பிரதமர் வேட்பாளராகவே களம் இறங்கும் முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன்

நாடெங்கும் அவர் கட்சி சார்பில் 35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள்.

Former Madras high court judge CS Karnan : சென்னை மற்றும் கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியவர் சி.எஸ்.கர்ணன். உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் என ஒவ்வொருவர் குறித்தும் புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து அவர் மீது அவமதிப்பு வழக்கு தொடுத்தது.

Former Madras high court judge CS Karnan

ஆனால் அவர் விசாரணைக்கு ஒத்துழைக்காததால் கைது செய்யப்பட்டார். 2017ம் ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட அவரை 6 மாதம் கழித்து விடுவித்தது நீதிமன்றம்.

இந்நிலையில் கடந்த வருடம் ஆண்டி கரப்ஷன் டைனமிக் பார்ட்டி என்ற பெயரில் கட்சி ஒன்றை துவங்கினார். நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட இருப்பதாக அறிவித்தார்.

மத்திய சென்னையில் போட்டியிட இருக்கும் அவர், தன்னை பிரதமர் வேட்பாளராக அறிவித்துக் கொண்டார்.  நாடெங்கும் அவர் கட்சி சார்பில் 35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள்.

மேலும் படிக்க : இந்த வேட்பாளர்களின் சொத்து மதிப்புகள் எவ்வளவு தெரியுமா ?

Get all the Latest Tamil News and Election 2019 News at Indian Express Tamil. You can also catch all the latest Lok Sabha Election 2019 Schedule by following us on Twitter and Facebook

×Close
×Close