Advertisment

TNPSC Recruitment 2018: தமிழ்நாடு சிறைத்துறையில் வேலை.. விருப்பமுள்ளவர்கள் விண்ணபிக்கலாம்!

TNPSC Recruitment 2018 for Assistant Jailor job post at tnpsc.gov.in : ஜெயிலர் 30 பணியிடங்களை நிரப்பும் வகையில் டிஎன்பிஎஸ்சி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
NPCIL Recruitment 2019

NPCIL Recruitment 2019

TNPSC Recruitment 2018: சிறைத்துறை நிர்வாக பிரிவில் ஆரம்ப நிலை பதவியான அசிஸ்டென்ட் ஜெயிலர் பணியிடங்களுக்கு காலியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 30 பணியிடங்களாக காலியாக இருப்பதாகவும், விருப்பமுள்ளவர்கள் விண்ணபிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

நேரடி உதவி ஜெயிலர் 30 பணியிடங்களை நிரப்பும் வகையில் டிஎன்பிஎஸ்சி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உதவி ஜெயிலர் பணிக்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். வயது 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி உள்ளிட்ட இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பு ஏதும் இல்லை. உதவி ஜெயிலர் பணிக்கு குறிப்பிட்ட சில உடற்தகுதிகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

உதவி ஜெயிலர் பணிக்கு நல்ல கண் பார்வை அவசியம். தகுதியுள்ள நபர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவார்கள். இந்த தேர்வு வரும் ஜனவரி மாதம் 6 ஆம் தேதி 2019 தொடங்குகிறது.

TNPSC Recruitment 2018: யார் யார் விண்ணபிக்கலாம்!

எழுத்துத்தேர்வில் 2 தாள்கள் இருக்கும். ஒவ்வொன்றுக்கும் தலா 300 மதிப்பெண். முதல் தாள் காலை 10 மணி முதலில் 1 மணி வரை நடைபெறும். இரண்டாம் தாள் மதியம் 2.30 மணி முதல் 5.30 மணி வரை நடைபெறுகிறது.

கல்வித்தகுதியும் உரிய உடற்தகுதியும் கொண்ட பட்டதாரிகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தைப் (www.tnpsc.gov.in) பயன்படுத்தி நவம்பர்  7-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்துத் தேர்வு  ஜனவரி 6 ஆம் தேதி நடத்தப்படவிருக்கிறது. விண்ணப்பிக்கும் முறை, பாடத்திட்டம், தேர்வுமுறை உள்ளிட்ட விவரங்களை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் விளக்கமாக தெரிந்துகொள்ளலாம்.

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment