Lok Sabha Election Schedule 2019

17வது மக்களவை தேர்தல் ஏழு கட்டமாக இந்த முறை நடைபெறுகிறது. வரும் ஏப்ரல் 11-ம் தேதி இந்த தேர்தல் தொடங்குகிறது. இந்த தேர்தலின் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாக

இருக்கிறது. தேர்தலின் முதல் கட்டத்தில் பெரும்பாலான மாநிலங்கள் இடம்பெறுகின்றன. 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகள் இதில் உள்ளடக்கம். இரண்டாவது கட்டத் தேர்தல், ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறுகிறது. மொத்தம் 13 மாநிலங்களில் உள்ள 97 தொகுதிகள் இதில் இடம்பெறும். மூன்றாவது கட்டத் தேர்தல், ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறுகிறது. இதில் 14 மாநிலங்களில் உள்ள 115 தொகுதிகள் இடம்பெறும். இதை தொடர்ந்து நான்காவது கட்டத் தேர்தல், ஒன்பது மாநிலங்களில் உள்ள 71 தொகுதிகளுக்கு ஏப்ரல் 29-ம் தேதி நடைபெறும். ஐந்தாவது கட்டத்தில், ஏழு மாநிலங்களில் 51 தொகுதிகளுக்கான வாக்கெடுப்பு மே 6-ம் தேதி நடைபெறும். ஆறாவது கட்டத்தில் ஏழு மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு மே 12-ம் வாக்கெடுப்பு நடைபெறும். இறுதியாக ஏழாவது கட்டம் மே 19-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இதில் எட்டு மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகள் இடம்பெறும். இந்த மக்களவைத் தேர்தல் பிரதமர் நரேந்திர மோடி தன் பதவியை தக்கவைத்துக் கொள்வாரா என்ற முடிவினை தெரியப்படுத்தும். அதே சமயம் 2014-ம் ஆண்டு வெறும் 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற காங்கிரஸின் நிலைமையை அதன் தலைவர் ராகுல் காந்தி மாற்றி அமைப்பாரா? என்பதும் தேர்தல் முடிவில் புலப்படும்.

Read More
இதைப் பாருங்க!
X