Advertisment

UPSC Recruitment 2019: யூ.பி.எஸ்.சி வேலைவாய்ப்பு அறிவிப்பு, தகவல்கள் உள்ளே

UPSC Recruitment Notification for 48 Posts Released: ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (யூ.பி.எஸ்.சி ) இந்திய அரசில் பல மட்டத்தில் காலியாக இருக்கும் 48 பணிகளுக்கான ஆன்லைன் விண்ணபங்களை வரவேற்கின்றது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
jobs-in-ayush-ministry-cbse-non-teaching-post-isro-ibps-upsc-recuritment-to-apply-this-week : அப்ளை செய்யுங்கள்

jobs-in-ayush-ministry-cbse-non-teaching-post-isro-ibps-upsc-recuritment-to-apply-this-week : அப்ளை செய்யுங்கள்

UPSC Recruitment Notification 2019: ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (யூ.பி.எஸ்.சி ) இந்திய அரசில் பல மட்டத்தில் காலியாக இருக்கும் 48 பணிகளுக்கான ஆன்லைன் விண்ணபங்களை வரவேற்கின்றது.

Advertisment

சீனியர் டிசைன் ஆபிசர் கிரேட் I ( கன்ஸ்ட்ரக்ஷன் ), சீனியர்  டெக்னிக்கல் ஆபிசர், டிரெக்டர் (சேப்ட்டி) போன்ற பல பணிகளுக்கு தேர்வர்கள் விண்ணபிக்கலாம்.

publive-image

 

விண்ணப்பிப்பதற்கான முக்கிய தேதிகள்:  

விண்ணப்பிக்க ஆர்வம் இருக்கும் தேர்வர்கள் வரும் டிசம்பர் மாதம் 12ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

 

தேர்ந்தெடுக்கும் முறை :  தேர்வர்கள்  சமர்ப்பித்த ஆன்லைன் விண்ணப்பங்களில் வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஒரு நேர்காணலின் மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள் .

காலியிடங்கள்:  மொத்த காலியிடங்கள் : 48

காலியிடங்கள் பற்றிய விவரங்கள்: 

publive-imagepublive-image

தேர்வுக் கட்டணம்: பொதுபிரிவு, ஓபிசி வகை தேர்வர்கள்  விண்ணப்பக்  கட்டணமாக  ரூ .25 செலுத்த வேண்டும். எஸ்சி / எஸ்டி / பெண்கள் போன்ற வகை தேர்வர்கள்  விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

விண்ணப்பிப்பது எப்படி :  தேர்வர்கள், டிசம்பர் 12, 2019 க்குள் யூபிஎஸ்சி-ன்  அதிகாரப்பூர்வ வலைத்தளமான- upsconline.nic.in  சென்று விண்ணப்பிக்க வேண்டும். தகுதிவாய்ந்த வேட்பாளர்களுக்கான நேர்காணல் தேதிகள்  யுபிஎஸ்சி பின்னர் அறிவிக்கும்.

நேர்காணலின் போது எடுத்து செல்ல வேண்டிய ஆவணங்கள் :

-மெட்ரிகுலேஷன் / 10 வது தர மதிப்பெண் தாள் (அல்லது) பிறந்த தேதியைக் குறிக்கும் சமமான சான்றிதழ்.

கல்வித் தகுதிக்கு சான்றாக  பட்டம் / டிப்ளோமா சான்றிதழ்.

அனுபவ சான்றிதழுக்கு  வேலைசெய்த அமைப்பு / துறையிலிருந்து சான்றிதழ்.

எஸ்சி / எஸ்டி / ஓபிசி என இடஒதுக்கீடு கோரும் வேட்பாளரின் சாதி சான்றிதழ்  , தகுதிவாய்ந்த அதிகாரத்தால் வழங்கப்பட்ட உடல் ஊனமுற்றோர் சான்றிதழ்.

Upsc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment