Advertisment

மேற்கு வங்கத்தில் பிரசார நேரத்தை குறைத்த தேர்தல் ஆணையம்!

பேரணிகளில் கலந்துகொள்பவர்களுக்கு, தங்கள் சொந்த செலவில் முகக்கவசங்கள் மற்றும் சானிட்டைஸர்களை வழங்குவதற்கு கட்சிகள் பொறுப்பேற்க வேண்டும்.

author-image
WebDesk
New Update
மேற்கு வங்கத்தில் பிரசார நேரத்தை குறைத்த தேர்தல் ஆணையம்!

Election News in Tamil : மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவை 8 கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டது. நான்கு கட்டத் தேர்தல் வாக்குப்பதிவுகள் நிறைவடைந்த நிலையில், இன்று ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாநிலத்தில், கொரோனா வைரஸ் பரவல் உச்சமடைந்திருக்கும் வேளையில், நேற்று தொடங்கி இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரை பேரணிகள், தெரு நாடகங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான பிரச்சாரங்களுக்கும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

Advertisment

மேலும், எஞ்சியுள்ள மூன்று கட்ட வாக்குப்பதிவு வரும் 22, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள நிலையில், இக்கட்டில் உள்ள பொது சுகாதார நிலைமையை கருத்தில் கொண்டு வாக்களிக்கும் நாளுக்கு முன், 48 மணி முதல் 72 மணி நேரம் வரை பிரச்சாரம் செய்வதற்கான தடை காலத்தையும் நீட்டித்து, மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி, அனைத்து கட்சி கூட்டத்தை நடத்திய பின்னர், வேட்பாளர்கள் மற்றும் பிரசாரங்களில் ஈடுபடும் அரசியல் கட்சித் தலைவர்கள் என அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிவது கட்டாயம் உள்ளிட்ட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்குமாறு கட்சிகளுக்கு வலியுறுத்ததினார். பெரிய அளவிலான பேரணிகளுக்குப் பதிலாக சிறிய கூட்டங்களை நடத்தவும் கட்சியினரிடையே கேட்டுக் கொண்டார்.

மேலும், தேர்தல் வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்குமாறு தங்கள் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்களுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியதுடன், அனைத்து வகையான விதி மீறல்களையும் கண்டிப்புடன் கையாளுமாறு அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது. மேலும், தங்கள் பேரணிகளிலும் கூட்டங்களிலும் கலந்துகொள்பவர்களுக்கு, தங்கள் சொந்த செலவில் முகக்கவசங்கள் மற்றும் சானிட்டைஸர்களை வழங்குவதற்கு பொறுப்பேற்க வேண்டும். இது, கட்சி அல்லது வேட்பாளரின் தேர்தல் செலவினங்களில் சேர்க்கப்படும். பெரிய அளவிலான மக்கள் கூட்டம் கூடும் பேரணிகளை ரத்து செய்யவும், தேவைப்பட்டால் தண்டனை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம், அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.

இதனிடையே, மமதா தலைமையிலான ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், கொரோனா சூழலை கருத்தில் கொண்டு அனைத்து கட்ட வாக்குப்பதிவினையும் ஒன்றாக இணைக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால், இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் ஐ.எஸ்.எஃப் ஆகியவற்றை உள்ளடக்கிய சஞ்சுக்தா மோர்ச்சா மற்றும் பாஜக என இரு அணியினரும், தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்கெடுப்பு அட்டவணையை ஆதரித்தன.

தேர்தல் பிரச்சாரத்தை மாலை 7 மணி முதல் 10 மணி வரை மட்டும் தேர்தல் ஆணையம் ஏன் தடை செய்தது என கட்சிகள் கேள்வி எழுப்பிய நிலையில், இந்தியன் என்ஸ்பிரஸிடம் பேசிய மேற்கு வங்க மாநிலத்தின் மூத்த தேர்தல் அதிகாரி ஒருவர், ‘நாங்கள் ஒரு சமநிலையில் செயல்பட எண்ணுகிறோம். முழுமையாக பிரச்சாரங்களுக்கு அனுமதி அளிக்காவிட்டால், மீதமுள்ள கட்டங்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அநியாயம் செய்ததாகி விடும். மேலும், அனுமதிக்கப்பட்ட நேரத்தில் பிரசாரத்தில் ஈடுபடலாம். அப்போது, அவர்கள் எந்தவொரு விதி மீறல்களையும் மேற்கொள்ளும் போது, அவற்றை பொறுத்துக்கொள்ள வேண்டாம் என்று நாங்கள் எங்கள் அதிகாரிகளுக்கு கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளோம்,’ என்றார்.

அனைத்து கட்சிகளையும் கூட்டி, தலைமை தேர்தல் அதிகாரி நடத்திய கூட்டத்தில், ஆளும் திரிணாமுல் சார்பாக கலந்துக் கொண்ட அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி, கடைசி மூன்று கட்டங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டிருந்தால், அது பல உயிர்களை காப்பாற்றியிருக்கும்" என்று கூறியுள்ளார். இருப்பினும், தேர்தல் ஆணையம் பிரச்சாரத்தை குறைக்க ஆதரவாக இல்லை என்றும் சாடியுள்ளார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பாக கூட்டத்தில் பங்கேற்ற மாநிலங்களவை எம்.பி. பிகாஷ் பட்டாச்சார்யா, ‘நாங்கள் ஏற்கனவே நான்கு கட்டங்களில் எங்களது பிரசாரங்களை முடித்துவிட்டோம். மீதமுள்ள கட்டங்களை இணைப்பது அல்லது தேர்தல் அட்டவணையை மாற்றுவதில் எங்களுக்கு எவ்வித் ஆட்சேபமும் இல்லை என அவர் தெரிவித்தார். பாஜக சார்பாக கலந்துக் கொண்ட ஸ்வப்பன் தாஸ்குப்தா, ‘தேர்தல் ஆணையம், எந்த முடிவை எடுத்தாலும் நாங்கள் பின்பற்றுவோம் என்று பாஜக உறுதியளிப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அக்கூட்டத்திற்கு பிறகு பேசிய தேர்தல் ஆணைய அதிகாரி, ‘இதுவரை வாக்களித்தமைக்கு நன்றி. இந்த நேரத்தில் பிரசார அட்டவணையை மாற்றுவதில் எந்த அர்த்தமும் இல்லை. தேர்தல் தொடக்கம் முதலே, ஆன்லைன் பிரசாரம் இருந்திருந்தால், நாங்கள் ஆட்சேபித்திருக்க மாட்டோம். தற்போது, 4 கட்ட பிரசாரம் முடிவடைந்த நிலையில், எஞ்சிய பிரசாரங்களும் நடைபெறட்டும். பிரச்சாரமும் ஒரு வேட்பாளரின் உரிமை என தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரிக்கு பாஜக எழுதிய கடிதத்தில், பிரச்சார உரிமையை தேர்தல் ஆணையம் பாதுகாத்துள்ளது. சமீபத்தில் பீகார், ஹைதராபாத் மாநகராட்சி, கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்கத்தின் முதல் நான்கு கட்டங்களில் முடிவடைந்த தேர்தல்கள், கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பதற்கான எந்தவொரு போக்கையும் வெளிப்படுத்தவில்லை, என குறிப்பிடப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Election Commission West Bengal Assembly Elections 2021 Mamata Banerjee
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment