Advertisment

Scrutiny Of Nominations Live Updates: தமிழிசை வேட்பு மனு ஏற்பு

ஏறக்குறைய 1,575 வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
news in tamil

news in tamil : தமிழிசை பேட்டி!

Election 2019: தமிழகத்தில் ஏப்ரல் 18-ம் தேதி, மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த 19-ம் தேதி தொடங்கி, நேற்று வரை நடைபெற்றது.

Advertisment

ஏறக்குறைய 1,575 வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து இன்று, வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது.

29-ம் தேதி வேட்பாளர்கள் தங்களது மனுக்களை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.

Live Blog

Election 2019 - Live updates: Scrutiny of Nominations

இன்று வேட்பு மனு பரிசீலனை!



























Highlights

    15:04 (IST)27 Mar 2019

    கனிமொழி வேட்பு மனு ஏற்பு

    தூத்துக்குடியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் கனிமொழியின் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது. 

    14:33 (IST)27 Mar 2019

    தமிழிசை மனு ஏற்பு

    பா.ஜ.க சார்பில் தூத்துக்குடியில் போட்டியிடும் தமிழிசை செளந்திரராஜனின் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது. 

    14:31 (IST)27 Mar 2019

    கனிமொழியின் மனு பரிசீலனை

    தூத்துக்குடி மக்களவைத் தொகுதி தி.மு.க வேட்பாளர் கனிமொழியின் வேட்பு மனு மீதான பரிசீலனை நடந்துக் கொண்டிருக்கிறது. 

    14:18 (IST)27 Mar 2019

    தயாநிதி மாறன் மனு ஏற்பு

    மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் தயாநிதி மாறன் மற்றும் பா.ம.க வேட்பாளர் சாம் பால் ஆகியோரின்  வேட்புமனுக்கள் ஏற்பு.

    14:16 (IST)27 Mar 2019

    பவர் ஸ்டார் மனு ஏற்பு

    தென் சென்னை மக்களவை தொகுதியில்  போட்டியிடும் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் வேட்புமனு ஏற்பு

    14:02 (IST)27 Mar 2019

    அ.ம.மு.க வேட்பாளர் மனு நிராகரிப்பு

    கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் அமமுக வேட்பாளர் கார்த்திக் வேட்புமனு நிராகரிப்பட்டுள்ளது.

    13:02 (IST)27 Mar 2019

    தி.மு.க வழக்கறிஞர் அணிக்கு பாராட்டு

    தூத்துக்குடி பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை, நாமக்கல் அ.தி.மு.க வேட்பாளர் காளியப்பன் ஆகியோர் வேட்பு மனுவில் குறிப்பிடாத விஷயங்களைக் கண்டறிந்த தி.மு.க வழக்கறிஞர் அணிக்கு அனைத்துத் தரப்பினரும் பாராட்டு. 

    12:58 (IST)27 Mar 2019

    சிவகங்கை தொகுதி வேட்பாளர்கள் மனு ஏற்பு

    சிவகங்கை தொகுதியில், பா.ஜ.க சார்பில் போட்டியிடும் ஹெச்.ராஜா, காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் கார்த்தி சிதம்பரம், ம.நீ.ம சார்பில் போட்டியிடும் சினேகன் ஆகியோரின் வேட்பு மனு ஏற்பு.

    12:54 (IST)27 Mar 2019

    அ.தி.மு.க வேட்பாளர் மனு நிறுத்தி வைப்பு

    நாமக்கல் அ.தி.மு.க வேட்பாளர் காளியப்பன் மத்திய அரசு பணியில் ஒப்பந்ததாரராக இருப்பதால் அவரது வேட்பு மனு 2 மணி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  

    12:35 (IST)27 Mar 2019

    தமிழிசை வேட்பு மனு தற்காலிக நிறுத்தம்

    தூத்துக்குடி தொகுதியில் பா.ஜ.க சார்பில், போட்டியிடும் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்திரராஜன், பாரத் பெட்ரோலிய நிறுவனத்தில் இயக்குநராக உள்ளதை தெரிவிக்காததால், வேட்புமனுவை ஏற்கக் கூடாது என திமுக எதிர்ப்பு. இதனால் அவரது வேட்பு மனு மீதான பரிசீலனை பகல் 1:30 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

    11:12 (IST)27 Mar 2019

    தென் சென்னை வேட்பு மனு

    தமிழகத்தில் மொத்தம் 1,575 மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  இதில் அதிகபட்சமாக தென் சென்னையில் 69 பேர் மனுத்தாக்கல் செய்திருக்கிறார்கள். 

    10:10 (IST)27 Mar 2019

    மனு பரிசீலனை தொடக்கம்

    வேட்பாளர்கள் குறிப்பிட்டுள்ள விபரங்கள் அனைத்தும் சரியாக இருக்கிறதா என்பதை சரி பார்த்து, வேட்பு மனுவை பரிசீலிக்கும் பணி துவங்கியது. 

    மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் தமிழகத்தில் நேற்றோடு முடிவடைந்தது. இன்று மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது.
    Lok Sabha General Election
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment