Advertisment

சமூக நலத் துறை வேலை வாய்ப்பு; 8-ம் வகுப்பு படித்தவர்கள் உடனே விண்ணப்பிங்க!

வேலூர் மாவட்ட சமூக நலத்துறை வேலை வாய்ப்பு; 8 ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
jobs

அரசு வேலைவாய்ப்பு

வேலூர் மாவட்ட சமூகப்பாதுகாப்புத் துறையில் உளவியலாளர், பாதுகாவலர், சமையலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 4 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 31.03.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

இதையும் படியுங்கள்: சென்னையில் மத்திய அரசு வேலை; 12-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிங்க!

உளவியலாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : உளவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 35 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 15,000

பாதுகாவலர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 33 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 12,000

சமையலர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 33 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 10,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s31651cf0d2f737d7adeab84d339dbabd3/uploads/2023/03/2023031015.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, அண்ணா சாலை, வேலூர் – 632001.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.03.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s31651cf0d2f737d7adeab84d339dbabd3/uploads/2023/03/2023031011.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vellore Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment