Advertisment

TNPSC Group 4: ஒவ்வொரு நிமிடமும் முக்கியமானவை- சில டிப்ஸ்கள் இங்கே

TNPSC Group 4 Current Affairs: எது கேள்வியாக்கப்படும், கேள்விகளாய் வர வாய்ப்பு உள்ளது  என்பதை முதலில் நீங்கள் தீர்மானியுங்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TNPSC group 4 answer key,tnpsc group iv answer key, tnpsc.gov.in,tnpsc group 4 cutoff

TNPSC group 4 answer key,tnpsc group iv answer key, tnpsc.gov.in,tnpsc group 4 cutoff

நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த டிஎன்பிஎஸ்சி குரூப்-4 நேர்முகத் தேர்வு இன்னும் 48 மணி நேரத்திற்குள் தொடங்க உள்ளது. அத்தேர்வு எழுதுவதற்கு முன் உங்களுக்கு தேவையான சில முக்கிய டிப்ஸ்களை இங்கே பார்க்கலாம்.

  1. கடைசி நேரத்தில் புதிதாய் படிக்க வேண்டாம் என்ற அறிவுரையை நீங்கள் கடந்து வந்திருப்பீர்கள். ஆனால், இந்த அறிவுரை எல்லோருக்கும் பொருந்தும் என்று சொல்லிவிட முடியாது. உங்கள் மனநிலையைப் பொருத்து அடுத்த 48 மணி நேரத்தை திட்டமிடுங்கள்
  2. குறிப்பாய் சமிபத்தில் கொண்டாடப்பட்ட உலகளாவிய  முக்கிய தினங்கள், புதிதாய் பதிவியேர்த்த அயல் நாடு அதிபர்கள், இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்த அயல்நாட்டு அதிபர்கள், உலகளாவிய அமைப்புகளில் புதிதாய் நியமிக்கபட்டவர்களின் பெயர்கள் (உதாரணமாக ,உலக வங்கியின் தலைவர் பதவி)போன்றவைகளை ஒருமுறை திருப்பி பார்த்துவிடுங்கள
  3. அடுத்தபடியாக, தமிழக நிர்வாகத்தின் சாதனைகளாக சொல்லப்பட்ட விசயங்ககளை( தமிழ்நாடு சூரிய சக்தி கொள்கை, ஐசிடி கொள்கை, டெக்ஸ்டைல் கொள்கை, புது மாவட்ட அறிவிப்பு, உலக வங்கி - தமிழ்நாடு ஏதேனும் ஒப்பந்தம், தமிழ்நாட்டிற்கு கிடைத்த விருதுகள்) தெளிவாக படித்து வைத்துக் கொள்ளுங்கள்.
  4. தமிழகத்தின் தனிப்பட்ட பிரச்சனைகளாக சொல்லப்பட்ட தகவல்களை நன்கு மனதில் வைத்துக் கொள்ளுங்கள் (உதரணமாக, தண்ணீர் வறட்சியை எதனால் வந்தது , அரசாங்கம் எவ்வாறு கையாண்டது, எந்த  நிதி அயோக் ரிப்போர்டில் தமிழகம் பின்னணியில் இருந்தது, தமிழ்நாட்டில் ஸ்மார்ட் சிட்டி,  )
  5. மத்திய அரசின் புது திட்டங்கள், புது கொள்கைகள், புது அறிவுப்புகள், அமைச்சர்களின் பெயர்கள், போன்றவைகளை அத்துப்பிடியாய் வைத்துக் கொள்ளுங்கள்.
  6.  இந்த வருட பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட முக்கிய நம்பர்களையும், முக்கிய மாற்றங்களையும் ஒரு முறை பார்த்து செல்வது மிகவும் நல்லது.
  7. காரணம் இல்லாமல் எந்த கேள்வியும் கேள்வி தாளில் இருக்காது. உதாரணமாக நீங்கள் இன்னும் ஐந்நூறு வினாக்கள்  படிக்க வேண்டியிருந்தால் அதில் எது கேள்வியாக்கப்படும், கேள்விகளாய் வர வாய்ப்பு உள்ளது  என்பதை முதலில் நீங்கள் தீர்மானியுங்கள்.
  8. கடைசி நேரத்தில் தேர்வு பற்றிய பயம், புலம்பல் வரக்கூடிய ஒன்று தான். இவை இரண்டும் வேண்டாம் என்று சொல்ல வரவில்லை பயம், புலம்பலை சமாதானமாய் ஏற்றுக் கொள்ளுங்கள்.
Tnpsc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment