scorecardresearch

TNPSC Jobs; தமிழ்நாடு அரசில் சூப்பர் வேலைவாய்ப்பு; 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!

TNPSC அறிவிப்பு; தமிழ்நாடு அரசு வேலை; 36 நிர்வாக அலுவலர் பணியிடங்கள்; 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

TNPSC Jobs; தமிழ்நாடு அரசில் சூப்பர் வேலைவாய்ப்பு; 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!

TNPSC invites application for 36 Executive officer Grade 4 posts apply soon: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள நிர்வாக அலுவலர் கிரேடு 4 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த தேர்வு மூலம் மொத்தம் 36 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு இந்து சமயத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்த பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்வதற்கான செயல்முறை 20.05.2022 முதல் 18.06.2022 வரை இருக்கும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

நிர்வாக அலுவலர் கிரேடு 4 (Executive Officer, Grade-IV)

காலியிடங்களின் எண்ணிக்கை: 36

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது தமிழ் புலவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 19,500 – 71,900

வயதுத் தகுதி: 01.07.2022 அன்று 25 வயது முதல் 37 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC(V), MBC  DNC, MBC, BC and BCM பிரிவுகளுக்கு வயது வரம்பு கிடையாது.

தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வு இரண்டு தாள்களாக நடைபெறும். முதல் தாள் இரண்டு பிரிவுகளாக நடைபெறும். முதல் பிரிவு தமிழ் மொழித் தகுதித் தேர்வு. இதில் 100 வினாக்கள் 150 மதிப்பெண்களுக்கு கேட்கப்ப்படும். இந்த தேர்வில் 60 மதிப்பெண்கள் எடுப்பது கட்டாயம். இல்லையென்றால் பிற தாள்கள் மதிப்பீடு செய்யப்பட மாட்டாது.

இரண்டாம் பிரிவில், பொது அறிவில் 100 வினாக்களும் கேட்கப்படும். இதில் பொது அறிவில் 75 வினாக்களும், கணிதப்பகுதியில் 25 வினாக்களும் இடம்பெறும். இதற்கான கால அளவு 3 மணி நேரம்.

இரண்டாம் தாளில் இந்துமதம், சைவம் மற்றும் வைணவம் பாடப்பிரிவுகளில் இருந்து வினாக்கள் இடம்பெறும். இதில் 200 வினாக்கள் 300 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். இதற்கான கால அளவு 3 மணி நேரம்.

இரண்டு தாள்களிலும் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படும்.

எழுத்து தேர்வு நடைபெறும் நாள் : 11.09.2022

விண்ணப்பக் கட்டணம் : ரூ. 150, இருப்பினும் ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

தேர்வுக் கட்டணம் : ரூ. 100, இருப்பினும் SC, SC(A), ST, MBC(V), MBC – DNC, MBC, BC, BCM மற்றும் விதவைகள் உள்ளிட்ட பிரிவுகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு உண்டு.

விண்ணப்பிக்கும் முறை:  விண்ணப்பிக்க விரும்புபவர்கள்  www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் அதன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இதையும் படியுங்கள்: TNPSC Group 4: குரூப் 4- வி.ஏ.ஓ தேர்வுக்கு புதிய சிலபஸ்; டவுன்லோட் செய்வது எப்படி?

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.06.2022

இது குறித்து மேலும் விவரங்கள் அறிய https://www.tnpsc.gov.in/Document/english/13_2022_EO_GR_IV_Notfn_Eng.pdf என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Tnpsc invites application for 36 executive officer grade 4 posts apply soon

Best of Express