Advertisment

Election 2019: மக்கள் நீதி மய்யம் முதற்கட்ட வேட்பாளர்கள் லிஸ்ட்! அறிவித்த கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் பட்டியல்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
bjp congress to release tamilnadu candidates list today live updates - மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் பட்டியல்

bjp congress to release tamilnadu candidates list today live updates - மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் பட்டியல்

BJP, Congress Candidates To Be Announce Today: தமிழகத்தைப் பொறுத்தவரை தேசியக் கட்சிகளான பாஜக அதிமுக கூட்டணியிலும், காங்கிரஸ் திமுக கூட்டணியிலும் இடம்பெற்றுள்ளன. இதில் காங்கிரஸுக்கு 10 தொகுதிகளும், பாஜகவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

Advertisment

தமிழகத்தின் பெரும்பாலான கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்துவிட்ட நிலையில், பாஜகவும், காங்கிரஸும் இன்று தத்தமது வேட்பாளர்களை அறிவிக்க உள்ளன.

பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு குறித்த உடனுக்குடனான தகவல்களுக்கு ஐஇ தமிழுடன் இணைந்திருங்கள்.

Live Blog

BJP, Congress Candidates List



























Highlights

    15:13 (IST)20 Mar 2019

    மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள்

    2019 மக்களவை தேர்தல், 18 சட்டமன்ற இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் 21 வேட்பாளார்கள் பட்டியலை கமல்ஹாசன் வெளியிட்டார். மீதமுள்ள வேட்பாளர்கள் பட்டியல் வரும் 24ம் தேதி கோவையில் வெளியிடப்படும் எனவும் கமல்ஹாசன் தெரிவித்தார். 

    14:31 (IST)20 Mar 2019

    வாக்களிக்க 11 ஆவணங்கள்

    ஆதார், ஓட்டுநர் உரிமம், புகைப்படத்துடன் கூடிய வங்கி - அஞ்சலக கணக்கு புத்தகம், பான் கார்டு, ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் பணி அட்டை உள்ளிட்ட 11 ஆவணங்களை வாக்காளர்கள் பயன்படுத்தி வாக்களிக்கலாம் - தேர்தல் ஆணையம்

    13:34 (IST)20 Mar 2019

    கட்சிக் கொடி பயன்படுத்த விதிமுறை

    தேர்தல் அதிகாரிகளிடம் அனுமதி பெற்ற வாகனங்களில் மட்டும் கட்சிக்கொடி பயன்படுத்த வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ 

    12:59 (IST)20 Mar 2019

    பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி

    அனைத்து விவசாயிகளின் பயிர்க்கடன்களும் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதியாக மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார்.

    12:01 (IST)20 Mar 2019

    ராமதாஸிடம் சுதீஷ் வாழ்த்து

    தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாசை கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளரும் தேமுதிக இளைஞரணி தலைவருமான எல்.கே.சுதீஷ் சந்தித்து வாழ்த்து பெற்றார். தேமுதிகவின் வட சென்னை தொகுதி வேட்பாளர் மோகனராஜ் உடன் இருந்தார்.

    11:45 (IST)20 Mar 2019

    சுயநலவாதிகள் செய்த சதி

    அதிமுகவை உடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சில சுயநலவாதிகள் செய்த சதியினால் 18 தொகுதிகளில் இடைத்தேர்தலை சந்திக்க நேரிட்டுள்ளது என சேலத்தில் தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேசியுள்ளார்.

    10:48 (IST)20 Mar 2019

    மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் பட்டியல்

    பாராளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களின் பட்டியலை, *இன்று (20/03/2019- புதன்கிழமை) சென்னை ஜி.ஆர்.டி கிரண்ட் ஹோட்டலில் மதியம் 2.3* மணியளவில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிடவிருக்கிறார்.

    10:38 (IST)20 Mar 2019

    பிரச்சாரத்தை துவக்கிய ஓ.பி.எஸ்

    அலங்காநல்லூரில் உள்ள மஞ்சமலை கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம். அலங்காநல்லூர் & பாலமேட்டில் ஜல்லிக்கட்டு காளைகளுடன் துணை முதல்வர், அவரது மகன் ரவீந்திரநாத் குமாருக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.

    10:07 (IST)20 Mar 2019

    பாஜக வேட்பாளர்கள் வெளியீட்டின் தாமதம் ஏன்?

    அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜகவின் வேட்பாளர்கள் பட்டியல், ஏற்கனவே இறுதி செய்யப்பட்டுவிட்ட நிலையில், கடந்த ஞாயிறு அன்று, கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானதால், பட்டியல் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    09:36 (IST)20 Mar 2019

    பிற்பகலுக்குள் பாஜக வேட்பாளர்கள் பட்டியல்

    'மத்திய தேர்தல் குழு தமிழக பாஜக வேட்பாளர் பட்டியலை இன்று அறிவிக்கிறது. டெல்லி சென்று உத்தேச பட்டியலை அளித்துள்ளேன். இன்று பிற்பகலுக்குள் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும்' என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

    நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. வரும் ஏப்ரல் 18ஆம் தேதி, தமிழகத்தின் 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியின் ஒரு தொகுதிக்கும் தேர்தல் நடத்தப்பட உள்ளது.
    Bjp All India Congress General Election
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment