Advertisment

TNPSC Exam News: சிவில் நீதிபதி தேர்வு அறிவிப்பு, குரூப் 4 தேர்வர்களின் எதிர்பார்ப்புக்கு விடை எப்போது?

TNPSC Group 4 Official Answer Key 2019: விடைத்தாள், கட் ஆஃப் மதிப்பெண் பற்றிய விவரங்களுக்கு 13 லட்சத்திற்கும் மேற்பட்ட தேர்வர்கள் காத்திருக்கிறார்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu live Updates :

Tamil Nadu live Updates :

TNPSC Group 4 Pass Mark 2019: தமிழ்நாடு சிவில் நீதிபதிகளுக்கான தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. செப்டம்பர் 9 முதல் அக்டோபர் 9 முதல் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதற்கிடையே டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான விடைத்தாள், கட் ஆஃப் மதிப்பெண் விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் தமிழ்நாடு சிவில் நீதிபதிகளுக்கான தேர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது. டி.என்.பி.எஸ்.சி அதிகாரபூர்வ இணையதளமான tnpsc.gov.in -ல் செப்டம்பர் 9 முதல் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும். ஆன் லைனில் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

Tamil Nadu Public Service Commission Latest News: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு

விண்ணப்பிக்க இறுதி தேதி அக்டோபர் 9 ஆகும். இந்தத் தேர்வுக்கான கட்டணம் 650 ரூபாய். எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு கட்டணம் கிடையாது. நவம்பர் 24-ம் தேதி இந்தத் தேர்வு நடைபெறும். 3 கட்டங்களாக தேர்வு முறை அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தேர்வு தொடர்பான முழு விவரங்களை அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் காணலாம்.

TNPSC Group 4 Exam: தவறான கேள்விகளுக்கு முழு மதிப்பெண்?

இதற்கிடையே டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு கடந்த 1-ம் தேதி நடைபெற்றது. இதற்கான விடைத்தாள், கட் ஆஃப் மதிப்பெண் பற்றிய விவரங்களுக்கு 13 லட்சத்திற்கும் மேற்பட்ட தேர்வர்கள் காத்திருக்கிறார்கள். எந்த நேரமும் டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் அவை வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tnpsc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment