Advertisment

TNTET Exam 2022; ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்வது எப்படி?

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் ஆசிரியர் தகுதித் தேர்வு: ஹால் டிக்கெட் வெளியீடு; டவுன்லோட் செய்வது எப்படி? சிம்பிள் ஸ்டெப்ஸ் இங்கே

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Anbumani request to re-conduct TNPSC Group-2 exam

டி.என்.பி.எஸ்.சி தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் டெட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. இணையதளத்தில் இருந்து ஹால் டிக்கெட்களை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது என்பதை இப்போது பார்ப்போம்.

Advertisment

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கான ஆசிரியர் பணியிடங்களை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் பல்வேறு தேர்வுகளை நடத்தி நிரப்பி வருகிறது. இந்த தேர்வுகளில் மிக முக்கியமானது ஆசிரியர் தகுதித் தேர்வு. இந்த தேர்வு இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வாகும்.

இதையும் படியுங்கள்: மாநில கல்விக் கொள்கை: மாவட்டம் வாரியாக கருத்து கேட்கும் தமிழக அரசு

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் ஆக விருப்பம் உள்ளவர்கள், கட்டாயம் இந்த தேர்வு எழுதி, தகுதி மதிப்பெண்ணைப் பெற்றிருக்க வேண்டும். இந்த தேர்வு இரண்டு தாள்களாக நடைபெறும். முதல் தாள் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி (D.T.Ed) படித்தவர்களுக்கும், இரண்டாம் தாள் பட்டப்படிப்பு ஆசிரியர் பயிற்சி (B.Ed) படித்தவர்களுக்கும் நடைபெறும்.

இந்த ஆண்டு டெட் தேர்வு கணினி வழித் தேர்வாக நடைபெற உள்ளது. முதலில் முதல் தாளுக்கான தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த தேர்வுகள் அக்டோபர் 14 முதல் 19 ஆம் தேதி வரை 6 நாட்கள் நடைபெற உள்ளது. இதற்கான ஹால் டிக்கெட்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஹால் டிக்கெட் இரண்டு பிரிவுகளாக கிடைக்கும். முதல் பிரிவு ஹால் டிக்கெட் அக்டோபர் 7 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில் சம்பந்தப்பட்ட தேர்வருக்கு தேர்வு எந்த மாவட்டத்தில் நடைபெறும், தேர்வு நடைபெறும் நாள் போன்ற விவரங்கள் அடங்கியிருக்கும்.

அடுத்ததாக, தேர்வுக்கு 3 நாட்களுக்கு முன்னதாக தேர்வு மைய ஹால் டிக்கெட் வெளியிடப்படும். எனவே தேர்வர்கள் தங்களுக்கு தேர்வு எப்போது நடைபெறுகிறது, எந்த மாவட்டத்தில் நடைபெறும் என்பதைத் தெரிந்துக் கொண்டு, தேர்வுக்கு 3 நாட்கள் முன்னதாக ஹால் டிக்கெட்களை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

ஹால் டிக்கெட் ட்வுன்லோட் செய்வது எப்படி?

முதலில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கமான http://trb.tn.nic.in/Default.htm என்ற பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.

அங்கு TAMILNADU TEACHER ELIGIBILITY TEST TNTET PAPER – 1 – 2022 COMPUTER BASED EXAMINATION ADMIT CARD என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

இப்போது நீங்கள் வேறு பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். அங்கு கடைசியில் குறிப்பிடப்பட்ட Click here to Download Admit Card என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

இப்போது காண்பிக்கப்படும் பக்கத்தில், Registered Userக்கு கீழே உள்ள Applicant login என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

அதில் உங்கள் பயனர் ஐ.டி மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு உள் நுழைய வேண்டும்.

இப்போது உங்கள் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

அதேநேரம் https://trbtet2022.onlineregistrationform.org/TNTRB/ என்ற இணைப்பை கிளிக் செய்து நேரடியாக ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யும் பக்கத்திற்குச் செல்லலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tet Exam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment