மிஷன் சக்தி: அப்துல் கலாம் கனவை நிறைவேற்றுவதாக ராமநாதபுரத்தில் மோடி பேச்சு

Election 2019 live updates : நேற்றிரவு 10 மணியளவில், விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார்.

Election 2019 live updates : நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, பிரசாரம் மேற்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்துள்ளார். மதுரையில் தங்கியுள்ள அவர், தேனி மற்றும் ராமநாதபுரம் பகுதிகளில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் இன்று கலந்துகொள்கிறார்.

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தமிழகத்தில் சென்னை மற்றும் கோவையில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே கலந்துகொண்டார். இந்நிலையில், இன்று மீண்டும் பிரசாரம் செய்ய உள்ளார். இதற்காக கேரளாவிலிருந்து நேற்றிரவு 10 மணியளவில், விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார்.

அவரை துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், மதுரை தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யன் ஆகியோர் வரவேற்றனர். அங்கிருந்து போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்ட மோடி, பசுமலையில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளார். தேனியில் இன்று காலை 11 மணிக்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார்.

Election 2019 PM modi aiadmk dmk campaign live updates :

Live Blog

தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி இன்று  தேனி மற்றும் ராமநாதபுரம் தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதுக் குறித்து செய்திகளை  மற்ற மொழிகளிலும் படிக்க.. English |Bangla|

15:31 (IST)13 Apr 2019
tamilnadu by election : நடு விரலில் மை:

ஏப்ரல் 18ல் மக்களவை தேர்தலுக்கு வாக்களிப்பவர்கள், மே 19 ஆம் தேதி 4 தொகுதி இடைத்தேர்தலிலும் வாக்களிக்கும்  சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் 4 தொகுதிகள் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு நடு விரலில் மை வைக்கப்படும் என்று  தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

15:13 (IST)13 Apr 2019
general election 2019 : அரக்கோணத்தில் பரபரப்பு!

அரக்கோணம் நெமிலி அருகே வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக காங்கிரஸ். பிரமுகர் வினோபா, திமுக பிரமுகர் ரமேஷ் ஆகியோரிடம் இருந்து ரூ.2.04 லட்சம் பறிமுதல்  செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பணப் பட்டுவாடா செய்து கொண்டிருந்தபோது பறக்கும் படை அதிகாரி இருவரையும் மடக்கிப் பிடித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

14:16 (IST)13 Apr 2019
modi ramanathapuram campaign speech highlights : ராமநாதபுரம் தேர்தல் பிரச்சாரத்தில் மோடி பேச்சு ஹைலைட்ஸ்!

*முத்தலாக் முறை தடை செய்யப்பட்டதன் மூலம் இஸ்லாமிய பெண்களின் உரிமை மீட்கப்பட்டுள்ளது .  இஸ்லாமிய பெண்களுக்கு பாஜக அரசு உரிய உரிமையை கொண்டு வந்துள்ளது.

*காங்கிரஸ் ஆட்சியில் பயங்கரவாதிகள் தாக்கியபோது அமைதியாக இருந்தார்கள்.  இந்தியாவில் ஒரு தீவிரவாதியை கூட அனுமதிக்க முடியாது . நாட்டுக்காக உழைத்த தலைவர்களை போற்ற காங்கிரஸ் எதுவும் செய்ததில்லை.

*கூட்டாட்சி தத்துவத்தில் பாஜக வலிமையான நம்பிக்கை வைத்துள்ளது. காங்கிரசுக்கு வாக்களித்தால் அதிக வரி விதிப்புக்கு வழி வகுக்கும். சபரிமலை விவகாரத்தில் காங்கிரஸும், கம்யூனிஸ்ட் கட்சியும் கலாச்சாரத்தை அழிக்க நினைக்கின்றன. 

14:04 (IST)13 Apr 2019
modi ramanathapuram campaign speech :மோடி உரை!

அடுத்த 5 ஆண்டுகளில் துறைமுகங்களின் வளர்ச்சி இரட்டிப்பாக்கப்படும் . நாட்டின் அழிவு மனப்பான்மையில் எதிர் அணியினர் இருக்கின்றனர்.  மேம்பாடு தான் பாஜக கூட்டணியின் குறிக்கோளாக உள்ளது :  பிரச்சாரத்தில் மோடி

14:02 (IST)13 Apr 2019

இஸ்ரோ உதவியுடன் மீனவர்களுக்கு தொழில்நுட்ப கருவிகள் மற்றும் கடலில் மீனவர்களுக்கு உள்ளூர் மொழியிலேயே அறிவிப்பு வழங்கப்படும்.  இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.மோடியை வெறுக்கிறோம் என்ற பெயரில், எதிர்க்கட்சிகள் நாட்டையே வெறுக்கின்றன    :  மோடி 

14:01 (IST)13 Apr 2019
modi ramanathapuram campaign : மோடி சிறப்புரை!

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நீர் மேலாண்மைக்கு தனி அமைச்சகம், மீனவர்களுக்கான தனி அமைச்சகம் மற்றும் மீனவர்களுக்கும் கிஷான் கிரெடிட் கார்டு வழங்கப்படும் ,  பாஜகவின் தேர்தல் அறிக்கையில் நீர் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது : மோடி

14:00 (IST)13 Apr 2019
modi campaign : மோடி தேர்தல் பிரச்சாரம் !

முன் எப்போதும் இல்லாத அளவில் வறுமையை ஒழிக்க பாடுபடுகிறோம் .  சுகாதார துறையில் இந்தியா பெரும் வளர்ச்சியை அடைந்துள்ளது . ஆயுஷ்மான் திட்டம் மூலம் 50 கோடி இந்தியர்கள் பயனடைந்துள்ளனர் :   மோடி

13:58 (IST)13 Apr 2019
modi ramanathapuram rally - மோடி பிரச்சாரம்!

அப்துல் கலாம் இப்போது இருந்திருந்தால், மிஷன் சக்தி குறித்து மகிழ்ச்சி அடைந்திருப்பார். அப்துல்கலாம் கண்ட கனவுகளை நாம் நிறைவேற்றி கொண்டிருக்கிறோம் : மோடி

13:50 (IST)13 Apr 2019
modi ramanathapuram campaign live : மோடி பிரச்சாரம்!
13:49 (IST)13 Apr 2019
modi ramanathapuram campaign : மோடி பேச்சு.

ராமநவமி நாளன்றி இந்த புனித பூமிக்கு வந்ததற்கு மகிழ்ச்சி அடைகிறேன் : மோடி 

13:47 (IST)13 Apr 2019
modi in ramanathapuram : ராமநாதபுரத்தில் மோடி!

ராமநாதபுரத்தில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்திற்கு கலந்துக் கொள்ள மோடி விமானம் மூலம் வந்தார். 

13:04 (IST)13 Apr 2019
dmk candidates names : அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
13:03 (IST)13 Apr 2019
by election dmk candidates : திமுக வேட்பாளர்கள் பட்டியல்!

திருப்பரங்குன்றம், சூலூர் உள்ளிட்ட 4 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

சூலூர்- பொங்கலூர் நா.பழனிசாமி

அரவக்குறிச்சி- செந்தில் பாலாஜி

திருப்பரங்குன்றம்- பி.சரவணன்

ஒட்டப்பிடாரம்- எம்.சி.சண்முகையா

12:30 (IST)13 Apr 2019
modi theni campaign speech highlights : தேனி பிரச்சாரத்தில் மோடி பேச்சு ஹைலைட்ஸ்!

* இது எம்ஜிஆர், ஜெயலலிதா தொகுதி, இவர்களின் மண்ணில் காங்கிரஸ் வேட்பாளரால் ஒன்றும் செய்ய முடியாது.

*மத்திய அரசின் திட்டங்கள் மூலம் தமிழக விவசாயிகன் பயனடைந்து வருகின்றனர்

*தேச பாதுகாப்பை அரசியலாக்கி, ராணுவத்தினரை காங்கிரஸ் அவமதிக்கிறது. நமது எதிராளிகளின் ஊழல்கள் பற்றி நான் கணக்கில் வைத்திருக்கிறேன்.

*மக்களை திமுகவும், காங்கிரசும் தவறாக வழிநடத்த முயற்சி செய்கின்றன.பாஜக ஆட்சியில் நாடு அடைந்து வரும் வளர்ச்சியை காங்கிரஸ், திமுகவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

*கங்கையை போல் வைகையை தூய்மைப்படுத்த விரும்புகிறேன்

12:19 (IST)13 Apr 2019
modi blessed ops son : மோடியிடம் ஆசிர்வாதம்!

துணை முதல்வர் மகனும் தேனி வேட்பாளருமான ரவீந்திரநாத் குமார் மோடி காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார்.பிரதமர் மோடிக்கு பூங்கொத்து கொடுத்த துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார், மோடியின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார்#PMModi | #Theni | #RavindranathKumar | #ElectionswithThanthiTV pic.twitter.com/RSXUZbjriz— Thanthi TV (@ThanthiTV) 13 April 2019

12:15 (IST)13 Apr 2019
modi campaign speech : மோடி சூளுரை!

காங்கிரஸ் ஆட்சியில் இருந்த 60 ஆண்டுகளில் மக்களுக்கு செய்தது அநியாயமும், அநீதியும்தான்  மோடி சூளுரை. 

12:08 (IST)13 Apr 2019
modi theni campaign speech : தேனி பிரச்சாரத்தில் மோடி!

வாரிசு அரசியல், குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் :  மோடி

12:04 (IST)13 Apr 2019
modi campaign : ராகுல் காந்தி குறித்து மோடி!

ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் முன்மொழிந்ததை அவர்களின் கூட்டணி கட்சிகளே ஏற்கவில்லை . ஏனென்றால், காங். கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், பிரதமர் வேட்பாளராக துடித்துக் கொண்டிருக்கிறார்கள். 

12:03 (IST)13 Apr 2019
modi campaign speech: மோடி பிரச்சார பேச்சு!

நாட்டு மக்களை யாரும் முட்டாளாக்க விடாமல் நான் காவலாளியாக இருக்கிறேன்  பிரதமர் மோடி  பிரச்சாரத்தில் பேச்சு!

11:59 (IST)13 Apr 2019
modi speech in theni : மோடி உரை !

இலங்கை தமிழர்களின் வளர்ச்சிக்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டும் .  நாட்டின் பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்துகொள்ள நாம் தயாராக இல்லை :மோடி

11:56 (IST)13 Apr 2019
PM modi theni campaign speech : பிரதமர் மோடி கம்பீர முழுக்கம்!

நாளை நமதே; நாற்பதும் நமதே!  தேனி பிரச்சாரத்தில் பிரதமர் மோடி கம்பீர முழுக்கம். 

11:50 (IST)13 Apr 2019
PM modi campaign speech : பிரச்சாரத்தில் மோடி உரை!
11:49 (IST)13 Apr 2019
PM modi campaign : துணை முதல்வர் புகழாரம்!

நமது தேசத்தின் காவலர் பிரதமர் மோடி என்று துணை முதல்வர் பன்னீர் செல்வம் புகழாரம். 

11:47 (IST)13 Apr 2019
PM modi campaign : தேனியில் தொடங்கியது பிரச்சாரம்!

நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என நாடே எதிர்பார்க்கிறது என்று தேனி பிரச்சாரத்தில் தமிழக முதல்வர் பழனிடாமி பேசி வருகிறார். 

11:25 (IST)13 Apr 2019
PM modi campaign : தொண்டர்களை அழைத்த மோடி!

இன்று தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் நடைபெறும் பிஜேபி தேர்தல் பிரச்சாரத்தில் அனைவரும் கலந்துக் கொள்ளுமாறும் பிரதமர் மோடி ட்விட்டரில் அழைப்பு விடுத்துள்ளார்.

10:25 (IST)13 Apr 2019
election 2019 : தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை!

தமிழகத்தில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்களுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

10:03 (IST)13 Apr 2019
election 2019 : தபால் வாக்குப்பதிவு!

சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் அனைத்து காவலர்களுக்கும் இன்று தபால் வாக்குப்பதிவு  நடைப்பெற்று வருகிறது. 

09:31 (IST)13 Apr 2019
pmk campaign : பாமக வேட்பாளர் சாம்பால்!

மத்திய சென்னை பாமக வேட்பாளர் சாம்பால் மீது எழும்பூர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு  செய்யப்பட்டுள்ளது.  நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதலாக பிரசாரத்தில் ஈடுபட்டதாக தேர்தல் அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில்  இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

09:03 (IST)13 Apr 2019
PM modi campaign : மோடி பரப்புரை!

தேனியில் சரியாக 11 மணிக்கு பரப்புரையை  தொடங்குகிறார் பிரதர் மோடி. 

Election 2019 PM modi aiadmk dmk campaign live updates :

மதுரையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம், தேனிக்கு செல்கிறார். தேனி தொகுதி அதிமுக வேட்பாளரும், ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத் குமார் மற்றும் திண்டுக்கல், மதுரை, விருதுநகர் தொகுதி கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க உள்ளார்.

அதைத் தொடர்ந்து ராமநாதபுரம் செல்லும் பிரதமர் மோடி, பாஜக வேட்பாளர்கள் நயினார் நாகேந்திரன், ஹெச்.ராஜா, தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் கிருஷ்ணசாமி ஆகியோரை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார். இதையடுத்து, ஹெலிகாப்டர் மூலம் மதுரை வரும் பிரதமர், அங்கிருந்து விமானம் மூலம் பெங்களூரு செல்ல உள்ளார்.

read more.. கார்த்தி சிதம்பரம் - ஹெச் ராஜா மோதல் எப்படி? கள நிலவரம்

முன்னதாக, மோடியை வரவேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், 40 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும்,இடைத்தேர்தல் வேட்பாளர் பட்டியல் குறித்து விரைவில் அறிவிக்கபடும் என்றும் தெரிவித்தார்.

முன்னதாக, கேரள மாநிலத்தின் கோழிக்கோட்டில் நேற்று மாலை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பிரதமர், அமைதியின் நிலமான கேரளத்தில் அரசியல் வன்முறையை காங்கிரஸும், இடதுசாரிக் கட்சிகளும் கொண்டு வந்துள்ளதாக குற்றம்சாட்டினார்.

ஐக்கிய ஜனநாயக முன்னணி, இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சிகளால் கேரளாவின் கலாசாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கேரளா என்பது அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் நிலமாக உள்ளது. பொறுப்பற்ற கம்யூனிஸ்ட்கள் மற்றும் காங்கிரஸால், அரசியல் வன்முறை கலாசாரம் கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும் படிக்க.. 1,114 வாட்ஸ் ஆப் குரூப்களுக்கு அட்மினாக செயல்படும் பா.ஜ.க ஐ.டி பிரிவு தலைவர்!

மக்களுக்காக சேவையாற்றியதற்காக தேசப்பற்றுமிக்க பல்வேறு ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தொண்டர்கள் தாக்கப்பட்டும், கொல்லப்பட்டும் உள்ளனர் எனக் கூறினார்.அதனைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட்கள் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் பெயரளவில் மட்டுமே வேறுபட்டிருப்பதாகவும், மாநிலத்தை கொள்ளையடிப்பதில் இரு கூட்டணியும் ஒரே மாதிரியாக இருப்பதாகவும் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார்.

மேலும் படிக்க.. காங்கிரஸ் ஹீரோ.. பிஜேபி ஜீரோ! சேலத்தில் ஸ்டாலின் பரப்புரை

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close