Advertisment

TNPSC Annual Planner 2020: புத்தாண்டில் தமிழக அரசு வேலை வாய்ப்பு பட்டியல்

Tamil Nadu Public Service Commission: மாதிரி வினாக்கள், வினாத்தாள் அமைப்பு உள்ளிட்ட விபரங்கள், டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் விரிவாக இடம்பெற்றுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பட்டதாரிகளின் கனவு: குரூப் I தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறை இன்று துவக்கம்

TNPSC Jobs 2020: தமிழக அரசின் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அமைப்பின் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, 2020ம் ஆண்டின் TNPSC காலண்டர் வெளியாகியுள்ளது.

Advertisment

2019ம் ஆண்டு இன்னும் சில தினங்களில் விடைபெற உள்ள நிலையில், இந்த வருசம் எப்படியோ விட்டோம், அடுத்த வருசத்திலயாவது கவர்ன்மென்ட் வேலையில நிச்சயம் உட்கார்ந்துறணும்டா என்று நினைப்பவர்களுக்கு உதவும் வகையில் டிஎன்பிஎஸ்சி 2020ம் ஆண்டு காலண்டர் வெளியிடப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://tnpsc.gov.in/ ல் வெளியிடப்பட்டுள்ளது. இது உத்தேச காலண்டர் தான் என்றாலும், இந்த காலண்டரின்படி, தேர்வர்கள் தங்கள் தேர்வுக்கு ஆயத்தமாதல், அதற்குரிய பாடத்திட்டங்களை கையாளுதல் உள்ளிட்ட நிகழ்வுகளை ஒருங்கிணைத்துக் கொள்ள இந்த காலண்டர் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

IETAMIL Video:

TNPSC Recruitment 2020: டிஎன்பிஎஸ்சி 2020 உத்தேச காலண்டர்

2020 காலண்டரின் படி, ஜனவரி மாதத்தில், குரூப் 1 தேர்வு உள்ளிட்ட 4 தேர்வுகளும், பிப்ரவரி மாதத்தில், இஞ்ஜினியரிங் பட்டதாரிகள் தொடர்பான தேர்வுகள் என மொத்தம் 23 தேர்வுகள் நடைபெற உள்ளன.

பிப்ரவரி மாதத்தில் ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் அடங்கிய பல்வேறு துறை பதவிகளுக்கான தேர்வு மட்டும் நடைபெறுகிறது.

மார்ச் மாதத்தில் 1.. ஒருங்கிணைந்த நூலக மற்றும் தகவல் சேவைக்கான தேர்வு, 2. மீன்வளத்துறை ஆய்வாளர் மற்றும் மீன்வளத்துறை உ.தவி இயக்குநர் பதவிக்கான டி.என்.பி.எஸ்.சி தேர்வு, 3. பர்சர் பணிக்கான தேர்வு (Bursar In Tamil Nadu Collegiate Educational Service) ஆகியவை நடைபெறுகிறது.

ஜூலை மாதத்தில் மட்டும் 7 தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. . அவை, 1. செயல் அதிகாரி கிரேடு 1 பணிக்கான தேர்வு, 2. செயல் அதிகாரி கிரேடு 3 பணிக்கான தேர்வு 3. செயல் அதிகாரி கிரேடு 4 பணிக்கான தேர்வு 4. ஒருங்கிணைந்த சிவில் சர்வீஸ் பணிக்கான குரூப் 3 தேர்வு 5. தமிழ்நாடு தொழில் வணிக ஆணையரகத்தில் உதவி இயக்குநர் பணிக்கான தேர்வு 6. தமிழ்நாடு தொழிலக சேவையில் தோல் உதவி இயக்குநர் அல்லது தோல் உதவி மேலாளர் பணிக்கான தேர்வுகள் நடைபெற உள்ளன.

டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கான பாடத்திட்டம், இதற்கு முன்பு நடத்தப்பட்ட தேர்வுக்கான வினாத்தாள், மாதிரி வினாக்கள், வினாத்தாள் அமைப்பு உள்ளிட்ட விபரங்கள், டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் விரிவாக இடம்பெற்றுள்ளது.

 

Tnpsc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment