Advertisment

TNPSC Group 4 ஆன்சர் கீ வெளியீடு; டவுன்லோட் செய்வது எப்படி?

TNPSC Group 4 Answer Key 2022 released on tnpsc.gov.in, steps and direct link to check: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வு; ஆன்சர் கீ வெளியீடு; டவுன்லோட் செய்வது எப்படி?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TNPSC குரூப் 1 தேர்வு; ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்வது எப்படி?

TNPSC Group 4 Answer Key 2022 released How to download: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுகளுக்கான உத்தேச விடை குறிப்புகள் (ஆன்சர் கீ) வெளியிடப்பட்டுள்ளது. இந்த விடை குறிப்புகளை எவ்வாறு டவுன்லோட் செய்வது என்பது குறித்து இப்போது பார்ப்போம்.

Advertisment

தமிழக அரசுத்துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்கள் மற்றும் வி.ஏ.ஓ பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி, மற்றும் ஒரே ஒரு எழுத்து தேர்வு மட்டும் என்பதால், இந்த தேர்வுக்கு இளைஞர்களிடையே அதிக மவுசு இருந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற்றது. இந்த குரூப் 4 தேர்வு 7301 பணியிடங்களுக்கு நடைபெற்றது. இந்த தேர்வுக்கு 22 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில், கிட்டத்தட்ட 18.5 லட்சம் பேர் தேர்வு எழுதியுள்ளனர்.

இதையும் படியுங்கள்: TNPSC குரூப் 1 தேர்வில் 87% பெண்கள் வெற்றி: பிரமிக்க வைத்த மகளிர் சாதனை

ஒட்டுமொத்தமாக குரூப் 4 தேர்வு ஆவரேஜ் என்ற அளவில் இருந்ததாக தேர்வர்களும் நிபுணர்களும் தெரிவிக்கின்றனர். இதனால் இந்த ஆண்டு கட் ஆஃப் மதிப்பெண்கள் ஆனது, முந்தைய ஆண்டுகளை விட குறையும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தநிலையில், தேர்வர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்த தேர்வாணையத்தின் உத்தேச விடைக்குறிப்புகள் தற்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை டவுன்லோட் செய்ய கீழ்கண்ட வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

ஆன்சர் கீ டவுன்லோட் செய்வது எப்படி?

முதலில் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கமான https://www.tnpsc.gov.in/ என்ற பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.

அங்கு அறிவிப்புகள் பகுதியில் ஸ்ரோல் ஆகி வரும் அறிவிப்புகளில் குரூப் 4 தேர்வுக்கான உத்தேச விடைகள் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

பின்னர் நீங்கள் அடுத்தப்பக்கத்திற்கு செல்வீர்கள், அங்கு குரூப் 4 தேர்வு பொதுத் தமிழ் மற்றும் பொது அறிவு (GENERAL TAMIL WITH GENERAL STUDIES (Subject Code 003)) என்று இருப்பதை கிளிக் செய்ய வேண்டும்.

இப்போது உங்களுக்கான விடைக்குறிப்புகள் பதிவிறக்கம் செய்யப்பட்டிருக்கும். அதில் நீங்கள் விடையளித்ததை சரிபார்த்துக் கொள்ளலாம்.

மற்றொரு முறையாக, நேரடியாக விடைக்குறிப்புகளை பதிவிறக்கம் செய்ய இந்த இணையதளப் பக்கத்தைக் கிளிக் செய்யுங்கள். https://www.tnpsc.gov.in/Tentative/Document/CCS4T_2022_OPT.pdf

இந்த விடைகுறிப்புகள் ஏதேனும் சந்தேகங்கள் அல்லது கருத்துக்கள் இருந்தால், நீங்கள் விடைகுறிப்பை சவால் செய்யலாம். அதற்கு https://www.tnpsc.gov.in/english/Tentativesubjects.aspx?key=5a2669fc-f1a6-433d-8eef-f4c1fda22cf9 என்ற இணையதளப் பக்கத்தை கிளிக் செய்ய வேண்டும். அந்த பக்கத்தில் கீ சேலஞ்ச் என்பதை கிளிக் செய்து சவால் செய்ய வேண்டும். விடைக்குறிப்புக்கான சவாலை நீங்கள் 08.08.2022 மாலை 5.45 மணிக்குள் செய்ய வேண்டும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tnpsc Group4
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment