Advertisment

Election 2019: தேர்தலையொட்டி ரூ.2000 உதவித் தொகை திட்டம் நிறுத்திவைப்பு - தமிழக அரசு

AIADMK, DMK Campaign Live Updates: மக்களவை தேர்தலால் ரூ.2000 உதவித் தொகை கணக்கெடுக்கும் பணி நிறுத்திவைப்பு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
'நாசா' செல்லும் நாமக்கல் மாணவி அபிநயா: ரூ. 2 லட்சம் அறிவித்த முதல்வர்

Election 2019 AIADMK DMK Campaign Live Updates : தமிழக தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கிறது. தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று(மார்ச்.20) தனது தேர்தல் பிரச்சாரத்தை திருவாரூரில் இருந்து தொடங்கினார். திருவாரூர் சட்டசபை தொகுதி தி.மு.க. வேட்பாளர் பூண்டி கலைவாணன், நாகை நாடாளுமன்ற தொகுதி இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் செல்வராசு ஆகியோரை ஆதரித்து தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

Advertisment

அதேபோல், அதிமுக கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம், நேற்று தேனி நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் தனது மகன் ரவீந்திரநாத் குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

தொடர்ந்து அதிமுக, திமுகவின் தலைவர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளனர். இதுகுறித்த லைவ் அப்டேட்ஸ்களை உங்கள் ஐஇதமிழ் தளத்தில் அறிந்து கொள்ளலாம்.

Live Blog

DMK, ADMK Campaign Live Updates



























Highlights

    15:10 (IST)21 Mar 2019

    ரூ.2000 திட்டம் நிறுத்தி வைப்பு

    மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத் தேர்தலை முன்னிட்டு, ரூ.2000 உதவித் தொகை வழங்குதல் மற்றும் அதற்கான கணக்கெடுக்கும் பணி ஆகியவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 2 ஆயிரம் ரூபாய் நிதியுதவி திட்டத்துக்கு எதிரான வழக்கில் அரசு இந்த விளக்கத்தை அளித்துள்ளது.

    14:35 (IST)21 Mar 2019

    அதிமுக வேட்பு மனுத் தாக்கல்

    மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத் தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் நாளை பிற்பகல் வேட்பு மனுத் தாக்கல் செய்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    14:02 (IST)21 Mar 2019

    சென்னை ஐகோர்ட் தள்ளுபடி

    ஒரு கட்சிக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்தில் தோழமைக் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுவதை தடை செய்ய கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

    13:15 (IST)21 Mar 2019

    தேர்தல் தேதியை மாற்றவே முடியாது

    மதுரை சித்திரை திருவிழாவிற்காக தேர்தல் தேதியை மாற்ற முடியாது என தமிழக தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

    12:27 (IST)21 Mar 2019

    13.90 கோடி பறிமுதல்

    தமிழகத்தில் முழுவதும் இதுவரை 13.90 கோடி ரூபாய் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலுக்கு இதுவரை 30 பேரும், சட்டப்பேரவை இடைத் தேர்தலுக்கு 3 பேரும் என இதுவரை 33 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.

    11:43 (IST)21 Mar 2019

    தனி சின்னத்தில் போட்டியிடும் மதிமுக

    ஈரோடு மக்களவை தேர்தலில், மதிமுக தனி சின்னத்தில் போட்டியிடும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். வரும் 25ம் தேதி மதிமுக வேட்பாளர் வீட்டு மனுத் தாக்கல் செய்யும் போது, தேர்தல் அலுவலர் ஒதுக்கும் சின்னத்தில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    11:28 (IST)21 Mar 2019

    முதல்வர் தேர்தல் பிரச்சாரம்(மார்ச்.23)

    23 ம் தேதி - வேலூர் மாவட்டம்.

    காலை 9 மணி சேலம் கூட்ரோடு.

    காலை 9.30 மணி திருப்பத்தூர்.

    காலை 10 மணி ஆசிரியர் நகர்.

    காலை 10,30 மணி ஜோலார்பேட்டை.

    பகல் 11.30 மணி வாணியம்பாடி டவுன்.

    பகல் 11.40 மணி முதல் பகல் 1 மணிவரை  ஆம்பூர் டவுனில் 4 இடங்கள்.

    மாலை 4 மணி ஆம்பூர் பைபாஸ்.

    மாலை 5 மணி உமாராபாத்.

    மாலை 6 மணி பேரணாம்பட்டு.

    மாலை 7 மணி குடியாத்தம் பஜார்.

    இரவு 7.30 மணி கே.வி.குப்பம்.

    இரவு 8 மணி லத்தேரி.

    இரவு 8.30 மணி சித்தூர் பேருந்து நிலையம்.

    இரவு 9 மணி வேலூர் புது நகராட்சி.

    இரவு 9.30 மணி மண்டித்தெரு.

    11:07 (IST)21 Mar 2019

    நான் அதிமுகவுடன் இணையவில்லை

    'அ.தி.மு.க.வில் இணைப்பதற்காக தினகரனுடன் சமரசப் பேச்சு நடந்துவருவதாக மதுரை ஆதீனம் சொல்லியிருக்கும் கருத்து அடிப்படை ஆதாரமற்றது. அது உண்மையும் அல்ல.. அதற்கு அவசியமும் இல்லை!' என டிடிவி தினகரன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

     

    10:43 (IST)21 Mar 2019

    அதிமுகவில் டிடிவி தினகரன்?

    டிடிவி தினகரன் விரைவில் அதிமுகவில் இணைவார். அதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது என மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார். 

    10:25 (IST)21 Mar 2019

    முதல்வர் சுற்றுப்பயணம் விவரம் (மார்ச் 22)

    சேலம்

    22 ம்தேதி காலை 9 மணிக்கு சேலம் மாவட்டம்  கருமந்துறை ( செல்வ விநாயர்

    திருக்கோயில்).

    பகல் 12 மணிக்கு வாழப்பாடி.

    பகல் 1 மணிக்கு அயோத்தியாபட்டிணம்.

    தருமபுரி.

    மாலை 4 மணிக்கு தொப்பூர்.

    மாலை 5 மணிக்கு நல்லம்பள்ளி.

    மாலை 5.30 மணிக்கு தர்மபுரி டவுன்.

    மாலை 6.30 மணிக்கு பென்னாகரம்.

    மாலை 7.30 மணிக்கு பாப்பாரப்பட்டி.

    இரவு 8.30 மணிக்கு பாலக்கோடு.

    இரவு 9.15 க்கு காரிமங்கலம்.

    10:17 (IST)21 Mar 2019

    முதல்வர் அஞ்சலி

    இன்று காலை மாரடைப்பால் மரணம் அடைந்த சூலூர் தொகுதி எம்.எல்.ஏ கனகராஜ் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த முதல்வர் கோவை விரைகிறார்.

    10:07 (IST)21 Mar 2019

    திமுகவில் இணைந்த வி.பி.கலைராஜன்

    நேற்று மாலை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து நீக்கப்பட்ட தென்சென்னை மாவட்ட செயலாளர் வி பி கலைராஜன், திருச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

    09:24 (IST)21 Mar 2019

    'கனிமொழிக்கு ஓட்டு போடுங்க...ஐயோ சாரி, தமிழிசைக்கு போடுங்க'

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் சின்னப்பன் போட்டியிடுகிறார். நேற்று பரப்புரையில் ஈடுபட்ட அவர், தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிடும் கனிமொழிக்கு வாக்களியுங்கள் என தவறுதலாக கூறினார். இதனால் பரப்புரை கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட, தவறை உணர்ந்த சின்னப்பன், தூத்துக்குடியில் அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் போட்டியிடும் தமிழிசைக்கு தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள் என்றார்.

    09:19 (IST)21 Mar 2019

    சட்டப்பேரவையில் காலியிடம் 22

    சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவால் சட்டப்பேரவையில் எம்எல்ஏக்களின் காலியிடம் 22ஆக உயர்ந்துள்ளது.

    08:43 (IST)21 Mar 2019

    அதிமுக எம்.எல்.ஏ மரணம்

    அதிமுகவைச் சேர்ந்த சூலூர் எம்.எல்.ஏ. கனகராஜ் மாரடைப்பால் மரணம் அடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில், நேற்றைய நிலவரப்படி இரண்டு தேர்தலுக்கும் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 33-ஆக உயர்ந்துள்ளது.
    General Election
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment