Advertisment

இவங்களை சமாளிப்பது திமுகவுக்கு பெரும்பாடு… எதிர்க்கட்சி வரிசையில் வலுவான எம்எல்ஏக்கள் யார், யார்?

சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும், இந்த தேர்தலில் ஒரு பெரிய திமுக ஆதரவு அலை வீசும் என ஆதரவு எதிர்பார்த்திருந்த திமுகவுக்கு இந்த தேர்தல் முடிவுகள் ஒரு வகையில் ஏமாற்றம்தான்.

author-image
WebDesk
New Update
aiadmk, dmk, aiadmk become strong opposition party, aiadmk leaders, ops, eps, sp velumani, kp munusamy, vijaya baskar, அதிமுக வலுவான எதிர்க்கட்சி, பாமக, பாஜக, ஒபிஎஸ், இபிஎஸ், எஸ்பி வேலுமணி, கேபி முனுசாமி, bjp, pmk, nainar nagendran, gk mani

சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும், இந்த தேர்தலில் ஒரு பெரிய திமுக ஆதரவு அலை வீசும் என ஆதரவு எதிர்பார்த்திருந்த திமுகவுக்கு இந்த தேர்தல் முடிவுகள் ஒரு வகையில் ஏமாற்றம்தான். ஏனென்றால், திமுக 176 இடங்களில் போட்டியிட்ட திமுக 133 இடங்களில் பெரும்பான்மை வெற்றியைப் பெற்றிருந்தாலும் அதிமுக கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்று ஒரு வலுவனா எதிர்க்கட்சியாக எழுந்துள்ளது. இதில் அதிமுக மட்டும் 66 இடங்களிலும் பாமக 5 இடங்களிலும் பாஜக 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

Advertisment

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய சென்னையை ஓட்டியுள்ள மாவட்டங்களில் திமுக ஸ்வீப் அடித்தது. அதே நேரத்தில், அதிமுக கோவை மாவட்டத்தில் ஸ்வீப் அடித்தது. சென்னைக்கு வெளியே திமுக திருசி, பெரம்பலூர், அரியலூர், மாவட்டங்களில் ஸ்வீப் செய்துள்ளது. ஆனாலும், அதிமுக ஒரு வலுவான எதிர்க்கட்சியாக தக்கவைத்துக்கொண்டுள்ளது. அதுமட்டுமல்ல, அதிமுகவில் முக்கிய தலைவர்களான எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன், எஸ்.பி.வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன், செல்லூர் ராஜு, செங்கோட்டையன், தங்கமணி, விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட தலைவர்கள் வெற்றி பெற்று சட்டப் பேரவைக்கு எம்.எல்.ஏ.க்களாக வருகிறார்கள். அதே போல, பாமகவில் ஜி.கே.மணி, பாஜகவில் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் ஆகியோரும் எதிர்க்கட்சி தலைவர்களாக வருகிறார்கள்.

இதனால், சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி வரிசையில் வலுவான எம்.எல்.ஏ.க்கள் பலர் இருப்பதால் சட்டப்பேரவை விவாதங்களில் திமுகவுக்கு இவர்களை சமாளிப்பது பெரும்பாடாக இருக்கும் என்று அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Dmk Aiadmk Pmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment