Advertisment

UPSC Exam: ரிமோட் எலக்ட்ரானிக் வாக்களிக்கும் இயந்திரம், லோக் அதாலத், தேசிய கங்கை கவுன்சில்… முக்கிய டாபிக்ஸ் இங்கே!

UPSC Key: ரிமோட் எலக்ட்ரானிக் வாக்களிக்கும் இயந்திரம், லோக் அதாலத், வொக்கலிகா மற்றும் லிங்காய்த் இடஒதுக்கீடு, கோவிட், தேசிய கங்கை கவுன்சில் – UPSC தேர்வர்களுக்கான முக்கிய நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு இங்கே.

author-image
WebDesk
New Update
UPSC Exam: ரிமோட் எலக்ட்ரானிக் வாக்களிக்கும் இயந்திரம், லோக் அதாலத், தேசிய கங்கை கவுன்சில்… முக்கிய டாபிக்ஸ் இங்கே!

Priya Kumari Shukla

Advertisment

UPSC சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்கள் அவசியம் தெரிந்துக் கொள்ள வேண்டிய நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பை இப்போதும் பார்ப்போம். இது டி.என்.பி.எஸ்.சி குரூப் 1, குரூப் 2 தேர்வு எழுதுபவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

இதையும் படியுங்கள்: UPSC Exam: கார்ப்பரேட் நிர்வாகம், வீர் பால் திவாஸ், இந்தியா- நேபாளம் உறவுகள் உள்ளிட்ட முக்கிய டாபிக்ஸ் இங்கே!

புலம்பெயர்ந்தோர் அவர்கள் தங்கியிருக்கும் இடத்திலே வாக்களிக்க ஏற்பாடுகளை செய்யத் தயார் - தேர்தல் ஆணையம்

பாடத்திட்டங்கள்:

முதற்கட்ட தேர்வு: தேசிய மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த தற்போதைய நிகழ்வுகள்.

முதன்மைத் தேர்வு: பொது ஆய்வுகள் II: மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் முக்கிய அம்சங்கள்.

சிந்திக்க வேண்டிய முக்கிய புள்ளிகள்:

• சமீபத்தியச் செய்தி – இந்தியாவுக்குள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்தில் குடியேறியவர்கள் தங்கள் சொந்த தொகுதிகளுக்கு வாக்களிக்கச் செல்வதில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை அடிக்கோடிட்டுக் காட்டி, இந்திய தேர்தல் ஆணையம் (ECI) வியாழன் அன்று ரிமோட் வாக்குப்பதிவுகளைச் செய்யத் தயாராக இருப்பதாகக் கூறியது. இந்திய தேர்தல் ஆணையம் பல தொகுதி தொலை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை (RVM) உருவாக்கியுள்ளது, இது ஒரு தொலைதூர வாக்குச் சாவடியிலிருந்து வெவ்வேறு தொகுதிகளுக்கு வாக்களிக்கும் வசதியை வழங்குகிறது என ஒரு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

• ரிமோட் எலக்ட்ரானிக் வாக்களிக்கும் இயந்திரம் (RVM) - விவரமாகத் தெரிந்துகொள்ளுங்கள்

• "தொழில்நுட்ப வளர்ச்சியின் யுகத்தில் இடம்பெயர்வு அடிப்படையிலான உரிமையை மறுப்பது உண்மையில் ஒரு விருப்பமல்ல" – விவாதிக்கவும்

• ரிமோட் எலக்ட்ரானிக் வாக்களிக்கும் இயந்திரம் ஏன்?

• தொலை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் புலம்பெயர்ந்தோர் வாக்குரிமை - தொடர்புப்படுத்தவும்

• புலம்பெயர்ந்த வாக்காளர்களுடன் தொடர்புடைய சவால்கள் என்ன?

• "உள்நாட்டில் புலம்பெயர்ந்தோர்" என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன?

• ரிமோட் எலக்ட்ரானிக் வாக்களிக்கும் இயந்திரத்தை செயல்படுத்துதல் - நிர்வாக, சட்ட மற்றும் தொழில்நுட்ப சவால்கள் என்ன?

• இந்திய தேர்தல் ஆணையத்தால் முன்மொழியப்பட்ட சமீபத்திய முக்கிய தேர்தல் சீர்திருத்தங்கள் என்ன?

• இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் அரசியலமைப்பின் 324வது பிரிவு - விவரமாக அறியவும்

• தேர்தல் ஆணையத்தின் சுதந்திரமான மற்றும் பாரபட்சமற்ற செயல்பாடு - அது எப்படி உறுதி செய்யப்படுகிறது?

• இந்திய தேர்தல் ஆணையம் - அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகள்

• தேர்தல் முறை - வரலாறு

• இந்தியாவில் தேர்தல்கள் எவ்வாறு நடத்தப்படுகின்றன?

• இந்திய அரசியலமைப்பு தேர்தல் ஆணையத்தின் உறுப்பினர்களின் தகுதிகளை (சட்ட, கல்வி, நிர்வாக அல்லது நீதித்துறை) பரிந்துரைத்துள்ளது – உண்மையா, பொய்யா?

• தேர்தல் ஆணையத்தின் உறுப்பினர்களின் பதவிக்காலத்தை அரசியல் சாசனம் குறிப்பிடவில்லை – உண்மையா, பொய்யா?

• தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் மற்ற இரண்டு தேர்தல் ஆணையர்களுக்கு சமமான அதிகாரங்கள் உள்ளன – உண்மையா, பொய்யா?

• தலைமை தேர்தல் ஆணையர் மற்றும்/அல்லது மற்ற இரண்டு தேர்தல் ஆணையர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டால், இந்த விவகாரம் இந்திய உச்ச நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்படுகிறது - சரியா தவறா?

ஓ.பி.சி ஒதுக்கீட்டில் வொக்கலிகாக்கள் மற்றும் லிங்காயத்துகளின் பங்கை அதிகரிக்க, அவர்களை வகைப்படுத்த கர்நாடகா முடிவு

பாடத்திட்டங்கள்:

முதற்கட்ட தேர்வு: இந்தியா மற்றும் இந்திய அரசியல் மற்றும் ஆட்சியின் வரலாறு-அரசியலமைப்பு, அரசியல் அமைப்பு, பஞ்சாயத்து ராஜ், பொதுக் கொள்கை, உரிமைகள் சிக்கல்கள் போன்றவை.

முதன்மைத் தேர்வு: பொதுப் படிப்புகள் II: பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கான அரசின் கொள்கைகள் மற்றும் தலையீடுகள் மற்றும் அவற்றின் வடிவமைப்பு மற்றும் செயல்படுத்தலில் ஏற்படும் சிக்கல்கள்.

சிந்திக்க வேண்டிய முக்கிய புள்ளிகள்:

• சமீபத்தியச் செய்தி - கர்நாடக அமைச்சரவை வியாழன் அன்று மாநிலத்தில் உள்ள இரண்டு ஆதிக்க சமூகங்களான வொக்கலிகாக்கள் மற்றும் லிங்காயத்துகளை "பிற்படுத்தப்பட்ட" பிரிவில் இருந்து "இதர பிற்படுத்தட்டோர் (ஓ.பி.சி)" என்று வகைப்படுத்த முடிவு செய்தது.

• லிங்காயத்துகள் மற்றும் வொக்கலிகாக்கள் என்பவர்கள் யார்?

• வொக்கலிகாக்கள் மற்றும் லிங்காயத்துகள் - விவரமாகத் தெரிந்துக் கொள்ளவும்

• இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (OBC) இடஒதுக்கீட்டில் அவர்களின் பங்கை அதிகரிக்கக் கூடிய நடவடிக்கையில், மாநிலத்தில் உள்ள இரண்டு ஆதிக்கச் சமூகங்களான வொக்கலிகாக்கள் மற்றும் லிங்காயத்துகளை "பிற்படுத்தப்பட்ட" பிரிவில் இருந்து "இதர பிற்படுத்தப்பட்டவர்கள்" என வகைப்படுத்த கர்நாடக அமைச்சரவை ஏன் முடிவு செய்தது?

• உங்கள் தகவலுக்கு - கர்நாடகாவின் ஆறு கோடி மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 17% உள்ள லிங்காயத்துகள் ஆதிக்கம் செலுத்தும் சமூகமாகும். மாநிலத்தின் 224 சட்டமன்றத் தொகுதிகளில் 90-100 வரையிலான தேர்தல் முடிவுகளை சமூகம் தீர்மானிக்க முடியும். வீரசைவ லிங்காயத்துகள் என்று அழைக்கப்படும் இந்து துணை சாதியாக வகைப்படுத்தப்பட்ட லிங்காயத்துகள், அடிப்படையில் 12 ஆம் நூற்றாண்டின் தத்துவஞானி புனித பசவண்ணாவின் பின்பற்றுபவர்கள் ஆவர், பசவண்ணா சமூகத்தின் பிரிவுகளை சாதியின் சங்கிலிகளிலிருந்து உடைக்க உதவும் இயக்கத்தைத் தொடங்கினார்.

• அவர்கள் எப்படி அரசியல் ரீதியாக இணைந்திருக்கிறார்கள்?

• தற்போதைய சர்ச்சை என்ன?

• அரசியல் மாற்றங்கள் என்ன?

• செய்திகளில் ஆளுமை - பசவேஸ்வரா

NREGS-ன் கீழ் சிறிய ஆறுகளுக்கு புத்துயிர் அளிக்கும் திட்டம் குறித்து பிரதமர் ஆலோசனை

பாடத்திட்டங்கள்:

முதற்கட்டத் தேர்வு: இந்திய அரசியல் மற்றும் ஆட்சி-அரசியலமைப்பு, அரசியல் அமைப்பு, பஞ்சாயத்து ராஜ், பொதுக் கொள்கை, உரிமைகள் சிக்கல்கள் போன்றவை.

முதன்மைத் தேர்வு: பொதுப் படிப்புகள் II: பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கான அரசின் கொள்கைகள் மற்றும் தலையீடுகள் மற்றும் அவற்றின் வடிவமைப்பு மற்றும் செயல்படுத்தலில் ஏற்படும் சிக்கல்கள்.

சிந்திக்க வேண்டிய முக்கிய புள்ளிகள்:

• சமீபத்தியச் செய்தி - தேசிய கங்கை கவுன்சிலின் இரண்டாவது கூட்டத்தின் போது தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நிதியைப் பயன்படுத்தி கடந்த நான்கு ஆண்டுகளில் முக்கியமாக உ.பி.யில் உள்ள சுமார் 75 சிறிய ஆறுகளை புத்துயிர் பெறும் முயற்சியை மத்திய அரசு வெளிப்படுத்தும் நிகழ்ச்சி, கொல்கத்தாவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது.

• தேசிய கங்கை கவுன்சில் - அதன் அமைப்பைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

• தேசிய கங்கை கவுன்சில் தலைவர் யார்?

• தேசிய கங்கை கவுன்சில் சட்டப்பூர்வமான அமைப்பா?

• தேசிய கங்கை கவுன்சிலின் (NGC) செயல்பாடுகள் என்ன?

• தேசிய கங்கை கவுன்சிலின் (NGC) நோக்கங்கள் என்ன?

• உங்களின் தகவலுக்கு - இது 2019 ஆம் ஆண்டு முதல் கவுன்சிலின் முதல் கூட்டமாகும், இது நதியை சுத்தப்படுத்தும் பொறுப்பு மற்றும் உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், பீகார், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்காளத்தின் முதல்வர்களை உறுப்பினர்களாக உள்ளடக்கியிருக்கும். இந்த கவுன்சிலில் நிதி அமைச்சர், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் மற்றும் மின்துறை அமைச்சர் உட்பட பல மத்திய அமைச்சர்களும் உள்ளனர்.

• கங்கை தூய்மைக்கான தேசிய இயக்கம் (NMCG) - விவரமாக அறிந்து கொள்ளுங்கள்

• கங்கை தூய்மைக்கான தேசிய இயக்கத்தின் (NMCG) செயல்பாடுகள் என்ன?

• கங்கை தூய்மைக்கான தேசிய இயக்கத்தின் (NMCG) நோக்கங்கள் என்ன?

கோவிட், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு

பாடத்திட்டங்கள்:

முதல்நிலைத் தேர்வு: பொது அறிவியல் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த தற்போதைய நிகழ்வுகள்.

முதன்மைத் தேர்வு:

• பொது ஆய்வுகள் II: பல்வேறு துறைகளில் வளர்ச்சிக்கான அரசின் கொள்கைகள் மற்றும் தலையீடுகள் மற்றும் அவற்றின் வடிவமைப்பு மற்றும் செயல்படுத்தலில் எழும் சிக்கல்கள்.

• பொது ஆய்வுகள் III: தகவல் தொழில்நுட்பம், விண்வெளி, கணினிகள், ரோபாட்டிக்ஸ், நானோ தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் விழிப்புணர்வு.

சிந்திக்க வேண்டிய முக்கிய புள்ளிகள்:

• சமீபத்திய செய்தி - 'அடுத்த 40 நாட்கள் முக்கியமானதாக இருக்கும்' என்ற சமீபத்திய அறிக்கை முந்தைய கோவிட் அலைகளின் வடிவங்களிலிருந்து ஊகிக்கப்படுகிறது. தொற்றுநோய்க்கு மூன்று ஆண்டுகளில், சூழல் மாறிவிட்டது மற்றும் கடந்த கால வடிவங்கள் முடிவெடுப்பதற்கு உதவிகரமான வழிகாட்டியாக இல்லை என சந்திரகாந்த் லஹரியா எழுதியுள்ளார்.

• ‘சீனாவில் மிகப்பெரிய மற்றும் தற்போதைய கோவிட்-19 அலை இந்தியாவில் நான்காவது அலையைப் பற்றிய ஊகங்களைத் தொடங்கியுள்ளது’ - தற்போது இந்தியாவின் நிலை என்ன?

• இந்தியாவில் புதிய கோவிட் அலை உண்மையில் சாத்தியமா?

• 'எந்தவொரு அமைப்பிலும் அல்லது நாட்டிலும் ஒரு நோய் அதிகரிப்பு அல்லது தொற்றுநோய் என்பது கடத்திகள், நோய் தொற்றுக்கு ஆளாகுபவர் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளின் "தொற்றுநோய் முக்கோணத்திற்கு" இடையிலான சிக்கலான தொடர்புகளின் விளைவாகும்' - விரிவாக்கம்

• கோவிட்-19 இல், கடத்தி, நோய் தொற்றுக்கு ஆளாகுபவர்கள் யார் மற்றும் சுற்றுச்சூழல்/வெளிப்புற காரணிகள் என்ன?

• ஆசிரியரின் கூற்றுப்படி, ‘இந்தியாவில் ஒரு புதிய அலையானது தொற்றுநோயியல் முக்கோணத்தின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கூறுகளில் பெரிய மாற்றங்கள் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும்’ - தொற்றுநோயியல் முக்கோணத்தின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கூறுகளில் அந்த முக்கிய மாற்றங்கள் என்ன?

• சீனாவில் ஏற்பட்ட கோவிட் அலை இந்தியாவின் நிலைமையை மாற்றிவிட்டதா?

• 'ஏஜென்ட் காரணியில், ஒமிக்ரான் (B.1.1.529) மற்றும் XBB, மற்றும் BF.7 போன்ற அதன் துணை வரிசைகள் சீனாவில் பரவுகின்றன' - B.1.1.529, XBB மற்றும் BF7 பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?

• முந்தைய அலைகளின் போது காணப்பட்ட வடிவங்களை மேற்கோள் காட்டி, ஜனவரி மாதத்தில் பாதிப்புகள் அதிகரிப்பதை இந்தியா காணலாம் - முந்தைய அலைகளின் போது என்ன மாதிரிகள் காணப்பட்டன?

• சீனாவில் கோவிட் பாதிப்புகளின் திடீர் அதிகரிப்புக்கான காரணம் என்ன?

• “கோவிட் இறப்புகள் குறித்த சீனாவின் வரையறை மிகவும் குறுகியதாக இருந்தது” - கோவிட் குறித்த சீனாவின் கொள்கை என்ன?

• சீனா கோவிட்-19 அதிகரிப்பு: என்ன நடக்கிறது?

• கோவிட் அதிகரிப்பு: சீனாவில் என்ன வித்தியாசம்?

• கோவிட்-19 பரவுவதைக் கட்டுப்படுத்த இந்திய அரசு என்ன நடவடிக்கைகள் எடுத்தது?

• பாதிப்புகளின் சாத்தியமான அதிகரிப்பு பற்றி அரசாங்கம் என்ன செய்கிறது?

வரலாறு கொண்ட ஒரு பிணைப்பு

பாடத்திட்டங்கள்:

முதற்கட்ட தேர்வு: தேசிய மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த தற்போதைய நிகழ்வுகள்.

முதன்மைத் தேர்வு: பொது ஆய்வுகள் II: இருதரப்பு, பிராந்திய மற்றும் உலகளாவிய குழுக்கள் மற்றும் இந்தியா மற்றும்/அல்லது இந்தியாவின் நலன்களைப் பாதிக்கும் ஒப்பந்தங்கள்.

சிந்திக்க வேண்டிய முக்கிய புள்ளிகள்:

• சமீபத்திய செய்தி - ஆர்மீனியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான கூட்டாண்மை அரசாங்கங்களால் மட்டும் இல்லை. இது இரு நாடுகளைச் சேர்ந்த சாதாரண மக்களால் பெரிய அளவில் முன்னோக்கி தள்ளப்படுகிறது. அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் என ஆர்மென் சர்கிசியன் எழுதியுள்ளார்.

• இந்தியா மற்றும் ஆர்மீனியா - வரலாற்று பின்னணி

• இந்தியாவிற்கும் ஆர்மீனியாவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் - விரிவாகத் தெரிந்துக் கொள்ளவும்.

• வரைபடம் - ஆர்மீனியா

• ஆர்மீனியாவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்துவது பற்றிய இந்தியாவின் கூறப்பட்ட கொள்கை - விவரமாக தெரிந்துக் கொள்ளவும்.

• ஆர்மீனியாவுடனான ஆழமான ஒத்துழைப்பு இந்தியாவிற்கு பொருளாதார ரீதியாக எவ்வளவு நன்மை பயக்கும்?

• காகசஸ் பகுதியில் எந்த நாடுகள் உள்ளன?

• ஷஹாமிர் ஷஹாமிரியன் யார்?

• இந்தியா மற்றும் ஆர்மீனியா இடையே இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடுகளின் நிலை எப்படி உள்ளது?

• இந்தியா கடந்த காலங்களில் ஆர்மீனியாவுக்கு அவ்வப்போது உதவி செய்துள்ளது - எப்படி, எந்த சூழ்நிலையில்?

• ஆர்மீனியாவில் இந்திய புலம்பெயர்ந்தோர் - விரிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்

லோக் அதாலத் மூலம் கடன் வசூலிப்பது ஏன் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது?

பாடத்திட்டங்கள்:

முதற்கட்டத் தேர்வு: பொருளாதாரம் மற்றும் சமூக மேம்பாடு-நிலையான மேம்பாடு, வறுமை, உள்ளடக்கம், மக்கள்தொகை, சமூகத் துறை முயற்சிகள் போன்றவை.

முதன்மைத் தேர்வு: பொது ஆய்வுகள் III: இந்தியப் பொருளாதாரம் மற்றும் திட்டமிடல், திரட்டுதல், வளங்கள், வளர்ச்சி, மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான சிக்கல்கள்.

சிந்திக்க வேண்டிய முக்கிய புள்ளிகள்:

• சமீபத்தியச் செய்தி - லோக் அதாலத் மற்றும் திவால்நிலை மற்றும் திவால்நிலைக் குறியீடு (IBC) வழி உட்பட பல்வேறு மீட்பு சேனல்களுக்கு வங்கிகளால் குறிப்பிடப்பட்ட செயல்படாத சொத்துக்களின் எண்ணிக்கை (NPAs) (வராக்கடன்கள்) 2021-22ல் ஒப்பிடும்போது நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. 2020-21 லட்சக்கணக்கான சிறு மதிப்பு கடன்கள் வங்கிகளின் லோக் அதாலத்களுக்குத் தீர்வு காண பரிந்துரைக்கப்பட்டன.

• கடன் வசூலிப்பதற்கான லோக் அதாலத் என்றால் என்ன?

• வழக்குகளின் எண்ணிக்கை ஏன் அதிகரிக்கிறது?

• லோக் அதாலத்துக்கு எத்தனை வழக்குகள் பரிந்துரைக்கப்பட்டன?

• IBC வழக்குகளில் முன்னேற்றம் என்ன?

• DRTகள் மற்றும் SARFAESI வழிகள் எவ்வாறு செயல்பட்டன?

• திவால் மற்றும் திவால் குறியீடு (IBC) என்றால் என்ன?

இதுதொடர்பான மேலும் முழு விவரங்களுக்கு இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் பிற கட்டுரைகளை படியுங்கள்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Upsc Civil Service Exam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment