இது ஸ்டாலினுக்கே உண்டான ஸ்டைல்… எப்படியெல்லாம் வாக்கு சேகரிக்கிறார் பாருங்க!

அந்த ஸ்டைலை இப்போதும் விடாமல் ஃபலோ செய்கிறார் ஸ்டாலின்.

By: Updated: April 3, 2019, 11:30:27 AM

dmk leader mk stalin : திமுக தலைவர் ஸ்டாலின் சாலைகளில் இயல்பாக நடந்துக் கொண்டே பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கும் விதம் பொதுமக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் தேர்தல் நாள் நெருங்கி விட்டது.  தேர்தல் நடைபெற இன்னும் 15 நாட்கள் மட்டுமே மிட்சம் உள்ள நிலையில் அரசியல் கட்சிகள்  பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றன. தங்கள் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் அவர்களை ஆதரித்து கட்சி தலைவர்கள் தொடர்ந்து பிரச்சாரத்திலும், பொதுக்கூட்டங்களில் பேசி வருகின்றனர்.

வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் ஸ்டைல் இப்போது மாறி விட்டது. சாலைகளில் நடந்துக் கொண்டே, மக்களுடன் பேசியவாறே, கடைகளில் டீ குடித்தப்படியே வாக்கு சேகரிப்பது தான் தேர்தல் களத்தில்  நியூ ட்ரெண்டாக பரவி வருகிறது.

இதற்கு முன்னோடி என்றால் அது திமுக தலைவர் ஸ்டாலின் தான். இவர் தொடங்கிய நமக்கு நாமே பயணம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. அந்த ஸ்டைலை இப்போதும் விடாமல் ஃபலோ செய்கிறார் ஸ்டாலின்.

நேற்றைய தினம், நீலகிரி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்ட மு.க.ஸ்டாலின் அன்னூர், அவிநாசி வழியாக திருப்பூர் சென்றார். அப்போது சாலைகளில் நடந்துக் கொண்டே பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

அதே போல், உழவர் சந்தையில் வியாபாரிகளிடமும் மக்களிடமும் அவர்களின் குறைகளை கேட்டப்படியே வாக்குச் சேகரித்தார். சிறுவர் சிறுமியர் உள்ளிட்ட ஏராளமானோர் ஸ்டாலினை கைகுலுக்கி வரவேற்றனர். பலர் ஸ்டாலினுடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள ஆர்வம் காட்டினர்.

தொடர்ந்து இப்பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் தேநீர் அருந்திய மு.க.ஸ்டாலின் அதனைத் தொடர்ந்து புறப்பட்டுச் சென்றார்.இந்த வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

அதுமட்டுமில்லை  தான் எந்த பகுதியில் தங்கினாலும் காலை எழுந்தவுடன் நடைப்பயிற்சி செல்வது ஸ்டாலின் வழக்கம். அப்படி நடைப்பயிற்சி செய்தவாறே மக்களிடன் பேசுவது, வாக்கு சேகரிப்பது, சைக்கிளிங் செல்வது என  தேர்தல் பிரச்சாரத்தில் தொடர்ந்து தனக்கென உண்டான தனி பாணியை கையாண்டு வருகிறார் திமுக தலைவர் ஸ்டாலின்.

Get all the Latest Tamil News and Election 2020 News in Tamil at Indian Express Tamil. You can also catch all the latest Lok Sabha Election 2019 Schedule by following us on Twitter and Facebook

Web Title:Dmk leader mk stalin election manifesto

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X