Advertisment

சென்னையில் டாப் 10 பொறியியல் கல்லூரிகள்... தேர்வு செய்வது எப்படி?

பொறியியல் படிக்க விரும்புபவர்களின் கவனத்திற்கு; சென்னையில் உள்ள டாப் இன்ஜினியரிங் கல்லூரிகள் எவை தெரியுமா?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TNEA: கோவையில் பொறியியல் கவுன்சலிங் ரவுண்ட் -1 டாப் கல்லூரிகள் எவை?

Top 10 Engineering colleges list under Anna University in Chennai: பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள் அவசியம் தெரிந்துக் கொள்ள வேண்டிய பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பம் செய்வது எப்படி? கவுன்சிலிங் செயல்முறை என்ன? சென்னையில் உள்ள டாப் பொறியியல் கல்லூரிகள் எவை? போன்ற தகவல்களை இப்போது பார்ப்போம்.

Advertisment

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளுக்கான சேர்க்கையை, அண்ணாப் பல்கலைக்கழகத்தின் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை அமைப்பு நடத்தி வருகிறது. இந்த பொறியியல் படிப்புகளுக்கு https://www.tneaonline.org/ என்ற இணையதளப் பக்கம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்: TNEA Counselling: அரசு பொறியியல் கல்லூரிகளில் சேரலாமா? தேர்ச்சி விகிதம் எப்படி?

பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெறும். உங்களுடைய விண்ணப்பம் ஏற்றக் கொள்ளப்பட்ட பின்னர், நீங்கள் கல்லூரிகளை தேர்வு செய்ய மூன்று நாட்கள் அவகாசம் வழங்கப்படும். அதாவது உங்களுக்கான தரவரிசை வெளியிடப்பட்ட பின்னர், நீங்கள் ஆன்லைனில், நீங்கள் விரும்பும் கல்லூரிகளை முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்துக் கொள்ளலாம். அதன்பிறகு உங்களுடைய கட் ஆஃப் மதிப்பெண்களுக்கு ஏற்ப உங்களுக்கு நீங்கள் தேர்வு செய்த கல்லூரிகளில் இருந்து ஓதுக்கீடு செய்யப்படும்.

தற்போது சென்னைப் பகுதியில் டாப் பொறியியல் கல்லூரிகள் எவை என்பதை இப்போது பார்ப்போம். கல்வி ஆலோசகர் அஸ்வின் சென்னையில் உள்ள டாப் கல்லூரிகள் எவை என்பதை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

கல்லூரிகளுக்கு மாணவர்கள் அளிக்கும் முன்னுரிமை, ஆவரேஜ் கட் ஆஃப், இடங்கள் நிரப்பப்படும் நிலை ஆகியவற்றின் அடிப்படையில் டாப் கல்லூரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அஸ்வின் கூறியுள்ளார்.

சென்னையில் உள்ள டாப் 10 பொறியியல் கல்லூரிகள்

சென்னையில் உள்ள அண்ணாப் பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரி முதலிடத்தில் உள்ளது.

அடுத்த இடத்தில், குரோம்பேட்டையில் உள்ள அண்ணாப் பல்கலைக்கழகத்தின் எம்.ஐ.டி கேம்பஸ் உள்ளது.

அதற்கு அடுத்த இடத்தில் தனியார் கல்லூரியான எஸ்.எஸ்.என் என அழைக்கப்படும் ஸ்ரீ சிவசுப்பிரமணிய நாடார் பொறியியல் கல்லூரி உள்ளது.

இதற்கு அடுத்த இடத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஏ.சி.டெக் கேம்பஸ் உள்ளது.

சென்னை இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி தனியார் கல்லூரிகளில் எஸ்.எஸ்.என் கல்லூரிக்கு அடுத்தப்படியாக முக்கியமான கல்லூரியாக உள்ளது. சென்னை ஆர்.எம்.கே இன்ஜினியரிங் காலேஜ், சென்னை ராஜலட்சுமி இன்ஜினியரிங் காலேஜ் ஆகிய அடுத்த இடங்களில் முக்கிய கல்லூரிகளாக இருக்கின்றன.

அடுத்து ஸ்ரீ வெங்கடேஸ்வரா காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, ராஜலட்சுமி இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி, சாய்ராம் கல்வி நிறுவனங்கள், சவீதா பொறியியல் கல்லூரி, செயிண்ட் ஜோசப் இன்ஜினியரிங் காலேஜ், எஸ்.ஆர்.எம் ஈஸ்வரி இன்ஜினியரிங் காலேஜ் ஆகியவை அடுத்த இடங்களில் உள்ளன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Anna University Engineering Counselling
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment