Advertisment

TNPSC Group 4 தேர்வு தேதி அறிவிப்பு: 7382 காலியிடங்கள்; உடனே விண்ணப்பிங்க!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வணையத் தலைவர் பாலச்சந்திரன், குரூப் 4 தேர்வுக்காண அறிவிப்பை இன்று வெளியிட்டார். மேலும், போட்டித் தேர்வர்கள் குரூப் 4 தேர்வுக்கு நாளை (மார்ச் 30) முதல் ஏப்ரல் 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
TNPSC Group 4 announced today, Group IV Exam announced, TNPSC announced Group IV Exam, TNPSC, Today TNPSC Group IV Exam date announcement, Today TNPSC VAO exam date announcemet, டிஎன்பிஎஸ்சி குரூப் 4 - விஏஓ தேர்வு அறிவிப்பு, டிஎன்பிஎஸ்சி குரூப் 4 - விஏஓ தேர்வு தேதி அறிவிப்பு, டிஎன்பிஎஸ்சி குரூப் 4, விஏஓ தேர்வு, TNPSC announcement today for Group IV Exam and VAO Exam

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 மற்றும் வி.ஏ.ஓ உள்ளிட்ட பணிகளுக்கான தேர்வுக்கா அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி தலைவர் பாலச்சந்திரன் செவ்வாய்க்கிழமை அறிவித்தார். இதனால், குரூப் 4 தேர்வுக்கு நாளை முதல் ஏப்ரல் 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று பாலச்சந்திரன் அறிவித்துள்ளார்.

Advertisment

அண்மையில், டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, குரூப் 2ஏ உள்ளிட்ட அரசு பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி மார்ச் 23ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று அரசுப் பணிக்கான போட்டித் தேர்வர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வணையத் தலைவர் பாலச்சந்திரன், குரூப் 4 தேர்வுக்காண அறிவிப்பை இன்று வெளியிட்டார். மேலும், போட்டித் தேர்வர்கள் குரூப் 4 தேர்வுக்கு நாளை (மார்ச் 30) முதல் ஏப்ரல் 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளார்.

குரூப் 4 பணியிடங்கள்மொத்தம் 7,382 காலி இடங்கள் உள்ளன. அனைத்து இடங்கக்கும்தேர்வு நடத்தப்படும். இதில் 81 இடங்கள் விளையாட்டு வீரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 7,301 இடங்கள் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்படும். ஜூலை 24ம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. அக்டோபர் மாதம் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tnpsc Tamilnadu Tnpsc Group4
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment