Advertisment

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு; ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு; நேர்முகத் தேர்வு கிடையாது; தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TRB Exam, TET exam, TET paper I, TET Paper II, தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கு பிஎட் பட்டதாரிகளும் போட்டி, டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் பாதிப்பு , டெட் தேர்வு, டிஆர்பி, TRB, TET Exam, B Ed graduates competete with Diploma holders in TET, Tamilnadu

TRB announce no interview for Polytechnic lecturer exam: பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது என தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

Advertisment

2017-18 ஆம் ஆண்டுக்கான பாலிடெக்னிக் விரைவுரையாளர் பணியிடங்களில் காலியாக இருந்த 1,060 இடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான எழுத்து தேர்வுகள் முடிந்து முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது இந்த நேரடி நியமன பணிக்கு நேற்று சான்றிதழ் சரிபார்ப்பு தொடர்பாக செய்தி வெளியிடப்பட்டது. இந்த பணிகளுக்கான தேர்வில் நேர்முகத் தேர்வு எதுவும் கிடையாது.

இதையும் படியுங்கள்: TNEA Counselling; தமிழக டாப் 25 பொறியியல் கல்லூரிகள் இவை தான்!

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில், தேர்வர்கள் போட்டி எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், கூடுதல் கல்வித் தகுதிக்கான மதிப்பெண்கள் மற்றும் பணி அனுபவ சான்றிதழ் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது.

இதன் மூலம், நேர்முகத் தேர்வு எதுவும் கிடையாது என தேர்வர்களுக்கு திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது. தேர்வர்கள் வேறுவிதமான தகவல்கள் எதையும் நம்ப வேண்டாம் என்று மீண்டும் அறிவுறுத்தப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Trb Exam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment