Advertisment

TNPSC group 4 answer key: விடைக் குறிப்புக்கு எதிராக ஆட்சேபனை எழுப்புவது எப்படி?

TNPSC group 4 answer key: தேர்வர்கள் தங்கள் ஆட்சேபனைகளை அதற்கேற்ற ஆவணங்களுடன் இணைக்க வேண்டும், அத்துடன் ஆட்சேபனைக் கட்டணத்தையும் செலுத்த வேண்டும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பட்டதாரிகளின் கனவு: குரூப் I தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறை இன்று துவக்கம்

TNPSC Group 4 answer key: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வுக்கான விடைக் குறிப்பை சமீபத்தில் வெளியிட்டது. தேர்வர்கள் answer key எனப்படும் விடைக் குறிப்பு டிஎன்பிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான tnpsc.gov.in லிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.

Advertisment

செப்டம்பர் 1 அன்று நடத்தப்பட்ட இத்தேர்வில், விடைக் குறிப்புக்கு எதிராக ஆட்சேபனைகளை எழுப்புவதற்கான கடைசி தேதி செப்டம்பர் 17 ஆகும். விடைத் தாளில் முரண்பாடு இருந்தால், அனைத்து வேலை நாட்களிலும் டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தின் கட்டணமில்லா எண்ணான 1800 425 1002 காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை அழைக்கலாம் அல்லது contacttnpsc@gmail.com ஐடிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

TNPSC Group 4 Answer key: டவுன்லோட் செய்வது எப்படி?

tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.

முகப்புப்பக்கத்தில், ஸ்க்ரோலிங் இணைப்பான 'டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 விடைக் குறிப்பு' என்பதை கிளிக் செய்க.

Subject-ல் க்ளிக் செய்யவும்.

லாக் இன் செய்து உள்ளே சென்று, answer key-ஐ பார்க்கலாம்.

TNPSC குரூப் 4 விடைக் குறிப்பு: ஆட்சேபனை எழுப்புவது எப்படி?

தேர்வர்கள் answer keyக்கு எதிராக ஆட்சேபனை எழுப்ப விரும்பினால், 'click here to challenge' என்பதை க்ளிக் செய்ய வேண்டும். முகப்புப்பக்கத்தில், ஸ்க்ரோலிங் இணைப்பான 'டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 விடைக் குறிப்பு' என்பதை கிளிக் செய்த பிறகு, நீங்கள் ஆட்சேபனை எழுப்பலாம்.

தேர்வர்கள் தங்கள் ஆட்சேபனைகளை அதற்கேற்ற ஆவணங்களுடன் இணைக்க வேண்டும், அத்துடன் ஆட்சேபனைக் கட்டணத்தையும் செலுத்த வேண்டும். ஆட்சேபனை தொடர்பான அனைத்து ஆவணங்களும் 3 எம்பிக்கு குறைவான PDF ஆக மாற்றப்பட வேண்டும். இறுதியில், எதிர்கால தேவைக்காக ஒப்புதல் சீட்டை பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளவும்

அனைத்து சமீபத்திய அரசு வேலைகள் 2019 க்கும், ரயில்வே வேலைகள், வங்கி வேலைகள் மற்றும் இதர வேலைகள் குறித்து அறிய இந்தியன் எக்ஸ்பிரஸின் தமிழ் பதிப்பான ஐஇ தமிழுடன் இணைந்திருங்கள். வங்கி, ரயில்வே மற்றும் அரசு வேலைகள் குறித்த விரைவான மற்றும் உங்களுக்கான பொருத்தமான அறிவிப்புகளை நாங்கள் உங்களுக்காக இங்கே கொண்டு வருகிறோம். தொடர்ந்து இணைந்திருங்கள் ஐஇ தமிழுடன்.

Tnpsc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment