கால்அணா காசுன்னாலும் கவர்ன்மென்ட் காசுனு என்று அரசுப்பணியை லட்சியமாக கொண்டு தேர்வுகளை எழுதிவரும் தேர்வர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.
Advertisment
டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ தேர்வுக்கான அறிவிப்பு, இந்தவாரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிஎன்பிஎஸ்சி நிர்வாகம், சமீபத்தில் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தில் மாற்றங்களை மேற்கொண்டு, புதிய பாடத்திட்ட முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
1300க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான இந்த தேர்வு, விரைவில் நடத்தப்பட உள்ளது.
வயது வரம்பு - 18 வயது பூர்த்தியடைந்தவராக இருத்தல் வேண்டும்
அதிகபட்ச வயது வரம்பு - பொதுப்பிரிவு - 30 வயது
மற்ற பிரிவினருக்கு, அதிகபட்ச வயது வரம்பு இல்லை
கல்வித்தகுதி - பட்டப்படிப்பு
தேர்வுமுறை : எழுத்துத்தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : தேர்வர்கள், டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளத்தில், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.