Advertisment

TNTET Exam Answer Key 2019: TET தேர்வு முடிவை எதிர்நோக்கி காத்திருப்பவரா நீங்கள் ; இதோ விடைக்குறிப்புகள், உத்தேச கட் ஆப் மதிப்பெண்கள்....

TNTET Answer Key 2019 Paper 1 & Paper 2 Released: தற்போது வெளியிடப்பட்டுள்ளது தற்காலிக விடைக்குறிப்புகள் தான் என்றாலும், இன்னும் சில தினங்களில் டிஆர்பி அதிகாரப்பூர்வமான விடைக்குறிப்பை வெளியிடும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tntet exam answer key 2019, tntet exam answer key 2019 paper 2, tntet exam answer key 2019 pdf, tntet exam answer 2019, tntet exam answer key paper 1 2019, today tntet exam answer key, tntet exam question and answer in tamil, tntet exam question paper with answers 2019, ஆசிரியர் தகுதி தேர்வு, விடைக்குறிப்பு, ஆ்சிரியர் தேர்வு வாரியம், டிஆர்பி

tntet exam answer key 2019, tntet exam answer key 2019 paper 2, tntet exam answer key 2019 pdf, tntet exam answer 2019, tntet exam answer key paper 1 2019, today tntet exam answer key, tntet exam question and answer in tamil, tntet exam question paper with answers 2019, ஆசிரியர் தகுதி தேர்வு, விடைக்குறிப்பு, ஆ்சிரியர் தேர்வு வாரியம், டிஆர்பி

TNTET Exam Answer Key 2019 Released: தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால், கடந்த மாதம் 8 மற்றும் 9ம் தேதி நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்விற்கான விடைக்குறிப்புகள் TRB அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம், பல்வேறு தெர்வுகளை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. ஆசிரியர் தெர்வு வாரியம், நடத்திய ஆசிரியர் தகுதித்தேர்வில், லட்சக்கணக்கான தேர்வர்கள் கலந்துகொண்டனர். தற்போது இந்த தேர்வின் விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதால், தேர்வர்கள் அனைவரும் விடைக்குறிப்பை டவுன்லோடு செய்து வருகின்றனர். தேர்வர்கள், விடைக்குறிப்பை டிஆர்பியின் அதிகாரப்பூர்வ இணையதளமான trb.tn.nic.in இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. விடைத்தாள் பிடிஎப் பார்மேட்டில் வெளியாகியுள்ளதால், தேர்வர்கள், தங்களது மதிப்பெண்ணை எளிதாக கண்டறிய வழிவகை ஏற்பட்டுள்ளது.

Advertisment

ஆசிரியர் தகுதித்தேர்வு விடைக்குறிப்புகள் வெளியீடு ; பார்ப்பது எப்படி?

தற்போது வெளியிடப்பட்டுள்ளது தற்காலிக விடைக்குறிப்புகள் தான் என்றாலும், இன்னும் சில தினங்களில் டிஆர்பி அதிகாரப்பூர்வமான விடைக்குறிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெட் தேர்வு - முதல் தாள் விடைக்குறிப்பு

டெட் தேர்வு - இரண்டாம் தாள் விடைக்குறிப்பு

கட் ஆப் மதிப்பெண்கள்

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம், ஆசிரியர் தகுதித்தேர்விற்கான அறிவிக்கையை 08/2019ன் கீழ் வெளியிட்டது. ஜூன் மாதம் 8 மற்றும் 9ம் தேதிகளில், முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள் என தேர்வுகள் நடைபெற்றன. சரியான விடைக்கு 1 மதிப்பெண்கள் கொடுக்கப்பட நிலையில், தவறான விடைகளுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் வழங்கப்படவில்லை இதனைக்கொண்டு ஒரு உத்தேச கட் ஆப் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளது.

பிரிவு முதல் தாள் இரண்டாம் தாள்

பொதுப்பிரிவு 60 சதவீதம் 60 சதவீதம்

இதர பிற்படுத்தப்பட்ட

வகுப்பு 55 சதவீதம் 110-115 மதிப்பெண்கள்

பட்டியல் இனத்தவர்(.SC) 55 சதவீதம் 100 -110 மதிப்பெண்கள்

பழங்குடியினர் (ST) 55 சதவீதம் 90-100 மதிப்பெண்கள்

How to download TNTET answer key - ஆசிரியர் தகுதி தேர்விற்கான விடைக்குறிப்பை டவுன்லோடு செய்யும் முறை

1. trb.tn.nic.in இணையதளத்திற்கு செல்லவும்

2. அதன் முகப்பு பக்கத்தில் உள்ள TN TET 2019 Answer Key லிங்கை தேர்வு செய்து உள்நுழையவும்

3. விடைக்குறிப்பு பிடிஎப் பார்மேட்டில் இருக்கும்

4. அதனை டவுன்லோடு செய்து, மதிப்பெண்களை சரிபார்த்துகொள்ளவும்.

Tet Exam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment