Advertisment

TNPSC Group 4 Notification 2019 : டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு பணி விபரங்கள் மற்றும் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்

குரூப் 4 தேர்விற்கு விண்ணப்பிப்பவர்கள் எந்தவொரு கல்விச்சான்றிதழ், ஜாதிச்சான்றிதழ் உள்ளிட்டவைகளை பதிவேற்றம் செய்ய வேண்டியதில்லை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu Public Service Commission, tnpsc group 4, tnpsc group 4 question paper with answers in tamil pdf 2018, TNPSC Group 4 Notification 2019, Documents Need to apply tnpsc group 4, TNPSC Group 4 jobs details, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், tnpsc.com, www.tnpsc exam.in, குரூப் 4 தேர்வு, tnvelaivaaippu, டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 மாதிரி வினாத்தாள், tnpsc group 4 model question paper with answers in tamil pdf

Tamil Nadu Public Service Commission, tnpsc group 4, tnpsc group 4 question paper with answers in tamil pdf 2018, TNPSC Group 4 Notification 2019, Documents Need to apply tnpsc group 4, TNPSC Group 4 jobs details, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், tnpsc.com, www.tnpsc exam.in, குரூப் 4 தேர்வு, tnvelaivaaippu, டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 மாதிரி வினாத்தாள், tnpsc group 4 model question paper with answers in tamil pdf

TNPSC 2019 Group 4 Notification Released: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் என்றழைக்கப்படும் தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன், குரூப் 4 தேர்விற்கான அறிவிப்பை, சில தினங்களுக்கு முன் வெளியிட்டது.

Advertisment

6491 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ஜூன் 14 முதல் ஜூலை 14ம் தேதி ஆன்லைன் மூலம் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு - தேர்வு முறை ( exam pattern) மற்றும் தேர்வு செயல்முறை ( selection process)

பணியிடங்கள்

கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஒ) – 397

ஜூனியர் அசிஸ்டெண்ட் (நான் செக்யூரிட்டி) – 2688

பில் கலெக்டர், கிரேடு – I – 34

பீல்டு சர்வேயர் – 509

டிராப்ட்ஸ்மேன் – 74

டைப்பிஸ்ட் – 1901

ஸ்டெனோ டைப்பிஸ்ட் – 784

முக்கிய தேதிகள்

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் – ஜூலை 14, 2019

தேர்வுக் கட்டணம் செலுத்த இறுதி நாள் – ஜூலை 16, 2019

தேர்வு நாள் – செப்டம்பர் 1, 2019

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்கான வயதுவரம்பு மற்றும் கல்வித்தகுதி - முழுத்தகவல்கள்

தேவையான ஆவணங்கள்

பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்

ஸ்கேன் செய்யப்பட்ட பாஸ்போர்ட் சைஸ் போட்டோ

ஸ்கேன் செய்யப்பட்ட கையெழுத்து

ஜாதி சான்றிதழ்

குரூப் 4 தேர்விற்கு விண்ணப்பிப்பவர்கள் எந்தவொரு கல்விச்சான்றிதழ், ஜாதிச்சான்றிதழ் உள்ளிட்டவைகளை பதிவேற்றம் செய்ய வேண்டியதில்லை. விண்ணப்பதாரர்களிடம் நேரடியாக, டி,என்.பி.எஸ்.சி. நிர்வாகம் கேட்டுக்கொண்டாலொழிய அவர்கள் தங்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவோ, சமர்பிக்கவோ வேண்டியதில்லை. விண்ணப்பதாரர்கள், தங்களது பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மற்றும் கையெழுத்தை ஸ்கேன் செய்து வைத்துக்கொள்ளவும். பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மற்றும் கையெழுத்து ஸ்கேன் போட்டோ 50 கேபி அளவிற்குள் இருக்க வேண்டும். இதை மட்டுமே, குறிப்பிட்ட இடத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

read more.. வேலை தேடி அலைபவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு.. 6,491 காலிடங்கள் நீங்க ரெடியா?

பதிவேற்றம் செய்யப்படும் ஆவணங்கள் சரியாக இல்லாமல் இருந்தாலோ, தெளிவற்று இருந்தாலோ விண்ணப்பம் நிராகரிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள், தங்களது பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மற்றும் கையெழுத்து கவனமாக ஸ்கேன் செய்து குறிப்பிட்ட அளவு கொண்டதாகவும் தெளிவாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Tnpsc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment