திருச்சி வாசிகளுக்கு குட் நியூஸ்... ஊர்க்காவல் படையில் சேர அழைப்பு

திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஊர்க்காவல் படை அமைப்பில் 53 ஆண் ஊர்க்காவல் படையினரும், 4 பெண் ஊர்க்காவல் படையினரும் மொத்தம் 57 காலிப்பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட வேண்டியுள்ளது.

திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஊர்க்காவல் படை அமைப்பில் 53 ஆண் ஊர்க்காவல் படையினரும், 4 பெண் ஊர்க்காவல் படையினரும் மொத்தம் 57 காலிப்பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட வேண்டியுள்ளது.

author-image
WebDesk
New Update
trichy home guard recruitment Tamil News

திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஊர்க்காவல் படை அமைப்பில் 53 ஆண் ஊர்க்காவல் படையினரும், 4 பெண் ஊர்க்காவல் படையினரும் மொத்தம் 57 காலிப்பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட வேண்டியுள்ளது.

ஊர்க்காவல் படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சேர விருப்பமுள்ளவர்கள் இதற்கான விண்ணப்பங்கள் திருச்சி மாவட்ட ஆயுதப்படையில் உள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.  மேற்படி, விண்ணப்பத்துடன் அதற்குண்டான சான்றிதழ்களுடன் நேரிலோ அல்லது ரூ.5 தபால் தலை ஒட்டிய சுய முகவரி எழுதப்பெற்ற உறையுடன் “காவல் சார்பு ஆய்வாளர், ஊர்க்காவல்படை அலுவலகம், ஆயுதப்படை வளாகம், சுப்ரமணியபுரம், திருச்சி” என்ற முகவரிக்கு 22.09.2025-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஊர்க்காவல் படை தேர்வு நடைபெறும் நாள் 03.10.2025 காலை 07:00 மணிக்கு மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறும்.

Advertisment

தகுதி மற்றும் விபரம்

விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 30.09.2025 அன்று 20 வயது பூர்த்தியானவராகவும், 45 வயதிற்குள் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.
நல்ல உடல் தகுதியுடையவராகவும், நன்னடத்தை உடையவராகவும் இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி/தோல்வி பெற்றவராக இருத்தல் வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்வி தகுதிக்கான டி.சி அல்லது மதிப்பெண் பட்டியல் நகல், ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டை நகல் இணைக்கப்பட வேண்டும்.

Advertisment
Advertisements

விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டை சார்ந்தவராகவும், தமிழ்நாட்டில் வசிப்பவராகவும், திருச்சி மாவட்ட காவல் துறையின் கீழ் உள்ள காவல் நிலைய எல்லையில் குடியிருப்போர் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் இவ்வமைப்பில் ஈடுபாட்டுடன் பணி புரிபவர்களாகவும், பொதுநலத்தொண்டில் ஆர்வம் உடையவராகவும் இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர்கள் ஊர்க்காவல் படையில் குறைந்தது மூன்று வருடம் பணிபுரிய விருப்பம் உடையவர்களாக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர்கள் மத்திய/மாநில அரசு ஊழியராகவோ, சுயவேலை பார்ப்பவர்களாகவோ அல்லது ஒரு நல்ல நிறுவனத்தில் பணிபுரிபவர்களாக இருத்தல் வேண்டும்.

எந்தவொரு அரசியல் கட்சியிலும் அங்கம் வகிப்பவராக இருத்தல் கூடாது. மேலும், விளையாட்டு வீரர்கள் மற்றும் பேண்டு வாத்தியம் இசைக்க தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை மற்றும் தேர்வில் தளர்வு வழங்கப்படும்.

உடற்தகுதி

மேற்படி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது சுய சரிபார்ப்பு சான்றிதழை கட்டாயம் இணைத்து அனுப்ப வேண்டும். மேற்கண்டவாறு திருச்சி மாவட்ட மாவட்ட காவல்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி: க.சண்முகவடிவேல்

Trichy

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: