Advertisment

வேலை தேடுபவர்களுக்கு பொன்னான வாய்ப்பு : தமிழக அரசின் வழக்கறிஞர் பணி

நீதிமன்றங்களில் வழக்கறிஞராக குறைந்தது 5 ஆண்டுகளுக்காவது பயிற்சி பெற்றிருக்க வேண்டும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TNPSC VAO Recruitment 2019

TNPSC VAO Recruitment 2019

தமிழகத்தில் காலியாக உள்ள உதவி அரசு வழக்கறிஞர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

Advertisment

உதவி அரசு வழக்கறிஞர் நிலை-2 பதவிக்கான 46 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு குறித்த அறிவிப்பைத் தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டிருக்கிறது.இந்த பணியிடத்திற்கான முதல் நிலைத் தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி 5-ம் தேதி நடைபெறுகிறது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் அடுத்த கட்டமாக முதன்மைத் தேர்வில் பங்கேற்க அழைக்கப்படுவார்கள்.

தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பார் கவுன்சிலில் பதிவுசெய்த உறுப்பினராக இருக்க வேண்டும்.விண்ணப்பதாரர்கள் பி.எல். பட்டப்படிப்பு சான்றிதழ், பார் கவுன்சில் உறுப்பினர், கிரிமினல் நீதிமன்றங்களில் வழக்கறிஞராக குறைந்தது 5 ஆண்டுகளுக்காவது பயிற்சி பெற்றிருக்க வேண்டும்

பதிவுக் கட்டணம் ரூ.150, முதல் நிலைத் தேர்வுக் கட்டணம் ரூ.100. முதன்மைத் தேர்வுக் கட்டணம் ரூ.200 ஆகும். 31.10.2018. முதல் நிலைத் தேர்வு நாள்: 05.01.2019. முதன்மைத் தேர்வு நாள் பின்னர் அறிவிக்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு: https://goo.gl/pDTT4S இணையதளத்தில் தெரிந்துக் கொள்ளலாம்.

Tamil Nadu Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment