Advertisment

சிவில் சர்வீஸ் தேர்வு ரிசல்ட்: தமிழகம் பின் தங்கியது ஏன்?

சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு; தமிழகத்தில் இருந்து 27 பேர் மட்டுமே தேர்ச்சி; தேர்ச்சி விகிதம் குறைய காரணம் என்ன?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சிவில் சர்வீஸ் தேர்வு ரிசல்ட்: தமிழகம் பின் தங்கியது ஏன்?

UPSC civil service exam results released only 27 people cleared from Tamilnadu: யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனின் சிவில் சர்வீசஸ் தேர்வு (குடிமை பணிகள் தேர்வு) 2021 இன் முடிவுகள் திங்கட்கிழமை (மே 30) வெளியிடப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் இருந்து 27 பேர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.

Advertisment

மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் குடிமைப் பணிகள் தேர்வு 2021ஆம் ஆண்டுக்கான இறுதி தேர்ச்சி பட்டியல் திங்கட்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மொத்தம் 685 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் தமிழகத்தில் இருந்து 27 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அகில இந்திய அளவில் 42 ஆம் இடத்தை பிடித்துள்ள கோவையைச் சேர்ந்த சுவாதி ஸ்ரீ தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

இதனிடையே கடந்த சில ஆண்டுகளாக, குடிமை பணிகள் தேர்வில் தமிழகத்தில் இருந்து தேர்ச்சி பெறுவோரின் சதவீதம் குறைந்துக் கொண்டே வருகிறது. இந்த ஆண்டு தோராயமாக 4% பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த 10 ஆண்டுகளின் தேர்ச்சி சதவீதத்தில் மிக குறைவாகும். கடந்த ஆண்டு (2020) 781 பேரில் 45 பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டுக்கான 685 பேரில் 27 பேர் மட்டுமே தமிழகத்தில் இருந்து தேர்வாகியுள்ளனர். மேலும், கடந்த 2-3 ஆண்டுகளில், தமிழில் தேர்வு எழுதியவர்களில் ஓரிருவர் மட்டுமே சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவர்களிடையே சிவில் சர்வீஸ் தேர்வுக்கான ஆர்வம் குறைந்து வருவது, தனியார் துறையில் அதிக சம்பளம் வாங்கும் வேலைகள் கிடைப்பது, தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் போதிய புலமை இல்லாதது, போன்ற காரணங்களால் தேர்ச்சி சதவீதம் குறைந்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும், போதுமான அளவு ஆங்கிலம் தெரியாமல் சிவில் சர்வீசஸ் ஆப்டிட்யூட் தேர்வில் (CSAT) தேர்ச்சி பெறுவது கடினம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதையும் படியுங்கள்: TNTET தேர்வு; சிலபஸ் என்ன? தேர்வுக்கு தயாராவது எப்படி?

விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களின் எண்ணிக்கையும் குறைகிறது. முன்பெல்லாம் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகுபவர்கள் 6-7 ஆண்டுகள் வரை செலவிட தயாராக இருந்தனர். ஆனால், இப்போது ஒரிருமுறை தேர்வு எழுதுகிறார்கள். அதில் தேர்ச்சி பெறவில்லை என்றால், மாற்று வேலைவாய்ப்புகளுக்குச் செல்கிறார்கள். இப்போது அனைவரும் உடனே வேலை கிடைக்க வேண்டும் என எதிர்ப்பார்க்கிறார்கள். தேர்வர்களிடம் போதிய பொறுமையும், விடாமுயற்சியும் இல்லை, என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

அதேநேரம், மற்ற மாநிலங்களில், நேர்காணலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. மேலும், நிபுணர் பயிற்சி மற்றும் சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. எனவே தமிழகத்திலும், பள்ளிகளில் மொழித் திறனை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தவும், முதன்மைத் தேர்வுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கவும் நிபுணர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Jobs Upsc Civil Service Exam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment