Advertisment

திருச்சி மண்டலம்: டாப் 25 பொறியியல் கல்லூரிகள் எவை?

பொறியியல் படிக்க விருப்பமா? திருச்சி பகுதியில் உள்ள டாப் 25 இன்ஜினியரிங் கல்லூரிகளின் பட்டியல் இங்கே

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TNEA: கோவையில் பொறியியல் கவுன்சலிங் ரவுண்ட் -1 டாப் கல்லூரிகள் எவை?

Top 25 Engineering colleges list under Anna University in Trichy: பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்களில் பெரும்பாலானோரின் தேர்வு முதலில் சென்னை, அடுத்தது கோவை என்று தான் உள்ளது. சென்னையில் உள்ள கல்லூரிகளின் தரம் மற்றும் வேலைவாய்ப்பு போன்றவை மாணவர்களை சென்னை பகுதியில் உள்ள கல்லூரிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வைக்கிறது. இதேபோல், கோவை பகுதியில் உள்ள கல்லூரிகளும் மாணவர்களால் அதிகம் விரும்பப்படுகிறது.

Advertisment

அதேநேரம், சென்னை, கோவை தவிர, தமிழகத்தின் பிற பகுதிகளில் தரமான, சிறப்பான, நல்ல வேலைவாய்ப்பை பெற்றுத் தரக்கூடிய ஏராளமான கல்லூரிகள் உள்ளன. அவற்றில் திருச்சி பகுதியில் உள்ள டாப் 25 என்ஜீனியரிங் கல்லூரிகள் எவை என்பது குறித்து இப்போது பார்ப்போம்.

இதையும் படியுங்கள்: கோவை முதல் இடம்… அண்ணா யூனிவர்சிட்டி டாப் 15 அரசு பொறியியல் கல்லூரிகள் எவை?

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளுக்கான சேர்க்கையை, அண்ணாப் பல்கலைக்கழகத்தின் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை அமைப்பு நடத்தி வருகிறது. இந்த பொறியியல் படிப்புகளுக்கு https://www.tneaonline.org/ என்ற இணையதளப் பக்கம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

இந்தநிலையில், கல்வியாளர் ரமேஷ்பிரபா தனது யூடியூப் சேனலில் தமிழகத்தின் திருச்சி பகுதியில் உள்ள டாப் 25 பொறியியல் கல்லூரிகள் எவை என பட்டியலிட்டுள்ளார். இதில் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த டாப் 25 பொறியியல் கல்லூரிகளின் தரவரிசையானது, அண்ணா பல்கலைக்கழகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள கல்லூரி முன்னுரிமை பட்டியல் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 5 வருடங்களில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புகளில் பொதுப்பிரிவினருக்கு கட் ஆஃப் மதிப்பெண்களின் சராசரி அடிப்படையில் முன்னுரிமை பட்டியல் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சியில் உள்ள அண்ணாப் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரியான பாரதிதாசன் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி முதலிடத்தில் உள்ளது.

2 ஆம் இடத்தில், திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் உள்ள அரசுப் பொறியியல் கல்லூரி உள்ளது.

3 ஆவது இடத்தில் திருச்சியில் உள்ள சாரநாதன் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் உள்ளது.

4 ஆவது இடத்தில் கரூரில் உள்ள வி.எஸ்.பி காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் உள்ளது.

5 ஆவது இடத்தில் கரூரில் உள்ள எம்.குமாரசுவாமி காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் உள்ளது.

6 ஆவது இடத்தில் தஞ்சாவூரில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி உள்ளது.

7 ஆவது இடத்தில் திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் உள்ள கொங்குநாடு காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி உள்ளது.

8 ஆவது இடத்தில் திருச்சியில் உள்ள கே.ராமகிருஷ்ணன் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் உள்ளது.

9 ஆவது இடத்தில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அஞ்சலை அம்மாள் மகாலிங்கம் இன்ஜினியரிங் காலேஜ் உள்ளது.

10 ஆவது இடத்தில் மயிலாடுதுறையில் உள்ள ஏ.வி.சி காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் உள்ளது.

11 ஆவது இடத்தில் திருச்சியில் உள்ள எஸ்.ஆர்.எம் டி.ஆர்.பி இன்ஜினியரிங் காலேஜ் உள்ளது.

12 ஆவது இடத்தில் திருச்சியில் உள்ள கே.ராமகிருஷ்ணா காலேஜ் ஆஃப் டெக்னாலஜி உள்ளது.

13 ஆவது இடத்தில் பட்டுக்கோட்டையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி உள்ளது.

14 ஆவது இடத்தில் அரியலூரில் உள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி உள்ளது.

15 ஆவது இடத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கிங்ஸ் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் உள்ளது.

16 ஆவது இடத்தில் பெரம்பலூரில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் இன்ஜினியரிங் காலேஜ் உள்ளது.

17 ஆவது இடத்தில் தஞ்சாவூரில் உள்ள பரிசுத்தம் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் உள்ளது.

18 ஆவது இடத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மவுண்ட் சியான் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி உள்ளது.

19 ஆவது இடத்தில் கரூரில் உள்ள செட்டிநாடு காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி உள்ளது.

20 ஆவது இடத்தில் திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி உள்ளது.

21 ஆவது இடத்தில் திருச்சியில் உள்ள எம்.ஏ.எம் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி உள்ளது.

22 ஆவது இடத்தில் திருச்சியில் உள்ள எம்.ஐ.ஈ.டி இன்ஜினியரிங் காலேஜ் உள்ளது.

23 ஆவது இடத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மூகாம்பிகை காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் உள்ளது.

24 ஆவது இடத்தில் கரூர் மாவட்டத்தில் உள்ள சேரன் இன்ஜினியரிங் காலேஜ் உள்ளது.

25 ஆவது இடத்தில் நாகப்பட்டினத்தில் உள்ள ஈ.ஜி.எஸ் பிள்ளை இன்ஜினியரிங் காலேஜ் உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Anna University Engineering
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment