Advertisment

மாதம் ரூ 10,000 ஊக்கத்தொகையுடன் தொழில்நுட்ப பயிற்சி: சென்னை, கோவை மாநகராட்சிகளில் அறிமுகம்

இந்தியா முழுவதிலும் உள்ள 4400 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பொலிவுறு நகரங்களில் பயிற்சி வாய்ப்புகளை துலிப் திட்டம் வழங்கும்.

author-image
WebDesk
New Update
Education and Jobs

TULIP- The Urban Learning Internship Program

சமீபத்தில் பட்டப்படிப்பை முடித்தவர்களுக்குப் பயிற்சி வாய்ப்புகளை வழங்குவதற்கு துலிப் (TULIP- The Urban Learning Internship Program ) என்னும் முன்மாதிரியானத் திட்டத்தை நாட்டிலுள்ள அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும், ஸ்மார்ட் சிட்டிகளிலும் மத்திய அரசு தொடங்கியது.

Advertisment

இந்தியா முழுவதிலும் உள்ள 4400 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பொலிவுறு நகரங்களில் பயிற்சி வாய்ப்புகளை துலிப் திட்டம் வழங்கும்.

இது குறித்து கோவை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில்:

இத்திட்டத்தை செம்மையாக செயல்படுத்தும் இலக்குடன் கோவை மாநகராட்சி துலிப் திட்டத்தின் கீழ் பட்டதாரிகளுக்கு பயிற்சி வாய்ப்புகளை உதவித் தொகையுடன் அளிக்க உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை வரவேற்பதாக கோவை மாநகராட்சி அறிவிக்கை வெளியிட்டுள்ளது

தொழில்நுட்ப உதவியாளர், குடிநீர் விநியோகம், தகவல் தொழில்நுட்பம், நகர்ப்புற வசதிகள் உள்ளிட்ட 8 பிரிவுகளில் பயிற்சி பெறுவோருக்கு மாதம் ரூ 10,000 உதவித் தொகை வழங்கப்படும் என்று கோவை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதேபோல் பொது சுகாதாரம், புள்ளியியல் ஆய்வு , மக்கள் தொகை கணக் கெடுப்பு, நகராட்சி நிதி நிர்வாகம் 4 பிரிவுகளில் பயிற்சி பெறுவோருக்கு மாதம் ரூ7,000 உதவித் தொகை வழங்கப்படும் எனவும் கோவை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

 

publive-image

 

பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்பிப்பதற்கான மின்னஞ்சல் முகவரியையும் கோவை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை நவீனத் தொழில்நுட்பங்கள் மற்றும் புதுமையான செயல்முறைகள் மூலம் சீரமைக்க இளைஞர்களுக்கு ஒரு வாய்ப்பை துலிப் தளம் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை மாநகராட்சியில் துலிப் திட்டம்:  

இதேபோல் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கும் மாநகராட்சி ஊழியர்களின் குழந்தைகளுக்கும் முன்னுரிமை அளித்து அவர்களுக்கு இலவச தொழில் பயிற்சி அளிக்கும், தேசிய வாழ்வியல் தொழிற்பயிற்சி முறை திட்டம் துவங்கப்படவுள்ளது. இதில் கணினி இயக்குபவர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பு உதவியாளர், குழாய் பொருத்துனர், எலக்ட்ரீசியன், பிட்டர், மோட்டார் மெக்கானிக், எலக்ட்ரானிக் மெக்கானிக் ஆகிய தொழிற்பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.

publive-image

விருப்பமுள்ள மாணவர்கள் விண்ணப்பங்களை www.chennaicorporation.gov.in அல்லது gccapp.chennaicorporation.gov.in/cciti/ ஆகிய இணையத்தளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கவும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை நவீனத் தொழில்நுட்பங்கள் மற்றும் புதுமையான செயல்முறைகள் மூலம் சீரமைக்க இளைஞர்களுக்கு ஒரு வாய்ப்பை துலிப் தளம் வழங்கும். மாணவர்களுக்கு செய்முறை அனுபவத்தை அளித்து, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பொலிவுறு நகரங்களின் செயல்பாட்டில் புதிய யோசனைகளையும், புதுமையான எண்ணங்களையும் புகுத்த துலிப் திட்டம் ஒரு கருவியாக இருக்கும் என்று முன்னதாக மத்திய அரசு  வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தின் இதர மாநகராட்சிகளிலும் இந்த பயிற்சி திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி ஆகியோருக்கு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Chennai Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment