BJP leader Amit Shah Visits Tamil Nadu Today : தேர்தல் பிரச்சாரம் உச்ச கட்டத்தில் இருக்கின்ற நிலையில், தமிழக பாஜக தலைவர்களை ஆதரித்து பேசுவதற்காக இன்று தமிழகம் வந்துள்ளார் பாஜக தலைவர் அமித் ஷா. இன்று மூன்று இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் தங்களின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பேச உள்ளார் அமித் ஷா.
தூத்துக்குடி தொகுதியில், பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். பாஜக வேட்பாளார்கள் எச்.ராஜா மற்றும் சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரையும் ஆதரித்து சிவகங்கை மற்றும் கோவையிலும் வாக்கு சேகரிக்க உள்ளார் அமித் ஷா.
அமித் ஷா தூத்துக்குடியில் தற்போது பேசி வருகிறார். அதன் லைவ்வை பார்க்க
Live Blog
15 மற்றும் 16 தேதிகளில் நரேந்திர மோடி மற்றும் நிதின் கட்கரி தமிழகம் வருகை புரிய உள்ளனர்.
கனிமொழி,ராஜா, சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் போன்ற ஊழல்வாதிகளாக நாங்கள் இல்லை. தமிழக வளர்ச்சிக்காக பாஜக பல்வேறு நலத்திட்டங்களை வருங்காலத்தில் இந்த அரசு கொண்டு வரும். 39+1 தேசிய ஜனநாயக கூட்டணியை வெற்றி பெற வையுங்கள். உங்களின் வளர்ச்சியை நாங்கள் பார்த்துக் கொள்வோம் என்று தூத்துக்குடியில் தன் உரையை முடித்துக் கொண்டு தற்போது சிவகங்கை தொகுதி வேட்பாளரான எச். ராஜாவை ஆதரித்து பேசுவதற்காக புதுக்கோட்டை சென்றுள்ளார்.
வருமானவரி வரம்பு தளர்த்தப்பட்டது குறித்தும், மீனவர்கள் நலன்களை பாதுகாக்க ஒரு குழுவையும், மதுரையில் எய்ம்ஸ் கட்ட, தேசிய நெடுஞ்சாலை 23,000 கோடி ரூபாய் என பாஜக செய்த சாதனைகளையும், தமிழகத்திற்கு ஒதுக்கிய நிதிகளையும் பட்டியலிட்டு வருகிறார் அமித் ஷா.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights