விஜயகாந்த் ஆலோசனை: பியூஷ் கோயல் மூலமாக அதிமுக.விடம் கூடுதல் சீட் கேட்க முடிவு

அதிமுக அணியில் மற்ற அனைத்துக் கட்சிகளும் ‘செட்டில்’ ஆகிவிட்டாலும், தேமுதிக மட்டும் வழக்கம்போல போக்கு காட்டி வருகிறது.

Tamil Nadu News Today Live, Tamil Nadu News in Tamil Live
Tamil Nadu News Today Live, Tamil Nadu News in Tamil Live

election 2019 tamilnadu live updates: தேமுதிக.வின் கூட்டணி முடிவு இன்று தெரியும் என எதிர்பார்க்கப்பட்டது. கட்சியினருடன் ஆலோசனையில் ஈடுபட்ட விஜயகாந்த், எந்த முடிவும் எடுக்காமல் நிர்வாகிகளை அனுப்பி வைத்தார்.

மக்களவை தேர்தலுக்காக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை நிறைவு செய்துள்ள திமுக, அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகிறது. அதிமுக அணியில் மற்ற அனைத்துக் கட்சிகளும் ‘செட்டில்’ ஆகிவிட்டாலும், தேமுதிக மட்டும் வழக்கம்போல போக்கு காட்டி வருகிறது.

பாஜக தரப்பில் இருந்து தேமுதிக.வும் தங்கள் அணியில் இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள். கடந்த முறை தங்கள் அணியில் இருந்த கட்சிகளை முடிந்த அளவுக்கு இணக்கமாக எடுத்துச் செல்ல விரும்புகிறது பாஜக. அதனால்தான் அதிமுக.வும் பொறுமை காத்து வருவதாக கூறுகிறார்கள்.

அனல் பறக்கும் தேர்தல் களம்..உடனுக்குடன் உங்கள் பார்வைக்கு..

5:00 PM: தேமுதிக.வின் கூட்டணி முடிவு இன்று தெரியும் என எதிர்பார்க்கப்பட்டது. கட்சியினருடன் ஆலோசனையில் ஈடுபட்ட விஜயகாந்த், எந்த முடிவும் எடுக்காமல் நிர்வாகிகளை அனுப்பி வைத்தார்.

அடுத்தகட்டமாக பாஜக.வின் தமிழக பொறுப்பாளரான மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மூலமாகவே அதிமுக.விடம் பேச தேமுதிக தரப்பு முடிவு செய்திருக்கிறது. ‘5 சீட்களுக்கு நாளை ஓ.கே. ஆகும் வாய்ப்பு’ இருப்பதாக தேமுதிக வட்டாரத்தில் கூறுகிறார்கள்.

2. 30 PMதுரைமுருகன்  பதில்.

”என்னிடம் தனிப்பட்ட முறையில் பேச தேமுதிக நிர்வாகிகளுக்கு எந்த முகாந்திரமும் இல்லை. தேமுதிக நிர்வாகிகள் தங்களை காப்பாற்றிக் கொள்ள இப்போது மாற்றி பேசுகின்றன. அவங்கள பார்த்தா பாவம்மா இருக்கு” என்று கிண்டலாக பதில் அளித்துள்ளார்.

2.00 PM : எல்.கே.சுதீஷ் செய்தியாளர் சந்திப்பு.

”மக்களவை தேர்தலில் தேமுதிக கூட்டணி நிலைப்பாடு குறித்து 2 நாளில் அறிவிப்போம் . பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.  தொகுதிப் பங்கீடு விரைவில் அறிவிக்கப்படும். துரைமுருகனுடனான நேற்றைய சந்திப்பில் அரசியல் பேசப்படவில்லை.தனிப்பட்ட காரணங்களுக்காகவே திமுக பொருளாளர் துரைமுருகனை நேற்று சந்தித்தோம்.  அரசியல் காரணங்கள் இல்லை. ஒருகட்சி இன்னொரு கட்சியுடன் பேசக் கூடாதா? “ என்றும் கேள்வி எழுப்பினார்.

1.00 PM : தலைமை தேர்தல் அதிகாரி ட்வீஸ்ட்.

மக்களவை தேர்தலோடு இடைத்தேர்தல் வந்தால், வாக்குச்சாவடிகளில் இடைத்தேர்தலுக்கென தனியாக ஒரு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படும் என்று  தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

12.10 PM : தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம் .

மக்களவை தேர்தலில் 20 தொகுதிகளில் திமுக போட்டியிடும்  என்று தொண்டர்களுக்கு கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

12.00 PM : எம்பிக்கள், எம்எல்ஏக்கள் கூட்டம்.

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் மார்ச் 11ம் தேதி திமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

11. 30 AM :  ஸ்டாலின் ஆலோசனை. 

தேமுதிக நிர்வாகிகள் சந்தித்து பேசியது தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக பொருளாளர் துரைமுருகனுடன் அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனையில் ஈடுப்பட்டுள்ளார்.

10. 30  AM தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏ பார்த்தசாரதியும் சுதீஷ் வீட்டிற்கு வருகை தந்துள்ளார்.

10. 00  AM  :சுதீஷ், இளங்கோவன் சந்திப்பு

சென்னையில் தேமுதிக துணை செயலாளர் சுதீஷ் வீட்டிற்கு அவைத் தலைவர் இளங்கோவன் வருகை தந்துள்ளார். கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியில் இருக்கும் நிலையில் இளங்கோவன் வருகை தந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

9.00 AM: மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட 732 விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. சென்னையில் மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் விருப்ப மனுக்களை கமல்ஹாசன் பெற்றுக்கொண்டார்

நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 21 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கு பிப்ரவரி 25 ஆம் தேதியில் இருந்து விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்ட மனுக்கள் மார்ச் 1 ஆம் தேதியிலிருந்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் பெறப்படுகின்றன.

இன்று வரை விருப்ப மனுக்கள் பெறப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நாளை (8.3.19) மாலை 5 மணி வரை விருப்ப மனு பெறப்படும் என்று திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், விருதுநகரில் தென்மண்டல திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், அதிமுக ஆட்சிக்கும், பாஜக ஆட்சிக்கும் முற்றுப்புள்ளி வைக்க இந்த கூட்டம் ஒரு தொடக்க புள்ளியாக அமையும் என்றும், தமிழகத்தின் அவலநிலைக்கு முற்றுப்புள்ளி வைப்போம் எனவும் சூளுரைத்தார்.

திமுக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி என்ற பிரதமர் மோடியின் விமர்சனத்துக்கு பதில் அளித்த அவர், நாட்டுக்கு ஆபத்து வரும் போதெல்லாம் காங்கிரசுடன் திமுக கைகோர்ப்பதாக தெரிவித்தார். அதிமுகவை மிரட்டி அச்சுறுத்தி பாஜக அமைத்திருப்பது சந்தர்ப்பவாத கூட்டணியா, இல்லை, நாடு முன்னேற வேண்டி தங்கள் தலைமையில் அமைந்திருப்பது சந்தர்ப்பவாத கூட்டணியா என ஸ்டாலின் வினவினார்.

மேலும் படிக்க.. 22 தொகுதியில் சூரியன், 18 தொகுதியில் கூட்டணி சின்னம்- திமுக இறுதி கணக்கு இதுதான்

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மோடியா? லேடியா? என்ற பிரச்சாரம் தமிழகத்தில் அரங்கேறியதை சுட்டிக்காட்டிய ஸ்டாலின், பலமுறை மோடி சந்தித்தும் பாஜகவுடன் கூட்டணி அமைக்க ஜெயலலிதா மறுத்துவிட்டதாக கூறினார். பாஜக – பாமக – அதிமுக ஆகிய 3 கட்சிகளும், மதவாத-சாதியவாத-சந்தர்ப்பவாத ஊழல் கூட்டணியாக சேர்ந்திருக்கின்றன எனவும் அவர் விமர்சித்தார்.

கச்சத்தீவை மீட்க மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? தமிழக மீனவர்களை கைது செய்வதை இலங்கை ராணுவம் எப்போது நிறுத்தும் என அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்த ஸ்டாலின், இந்த கேள்விகளுக்கு பிரதமரால் பதில் சொல்ல முடியுமா எனவும் வினவினார்.

மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழகத்தின் பிரதான கட்சிகள், பொதுக்கூட்டங்களை தொடங்கியுள்ளதால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

Get the latest Tamil news and Election news here. You can also read all the Election news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Election 2019 tamilnadu live updates

Next Story
அதிமுக அணியில் இருந்து விலகி வருவதாக எல்.கே.சுதீஷ் பேசினார்: துரைமுருகன் பேட்டிTamil Nadu News Today Live, Tamil Nadu News in Tamil Live
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com