Advertisment

Tamil Nadu Latest News Updates : தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு - அரசாணை வெளியீடு

மோடியின் ஆட்சிக்கும், பாஜகவுக்கும் ஆதரவான வகையில் இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Latest News in Tamil Live

Latest News in Tamil Live

TN Latest News Updates: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை நேற்று சில ஊடகத்துறைகள் வெளியிட்டன. ரிப்பப்ளிக், ஆஜ்தக், என்.டி.டி.வி, டைம்ஸ் நவ் போன்ற ஊடகங்கள் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பு முடிவுகளை பல தலைவர்கள் வரவேற்றும், எதிர்த்தும், நம்பிக்கை இல்லை என்றும் தங்களின் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

Advertisment

மேலும் படிக்க : Tamil Nadu Lok Sabha Election 2019 Exit Poll: தமிழகத்தில் பெரும்பான்மை பெறும் திமுக… கருத்துக் கணிப்புகளின் துல்லிய விபரம் இங்கே

Live Blog

கருத்துக் கணிப்பு முடிவுகள் பற்றி தலைவர்களின் கருத்துகள் என்ன?



























Highlights

    18:07 (IST)20 May 2019

    அகவிலைப்படி 3% உயர்த்தி உத்தரவு

    நேற்றுடன் தேர்தல் முடிவடைந்ததால், நடத்தை விதிமுறைகள் விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில், தமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம் அகவிலைப்படி உயர்த்தி தமிழக அரசு இன்று அரசாணை பிறப்பித்துள்ளது.

    17:04 (IST)20 May 2019

    டெல்லி விரையும் ஓ.பி.எஸ்.

    பாஜக கூட்டணி கட்சிகளுக்கு அமித் ஷா நாளைக்கு(மே.21) டெல்லியில் விருந்து அளிக்கும் நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார். இந்நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஒருநாள் முன்னதாக இன்று(மே.20) இரவே டெல்லி செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    16:45 (IST)20 May 2019

    தலைமை செயலகத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல்

    சென்னை தலைமை செயலகத்துக்கு மர்ம நபர்கள் திடீர் வெடிகுண்டு மிரட்டல். தேர்தல் அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், வந்த கடிதத்தால் பதற்றம். தலைமை செயலகத்தை சுற்றிலும் போலீஸ் குவிப்பு. மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை.

    16:43 (IST)20 May 2019

    வெடிகுண்டு மிரட்டல்

    தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ அலுவலகத்துக்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    15:49 (IST)20 May 2019

    பாஜக கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம்

    நாளை டெல்லியில் நடைபெறும் தேசிய ஜனநாய கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக்  கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

    14:25 (IST)20 May 2019

    கருத்துக் கணிப்பு முடிவுகளை நம்பவில்லை... மூன்று நாட்கள் காத்திருக்கலாம் - முக ஸ்டாலின்

    திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். திமுகவிற்கு சாதமாக கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியதை குறித்து கேள்வி எழுப்பிய போது, திமுக பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளிவந்தாலும் கூட நான் மூன்று நாட்கள் காத்திருந்து மக்களின் மனநிலையை அறிந்து கொள்கின்றேன். எனக்கு இது போன்ற கருத்துக் கணிப்பு முடிவுகளில் நம்பிக்கை இல்லை என்று அவர் கூறியுள்ளார். 

    12:39 (IST)20 May 2019

    கருத்துக் கணிப்பு முடிவுகள் தேர்தல் முடிவுகள் இல்லை

    கருத்துக் கணிப்பு முடிவுகள் அனைத்தும் தேர்தல் முடிவுகள் இல்லை.  இதற்கு 2004,2009, மற்றும் 2014ம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தல் கருத்துக் கணிப்புகளும், வெளியான தேர்தல் முடிவுகளுமே உதாரணம். 

    இது தொடர்பான அனைத்து செய்திகளையும் படிக்க

    12:12 (IST)20 May 2019

    Nathuram Godse Controversial Remark : நிபந்தனைகளுடன் முன் ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

    கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று அரவக்குறிச்சி பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் ”சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி நாதுராம் கோட்ஸே என்றும், அவர் ஒரு இந்து என்றும் கூறினார்”. இவரின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பலத்த எதிர்ப்புகள் நிலவின. சிலர் வழக்குகள் பதிவு செய்தன. முன் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார் கமல்ஹாசன்.

    இன்று கமலுக்கு நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.

    12:06 (IST)20 May 2019

    TMC Chief Reacted against Exit Polls Result

    தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளில் எனக்கு நம்பிக்கை இல்லை என்று நேற்று மம்தா  பானர்ஜி தன்னுடைய கருத்தினை தெரிவித்துள்ளார். மேலும் இதனை காரணமாக வைத்து ஆயிரக்கணக்கான மின்னணு வாக்குப்பதிவு  இயந்திரங்களை மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் ஒன்றிணைந்து இந்த போரில் போட்டியிடுவோம் என்றும் கூறியுள்ளார். 

    11:57 (IST)20 May 2019

    கருத்துக் கணிப்புகள் எல்லாம் சரியாக இருப்பதில்லை - கே. பாலகிருஷ்ணன்

    பாஜக அதிக இடங்களை கைப்பற்றும் என்று தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகள் அறிவிக்கின்றன. ஆனால் பாஜகவினர் ஆட்சியில் அந்த அளவிற்கு வளர்ச்சி அடையவில்லை என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

    11:54 (IST)20 May 2019

    வெங்கைய்யா நாயுடுவின் கருத்து

    ஆந்திர மாநிலம் குண்டூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசினார் வெங்கைய்யா நாயுடு. அப்போது அவர், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் தேர்தல் முடிவுகள் இல்லை என்று கூறியுள்ளார். மேலும் சமீபகாலமாக அரசியல் நாகரீகம் குறைந்து வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    11:31 (IST)20 May 2019

    பாஜக தலைவர் வானதி ஸ்ரீநீவாசனின் கருத்து

    50 வருட இந்திய வரலாற்றில் முதல் முறையாக தொடர்ந்து இரண்டாம் முறை பெரும்பான்மை பெறவிருக்கும் மோடி அரசு! கருத்துக்கணிப்பு முடிவுகள் ! - கதிர் https://t.co/GkPStxZKfa

    11:26 (IST)20 May 2019

    KS Alagiri's Reaction on Exit Polls : தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து

    கருத்துக் கணிப்பை விட மக்களின் கருத்தைத்தான் நாங்கள் மிகவும் முக்கியமானதாக கருதுகின்றோம். கடந்த நான்கு தேர்தல்களிலும் கருத்துக் கணிப்புகள் வெளியாகின. ஆனால் அதன் முடிவுகள் படி தேர்தல் முடிவுகள் இல்லை என்று தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு பேட்டியளித்தார் கே.எஸ்.அழகிரி

    நேற்று வெளியான கருத்துக் கணிப்பு முடிவுகள் மீது பெரிதும் நம்பிக்கை இல்லை என்று மேற்கு வங்க முதல்வர் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி அறிவித்திருந்தார்.

    மேலும் படிக்க : வெற்றியை உறுதி செய்யும் உத்திரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களின் கருத்துக் கணிப்பு முடிவுகள் என்ன?

    General Election
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment