தேர்தல் நிதி பத்திரங்கள் தொடர்பான தகவல்களை சமர்பிக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் அதிரடி

வாக்காளர்கள் ஏன் தேர்தலுக்கான நிதி எங்கிருந்து வருகிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டும் - கே.கே. வேணுகோபால்

Electoral Bond Scheme :  தேர்தல் நடைபெற்று வருகின்ற நேரத்தில், தேர்தல் பத்திரத் திட்டத்திற்கு இடைக்காலத் தடை விதிக்கும் படி உச்ச நீதிமன்றத்தில் சி.பி.எம். உள்ளிட்ட கட்சிகள் மனுக்கள் கொடுத்துள்ளன. இது தொடர்பான விசாரணை இன்று நடைபெறுகிறாது. அட்டார்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் இது குறித்து பேசுகையில் “வெளிப்படைத் தன்மை என்பது மந்திரமாக முடியாது. வாக்காளர்கள் தங்களின் வேட்பாளர்கள் பற்றி அறிந்து கொள்ள அனைத்து விதமான உரிமையையும் பெற்றுள்ளனர். ஆனால் அவர்கள் ஏன் தேர்தலுக்கான நிதி எங்கிருந்து வருகிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Electoral Bond Scheme – பற்றி நீதிபதிகள் கேள்வி

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, மற்றும் சஞ்சீவ் கண்ணா அடங்கிய அமர்வு இந்த மனுக்களை இன்று விசாரிக்கிறது. அதற்கு முன்பு பேசிய போது, “இன்றைய நடைமுறையில், இது போன்ற விசயங்களை கருத்தில் கொள்ள வேண்டியது தான். ஆனால், ஒரு முக்கியமான பிரச்சனைக்கு ஆதரவு அளிக்காமல், இந்த திட்டத்தை நடைமுறைபடுத்த இயலாது.

மேலும் அவர் “கட்சிகளுக்கு நிதி அளிப்பதில் கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால் மாநில அளவில் இதற்கான நிதிகள் இதுவரை எதுவும் ஒதுக்கப்படவில்லை. நிதி அளிப்பவர்கள் பெயர்களை ரகசியமாக தான் வைக்க வேண்டியது உள்ளது. ஏன் என்றால், எந்த கட்சிகளுக்கு நிதி வழங்கவில்லையோ, அக்கட்சியினரால் நிதி வழங்கியவர்களுக்கு பிரச்சனைகள் ஏற்படலாம் என்று குறிப்பிட்டார்.

வங்கிகளுக்காகவது இந்த கொடையாளர்களின் பெயர்கள் தெரியுமா ?

நீதிபதி குப்தா “வாக்காளர்கள் தங்கள் வேட்பாளர்களுக்கு யார் நிதி அளிக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளக் கூடாதா? வாக்காளர்களின் மிக முக்கியமான உரிமை அது என்று கூறிய கருத்திற்கு கே.கே. வேணுகோபால் “வாக்காளர்கள் அவர்களின் வேட்பாளர்கள் பற்றி மற்றும் தெரிந்து கொண்டால் போதுமானது” என்று தன்னுடைய பதிலை பதிவு செய்திருக்கிறார்.

சிபிஎம் மற்றும் என்.ஜி.ஓ. அசோசியேசன் ஃபார் டெமாக்கிரெடிக் ரெஃபார்ம்ஸ் அமைப்பும், தேர்தல் பத்திரம் தொடர்பாக மனுக்கள் தாக்கல் செய்தனர். மேலும் இந்த திட்டத்திற்கான உத்தரவாதம் என்ன? இதனால் கருப்புப் பணம் முழுமையாக பயன்படுத்தப்படலாம் என்றும் மனுக்களில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் கே.கே. வேணுகோபாலிடம், தேர்தல் பத்திரங்களை வங்கிகளில் தாக்கல் செய்யும் போது, வங்கிகளுக்காகவது அந்த கொடையாளர்கள் பெயர் தெரியுமா என்று கேள்வி எழுப்பியது. ஆனால் அதற்கு அவரிடம் இருந்து முறையான பதில் இல்லை.

கொடையாளர்களின் பெயர்களும் அடையாளமும் முற்றிலும் தெரியாமல் போனால் அதனால் ஏற்படும் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும். கருப்புப் பணத்திற்கு எதிராக செயல்படுகிறோம் என்று கூறும் உங்களின் கொள்கைக்கு எதிராகவே இது இருக்கிறது என தலைமை நீதிபதி கூறினார்.

வங்கிகளில் இருந்து இந்த பத்திரங்கள் வாங்குவதற்கு கே.ஒய்.சி. படிவத்தினை பூர்த்தி செய்து தர வேண்டும் என்று கே.கே. வேணுகோபால் கூறினார். ஆனால் நீதிபதி கண்ணா அதற்கு, கே.ஒய்.சி பங்குகளை வாங்குபவர்களின் அடையாளத்தை மட்டுமே கண்டறிய உதவும். ஆனால் அவர்கள் தரும்/பெரும் பணம் மற்றும் பணவர்த்தனை நம்பிக்கைக்கு உரியதா ? என்றார். அதற்கு பதில் அளித்த வேணுகோபால், மக்கள் இந்த பத்திரங்களை தங்களின் வங்கிக் கணக்கில் இருக்கும் பணம் கொண்டே வாங்க இயலும் என்று விளக்கம் அளித்தார்.

இந்நிலையில் அனைத்து கட்சிகளும் வருகின்ற 30ம் தேதிக்குள் தங்களுக்கு அளிக்கப்பட்ட தேர்தல் நிதி பத்திரங்கள் தொடர்பான விபரங்கள் அனைத்தையும் சீலிடப்பட்ட கவரில் வைத்து தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று அதிரடியாக தீர்ப்பை வெளியிட்டுள்ளது.

Get all the Latest Tamil News and Election 2019 News at Indian Express Tamil. You can also catch all the latest Lok Sabha Election 2019 Schedule by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close