Advertisment

தேர்தல் முடிவுகள் தாமதம் ஆவதால் மாநில அரசுகள் எதிர்கொள்ளும் சிக்கல்கள்

வாக்குப்பதிவு முடிந்த மாநிலங்களில் காபந்து அரசு பதவியில் இருப்பதால், தொற்றுநோய் பரவல் நெருக்கடி காலத்தில் முக்கிய முடிவுகளை மேற்கொள்ள முடியாத நிலை இருப்பதால் இனிவரும் தேர்தல்களில் ஓரிரு நாட்களில் தேர்தல் முடிவு வெளியிட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.

author-image
WebDesk
New Update
tamil nadu assembly elections, election results late will affect polled states, tamil nadu, puduchery, kerala,தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், புதுச்சேரி, கேரளா, அஸ்ஸாம், மேற்கு வங்கம், தேர்தல் முடிவுகள் தாமதம், assam, west bengal, tamil nadu states people

சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரம் 6ம் தேதி முடிவடைந்த நிலையில், மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு தேர்தல் முடுவுகள் வெளியாவதற்கு கிட்டத்தட்ட ஒரு மாத காலம் இடைவெளி உள்ளது. இதனால், வாக்குப்பதிவு முடிந்த மாநிலங்களில் காபந்து அரசு பதவியில் இருப்பதால், கொரோனா தொற்றுநோய் பரவல் நெருக்கடி காலத்தில் மாநில அரசில் முக்கிய முடிவுகளை மேற்கொள்ள முடியாத நிலை இருப்பதால் மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்துவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisment

இந்திய தேர்தல் ஆணையம் பிப்ரவரி 26ம் தேடி தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலை அறிவித்தது. அதன்படி, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய 3 மாநிலங்களுக்கு ஏப்ரல் 26ம் தேதி நடைபெற்றது. அஸ்ஸாம் மாநிலத்தில் மார்ச் 27, ஏப்ரல் 1, ஏப்ரல் 6 ஆகிய தேதிகளில் மூன்று கட்டமாக வாக்குப்படிவு நடைபெற்றது. மேற்கு வங்கம் மாநிலத்தில் தேர்தல் பாதுகாப்பு காரணங்களால் 8 கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்துவதாக அறிவிக்கப்பட்டு இதுவரை மார்ச் 27, ஏப்ரல் 1, ஏப்ரல் 6, ஏப்ரல் 10 ஆகிய தேதிகளில் 4 கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இதற்கு அடுத்து, ஏப்ரல் 17, ஏப்ரல் 22, ஏப்ரல் 26, ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் இன்னும் 4 கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அஸ்ஸாம் ஆகிய 4 மாநிலங்களுக்கும் வாக்குப்பதிவு முடிந்துவிட்ட நிலையில் மேற்கு வங்க மாநிலத்திற்கு மட்டும் இன்னும் 4 கட்ட வாக்குப்பதிவு நடைபெற மீதமிருக்கிறது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய 3 மாநிலங்களில் வாக்குப்பதிவு முடிந்து மே 2ம் தேதி வாக்கு எண்ணிகை நடத்தி தேர்தல் முடிவு வெளியாவதற்கு இந்த மாநிலங்கள் கிட்டத்தட்ட ஒரு மாதம் காத்திருக்க வேண்டியுள்ளடு. அதாவது 25 நாட்கள் காத்திருக்க வேண்டியுல்ளது. தேர்தல் விதிமுறைப்படி, ஒரு மாநிலத்தின் தேர்தல் முடிவு இன்னொரு தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் வாக்குப்பதிவு முடிந்த பிறகு எல்லா மாநிலங்களுக்கும் ஒரே நேரத்தில் வாக்கு எண்ணிக்கை நடத்தப்படுகிறது. இதனால், முன்னதாகவே வாக்குப்பதிவு முடிந்து காத்திருக்கும் மாநிலங்களில் காபந்து அரசு பதவியில் இருப்பதால் அம்மாநிலங்களில் முக்கிய முடிவுகள் மேற்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதோடு, தேவையில்லாத சர்ச்சைகளையும் விவாதங்களையும் உருவாக்கியுள்ளன.

தமிழகத்தில் தேர்தல் அறிவிப்பதற்கு 6 மாதங்களுக்கு முன்பே ஆளும் அதிமுகவும் எதிர்க்கட்சியான திமுகவும் தங்கள்பிரசாரங்களைத் தொடங்கிவிட்டன. வாக்குப்பதிவு முடிந்துவிட்ட நிலையில் தேர்தல் முடிவுக்காக அரசியல் கட்சிகளுக்கும் மட்டுமில்லாமல் பொதுமக்களும் 25 நாட்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

தேர்தல் அறிவிக்கப்பட்ட பிப்ரவரி 26ம் தேதி முதல் மே 2ம் தேதி தேர்தல் முடிவு வெளியாகும் நாள் வரை 3 மாதங்களுக்கு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இதனால், மாநிலங்களில் காபந்து அரசு பதவியில் உள்ளது. இந்த சூழலில்தான், கொரோனா வைரஸ் தொற்று பரவல் 2வது அலையால் வேகமாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் மாநில அரசுகள் தேர்தல் முடிவுகளுக்காக முக்கிய முடிவுகள் எடுக்க முடியாமலும் மக்கல் நலத்திட்டங்களை செயல்படுத்த முடியாத நிலையில் உள்ளனர்.

மேலும், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய தென் மாநிலங்கள் அரசியல் ரீதியாகவும் மொழி, கலாச்சார ரீதியாகவும் மேற்கு வங்கம் மாநிலத்துடன் முற்றிலும் வேறுபட்டுள்ள நிலையில், இதன்முடிவுகள் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டால், மேற்கு வங்கத் தேர்தலில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது கேள்விக்குறிதான்.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு முடிந்தபின் ஓரிரு நாட்களிலேயே தேர்தல் முடிவுகளை அறிவிப்பதை விட்டுவிட்டு இத்தனை நாட்கள் ஈ.வி.எம். இயந்திரங்களை பாதுகாப்பதால் என்பது மனிதவளம் விரையமாகிறது.

கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் போன்ற ஒரு நெருக்கடியான காலத்தில் மாநிலங்களில் மாநில அரசுகள் விரைவாக செயல்படுவதற்கும், மக்கள் நலத்திட்டங்கள் பெரிய இடைவெளி இல்லாமல் தொடர்ந்து செயல்படுத்துவதற்கும் இனி வரும் காலங்களில் விரைவாக வாக்குப்பதிவு நடத்தப்பட்டு ஓரிரு நாட்களிலேயே தேர்தல் முடிவுகள் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Assembly Election Kerala Assembly Elections 2021 West Bengal Assembly Elections 2021
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment