Advertisment

மம்தா பானர்ஜி பிரச்சாரம் செய்ய 24 மணி நேரம் தடை - தேர்தல் ஆணையம் உத்தரவு

தேர்தல் ஆணையம் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு 24 மணி நேரம் தேர்தல் பிரசாரம் செய்ய தடை விதித்துள்ளது.

author-image
WebDesk
New Update
campaigning ban on Mamata Banerjee, மம்தா பானர்ஜி, தேர்தல் பிரசாரம் செய்ய மம்தா பானர்ஜிக்கு தடை, Election Commission, தேர்தல் ஆணையம், மம்தா பானர்ஜிக்கு 24 மணி நேரம் பிரசாரம் செய்ய தடை, EC imposes 24 hour campaigning ban on mamta banerjee, west bengal assembly elections 2021

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெறுப்பு மற்றும் ஆத்திரமூட்டும் வகையில் பேசியதாக தேர்தல் ஆணையம் அவருக்கு 24 மணி நேரம் தேர்தல் பிரசாரம் செய்ய தடை விதித்துள்ளது.

Advertisment

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது மிகவும் வெறுப்பு மற்றும் ஆத்திரமூட்டும் கருத்துக்களுக்காக தேர்தல் ஆணையம் அவர் பிரசாரம் செய்ய 24 மணி நேரம் தடை விதித்துள்ளது. தேர்தல் அமைப்பு மம்தாவின் பேச்சு சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கு வழிவகுக்கும் வகையில் இருப்பதாக தெரிவித்துள்ளது. இன்று இரவு 8 மணி முதல் நாளை இரவு 8 மணி வரை மம்தா பானர்ஜி தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது என தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இந்த உத்தரவுக்கு எதிராக மம்தா பானர்ஜி செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திங்கள்கிழமை தேசிய குடிமக்கள் பதிவு (என்.ஆர்.சி) கூர்க்கா இன மக்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று வலியுறுத்தினார். மேலும், மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மலைப்பிரதேச மக்களை தவறாக வழிநடத்தியுள்ளதாக குற்றம் சாட்டினார். கலிம்பொங்கில் சாலைவழியாக பிரசாரம் செய்த பிறகு பொதுமக்களிடையே பேசிய அமித்ஷா, “பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் இருக்கும் வரை, கூர்க்கா இன மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று கூறினார். “என்.ஆர்.சி இன்னும் செயல்படுத்தப்படவில்லை. ஆனால், அது செயல்படுத்தப்படும்போது ஒரு கூர்க்கா இன மக்கள்கூட வெளியேறும்படி கேட்கப்படமாட்டாது” என்று அமித்ஷா கூறியதாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

பிரதம மந்திரி நரேந்திர மோடி, மேற்கு வங்க மாநில 5வது கட்ட தேர்தலுக்கு முன்னதாக மேற்கு வங்கத்தில் உள்ள பர்தாமன் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். ​​ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து வாக்குச் சாவடிகளில் மக்களைக் காக்கும் மத்தியப் படைகளை அவமதிக்க வேண்டாம் என்று முதல்வர் மம்தா பானர்ஜியிடம் கேட்டுக்கொண்டார். 4வது கட்ட வாக்குப்பதிவின்போது கூச் பெஹர் மாவட்டத்தில் 4 பேரை சுட்டுக் கொன்றதாக சிஐஎஸ்எஃப் மீது மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியதோடு இந்த சம்பவம் ஒரு இனப்படுகொலை என்று குறிப்பிட்டார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Election Commission West Bengal Assembly Elections 2021 Mamata Banerjee
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment