Advertisment

பிரிட்டிஷ் நாட்டிற்கு படிக்க செல்லும் மாணவர்களுக்கு ஓர் நற்செய்தி - விவரம் உள்ளே?

Two-year post-study work visa: இந்த விசாவை 2012 இல் உள்துறை செயலாளர் தெரசா மே ரத்து செய்தார் என்பது குறிப்பிடத் தக்கது....

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
UK Brings Back 2-Year Post-Study Work Visa

UK Brings Back 2-Year Post-Study Work Visa

இரண்டு வருட பிந்தைய படிப்பு வேலை  விசாவை மீண்டும் அறிமுகப்படுத்துகிறது பிரிட்டிஷ் அரசு. 2020-21 பிரிட்டிஷ் பலகலைக்கழக சென்று படிக்கும் மாணவர்கள் இதை அனுபவிக்கலாம்.  இந்த விசா மூலம் , தகுதி வாய்ந்த இந்திய  மாணவர்கள் தங்கள் படிப்பை முடித்தவுடன்  இரண்டு வருடங்கள்  அவர்கள் விரும்பும் வேலையை செய்யவோ , அல்லது விரும்பிய வேலையைத் தேடவோஅனுமதிக்கும் என்பது குறிப்பிடத் தக்கது. இந்த விசாவை 2012 இல் உள்துறை செயலாளர் தெரசா மே ரத்து செய்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

உள்துறை செயலாளர் பிரிதி படேல் தெரிவிக்கையில் "இந்த நடவடிக்கையால்  அறிவியல்/கணிதம்/தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் ஆகியவற்றில் திறமையான சர்வதேச மாணவர்கள் இங்கிலாந்தில் படித்து, வெற்றிகரமான தொழில் வாழ்க்கையை உருவாக்கும் மதிப்புமிக்க பணி அனுபவத்தைப் பெற முடியும்" என்று கூறனார் .

இங்கிலாந்தில் கல்வி கற்கசெல்லும் இந்திய மாணவர்கள் 2019 ஜூன் மாதத்துடன் முடிவடைந்த ஆண்டில் கிட்டத்தட்ட  இருபதாயிரத்தைத்  தாண்டியுள்ளனர்.இது முந்தைய ஆண்டை விட 42 சதவீதம் அதிகம். மேலும், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட கிட்டத்தட்ட 100 சதவீதம் அதிகமாகும்.

University
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment