அரசுப் பணிகளில் மேற்கண்ட முக்கிய பதவிகளை நிரப்பும் குரூப் 2 தேர்வின் பாடத்திட்டத்தில் திருக்குறள் இடம் பெறாதது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. புதிய பாடத்திட்டத்தில் திருக்குறள் நீக்கப்பட்டு இருப்பதற்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதையடுத்து திருக்குறள் சேர்க்கப்பட்டு திருத்தப்பட்ட பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பல்வேறு  போட்டித் தேர்வுகளுக்கான கட்டாயத் தமிழ் மொழி தகுதித் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அதற்கான தேர்வுத்திட்டம், பாடத்திட்டம் ஆகியவை கீழ்க்கண்டவாறு தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டன.



1. கட்டாய தமிழ் மொழித் தகுதித் தேர்வு பாடத் திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் (விரிந்துரைக்கும் வகை)



2. கட்டாயத் தமிழ்மொழித் தகுதித் தேர்வு பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் (கொள்குறிவகை)



3. கட்டாயத் தமிழ்மொழித் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் (கொள்குறிவகை)

இவற்றில் விரிந்துரைக்கும் வகையில் தமிழ் மொழித் தகுதித்தேர்வில் (தொகுதி 2 மற்றும் 2ஏ உட்பட) திருக்குறள் தொடர்பான கட்டுரை வரைதல் எனும் பகுதி சேர்க்கப்பட்டு, திருத்தப்பட்ட பாடத்திட்டம் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.

குரூப் 2 தேர்வுக்கான திருத்தியமைக்கப்பட்ட பாடத்திட்டம் பற்றி தெரிந்துக் கொள்ள https://www.tnpsc.gov.in/static_pdf/syllabus/G2_Revised_Scheme_Syllabus.pdf இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tnpsc Tamil Nadu Jobs Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment