Advertisment

ஏஐசிடிஇ-ன் 3 முக்கிய கல்வி உதவித்தொகை திட்டங்கள்: விவரம் உள்ளே

AICTE Scholarship Application : மாற்றுத்திறனாளி மாணவர்கள் தொழில்நுட்ப கல்வி கற்கும் வகையில்  சக்ஷம் கல்வி உதவித்தொகைத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஏஐசிடிஇ-ன் 3 முக்கிய கல்வி உதவித்தொகை திட்டங்கள்: விவரம் உள்ளே

உயர்கல்வி மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களில் மாணவ/ மாணவிகளின் சேர்க்கை எண்ணிக்யை அதிகரிக்க அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு பல்வேறு கல்வித்தொகை திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் சிலவற்றை இங்கே காணலாம்.

Advertisment

சக்ஷம் கல்வி உதவித்தொகைத் திட்டம் : 

மாற்றுத்திறனாளி மாணவர்கள் தொழில்நுட்ப கல்வி கற்கும் வகையில்  இந்த கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கல்வி கட்டணத்தை திரும்பப் பெறும் வகையில் ரூ.30,000 மற்றும் தற்செயல்படி ரூ.20,000 என உதவித்தொகை வழங்கப்படுகிறது.  ஆண்டுக்கு ரூ.8 லட்சத்திற்கு குறைவான குடும்ப வருவாய் கொண்ட மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை கிடைக்கும்.  பயனாளிகள் தகுதித் தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

பெண்களுக்கான பிரகதி திட்டம் : 

உயர்கல்வி மற்றும் தொழில்நுட்ப நிறுவங்களில் பெண்களின் சேர்க்கை எண்ணிக்யை அதிகரிப்பதற்காக ஏஐசிடிஇ பெண்களுக்கான பிரகதி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

முதலாம் ஆண்டு பொறியியல் மாணவிகளும் டிப்ளமோ முடித்துவிட்டு நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேர்ந்து படித்துக் கொண்டிருக்கும் பொறியியல் மாணவிகளும் பிரகதி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

கல்வி கட்டணத்தை திரும்பப் பெறும் வகையில் ரூ.30,000 மற்றும் தற்செயல்படி ரூ.20,000 என உதவித்தொகை வழங்கப்படுகிறது.  ஆண்டுக்கு ரூ.8 லட்சத்திற்கு குறைவான குடும்ப வருவாய் கொண்ட  மாணவிகளுக்கு  இந்த உதவித்தொகை கிடைக்கும்.

AICTE PG (GATE/GPAT) Scholarship : GATE/GPAT தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின்முதுகலை படிப்பை ஆதரிப்பதற்காக இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. GATE/GPAT மதிப்பெண் வைத்திருக்கும் மாணவர்கள் இந்த உதவித்தொகைக்கு தகுதியுடையவர்கள். அவர்கள் AICTE அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் ME / MTech / MPharma / MArch படிப்புகளின் முதல் ஆண்டில் சேர்க்கை பெற்றிருக்க வேண்டும்.

வழங்குநர்: அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (யுஜிசி)

உதவித் தொகை : மாதத்திற்கு ரூ .12,400 ,

விண்ணப்ப காலக்கெடு: செப்டம்பர் முதல் டிசம்பர் வரை.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Aicte Scholarship
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment